இலங்கை

திருகோணமலையில் சிசு மரணம்!

  • February 19, 2026
  • 0 Comments

திருகோணமலை உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 21 நாள் பிறந்த சிசுவொன்று இன்று (19) உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்த தாய் இன்று அதிகாலை 4.00 மணியளவில் பிள்ளைக்கு பால் கொடுத்துவிட்டு தூங்குவதற்கு போட்டிருந்த நிலையில் காலையில் மயக்கமுற்ற நிலையில் காணப்பட்டதாகவும் இதனை அடுத்து வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது. இவ்வாறு உயிரிழந்த சிசு அர்சாத் ஆதி (21நாள்) அண்ணா வீதி அன்புவழிபுரம் திருகோணமலை பகுதியைச் சேர்ந்தவர் எனவும் தெரிய வந்துள்ளது. உயிரிழந்த சிசுவின் சடலம் […]

அரசியல் இலங்கை செய்தி

“புலிகள் சரணடைவு”: பொன்சேகா வெளியிட்ட கருத்துக்கு நாமல் பதிலடி!

  • February 19, 2026
  • 0 Comments

“ நாம் தமிழ் மக்களுக்கு எதிராக போர் தொடுக்கவில்லை. பொன்சேகா கூறும் விடயம் புதிய தகவல் அல்ல.” – என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் SLPP தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச Namal Rajapaksa தெரிவித்தார். முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகா Field Marshal Sarath Fonseka கொழும்பில் நேற்று (18) விசேட ஊடக சந்திப்பொன்றை நடத்தினார். இறுதிப் போர் தொடர்பில் சில சர்ச்சைக்குரிய தகவல்களையும் வெளியிட்டார் இதன்போது கருத்து வெளியிட்ட சரத் […]

உலகம் முக்கிய செய்திகள்

ஈரானை சூழ்ந்த போர் மேகம் : இந்த வாரத்திலேயே தாக்குதல் நடத்தப்படலாம் எனக் கணிப்பு!

  • February 19, 2026
  • 0 Comments

ஈரானுக்கு எதிராக இராணுவத் தாக்குதல்களை நடத்த அமெரிக்கா பரிசீலித்து வருவதாகக் கூறப்படுகிறது. தெஹ்ரான் ஒரு ஒப்பந்தத்திற்கு ஒப்புக் கொள்ள வேண்டும் என்று கடுமையாக எச்சரித்துள்ளது. இருப்பினும் ஈரான் அதற்கு இணங்க மறுக்கிறது. இதன்காரணமாக போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஈரான் ஒரு புரிதல் எட்டப்பட்டதாகக் கூறிய போதிலும், ஈரானின் அணுசக்தி திட்டம் குறித்து இந்த வாரம் ஜெனீவாவில் நடந்த தீவிரப் பேச்சுவார்த்தைகள் எந்த முன்னேற்றமும் இல்லாமல் முடிவடைந்தன. இதற்கிடையே அமெரிக்கா மத்திய கிழக்கில் போர்க்கப்பல்கள், டேங்கர்கள் மற்றும் […]

இலங்கை செய்தி

வழக்குத் தாமதங்களை நிவர்த்தி செய்ய 07 புதிய நீதிமன்றங்கள்

  • February 19, 2026
  • 0 Comments

நீதிமன்ற வழக்குகளில் ஏற்படும் தாமதங்களைக் குறைக்கும் வகையில் 07 புதிய நீதிமன்றங்களை நிறுவுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷண நாணயக்கார தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (19) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார். இங்கு மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர், “தற்போது நீதிமன்றங்களில் சுமார் 11 இலட்சம் வழக்குகள் தேங்கிக் கிடக்கின்றன. இது கடந்த 15 வருடங்களாக நிலவி வரும் […]

உலகம் செய்தி

வொஷிங்டனில் அமைதி சபைக்கான முதல் உச்சிமாநாடு

  • February 19, 2026
  • 0 Comments

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது அமைதி சபைக்கான முதல் உச்சிமாநாட்டை வொஷிங்டன், டி.சி.யில் நடத்த உள்ளார். இந்த சபை, காசாவில் அண்மையில் மீறப்பட்ட போர் நிறுத்த முயற்சிகளை மேற்பார்வையிடும் வகையில் அமைவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. குழுவில் கலந்து கொள்வோர் அவரது திட்டத்திற்கும் நோக்குகளுக்கும் ஆதரவாக இருப்பார்கள் என ட்ரம்ப் நம்புகிறார். இந்த அமைப்பு, கடந்த மூன்று மாதங்களாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அங்கீகாரம் பெற்றுள்ளது. இரண்டு ஆண்டு காலத்திற்கு வழங்கப்பட்ட சபை, பலஸ்தீன நிலப்பகுதியில் […]

ஐரோப்பா

போர் விவகாரம் : அமெரிக்காவை குற்றஞ்சாட்டும் ஜெலென்ஸ்கி!

  • February 19, 2026
  • 0 Comments

போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக அமெரிக்கா கெய்வ் மீது தேவையற்ற அழுத்தம் கொடுப்பதாக வோலோடிமிர் ஜெலென்ஸ்கி ( Volodymyr Zelensky) குற்றம் சாட்டியதை அடுத்து, வெள்ளை மாளிகை அவரை விமர்சித்துள்ளது. ஜெனீவாவில் முத்தரப்பு பேச்சுவார்த்தைகளுக்கு முன்னதாக, உக்ரைன் சமரசம் செய்ய வேண்டும் என்று ட்ரம்ப் வலியுறுத்தியது நியாயமற்றது’ என்று ஜெலென்ஸ்கி கூறினார். இந்நிலையில் இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் கரோலின் லீவிட் ( Karoline Leavitt), ரஷ்யர்கள், உக்ரேனியர்கள் மற்றும் அமெரிக்க வரி […]

இலங்கை செய்தி

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறிய 22 இந்திய மீனவர்கள் கைது!

  • February 19, 2026
  • 0 Comments

இலங்கைக் கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து கடற்றொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 22 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நான்கு படகுகளையும் இலங்கை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். யாழ். நெடுந்தீவு மற்றும் மன்னார் ஆகிய கடல் பகுதிகளில் நேற்றைய தினம் முன்னெடுக்கப்பட்ட விசேட ரோந்து நடவடிக்கைகளின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டனர் என்று கடற்படை தெரிவித்துள்ளது. நெடுந்தீவு கடற்பரப்பில் இரண்டு படகுகளில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட 12 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் மடக்கிப் பிடிக்கப்பட்டனர். இவர்களிடமிருந்து இரண்டு படகுகளும் கடற்படையினரால் […]

இந்தியா செய்தி

நிதி மோசடி வழக்கில் அனில் அம்பானிக்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன்

  • February 19, 2026
  • 0 Comments

ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் உட்பட அனில் அம்பானியின் பல்வேறு நிறுவனங்கள் வங்கிகளில் கடன் பெற்று திரும்பச் செலுத்தாதது, கடன் பணத்தில் முறைகேடாக வெளிநாடுகளில் சொத்துகளை வாங்கியமை உள்ளிட்ட நிதி மோசடி குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. இதுதொடர்பில் அனில் அம்பானி குடும்பத்தினா் மற்றும் நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் சிலா் மீது அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்துள்ளது. மேலும், உச்ச நீதிமன்றிலும் வழக்கு நிலுவையில் உள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. அனில் அம்பானி குழுமத்திற்குச் சொந்தமான 12,000 கோடி ரூபா மதிப்புள்ள […]

இன்றைய முக்கிய செய்திகள் ஐரோப்பா செய்தி

அதிரடியாக கைது செய்யப்பட்ட மன்னர் சார்லஸின் சகோதரர் ஆண்ட்ரூ

  • February 19, 2026
  • 0 Comments

பிரித்தானிய மன்னர் சார்லஸின் சகோதரர், ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன்-வின்ட்சர், பொது அலுவலகத்தில் முறைகேடு செய்ததாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக இன்று வியாழக்கிழமை பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். நோர்போக் மாநிலம் சாண்ட்ரிங்ஹாம் தோட்டத்தில் உள்ள ஆண்ட்ரூவின் வீட்டில் தேம்ஸ் பொலிஸார் அவரை கைது செய்தனர். அடையாளம் தெரியாத பொலிஸ் வாகனங்கள் மற்றும் சாதாரண உடையில் வருகை தந்த அதிகாரிகள் அவரது வீட்டின் அருகே இருப்பதையும் புகைப்படங்களில் காண முடிகிறது. முன்னர் பிரித்தானிய வர்த்தக தூதராக பணியாற்றிய ஆண்ட்ரூ, முக்கிய அரசாங்கத் […]

இலங்கை

இலங்கையில் வேகமாக பரவிவரும் ரேபிஸ் நோய் : பூனை வளர்ப்பவர்களுக்கு எச்சரிக்கை!

  • February 19, 2026
  • 0 Comments

இலங்கையில் பூனைகள் மூலம் ரேபிஸ் தொற்று பரவுவதில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டு பதிவான பெரும்பாலான ரேபிஸ் தொற்றுகள் தெருநாய்களால் அல்ல, மாறாக வீடுகளில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகளான பூனைகளால்  ஏற்பட்டதாக தரவுகள் வெளிப்படுத்தியுள்ளன. இதனால் பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். ஆபத்தான நோயாக கருதப்படும் ரேபிஸ் நோய்,  நாய்கள், பூனைகள், நரிகள், அணில்கள், வௌவால்கள், கீரிகள், கால்நடைகள் மற்றும் குதிரைகள் உள்ளிட்ட பாதிக்கப்பட்ட விலங்குகளின் கடி அல்லது கீறல்கள் […]

error: Content is protected !!