ஆஸ்திரேலியாவில் பறந்துகொண்டிருந்த விமானத்தில் ஏற்பட்ட விபரீதம்
பறந்துகொண்டிருந்த விமானத்தில் பெண்கள் உட்பட ஒரு குழுவினருக்கு இடையில் ஏற்பட்ட மோதல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, விமானம் திரும்பி வந்ததுடன், நால்வர் கைது செய்யப்பட்ட சம்பவம் ஆஸ்திரேலியாவில் இடம்பெற்றுள்ளது. குயின்ஸ்லாந்து மாநிலத்தின் கெய்ன்ஸ் நகரிலிருந்து, அவுஸ்திரேலியாவின் வட பிராந்தியத்தை நோக்கி கடந்த வியாழக்கிழமை (20) பறந்துகொண்டிருந்த விமானத்தில் இம்மோதல் இடம்பெற்றுள்ளது. இதன்போது பதிவு செய்யப்பட்ட வீடியோவும் இணையத்தில் வெளியாகியுள்ளது. மற்றொரு பயணியை தாக்குவதற்காக பயணியொருவர் போத்தலொன்றை ஏந்தியிருந்த காட்சியும் அவ்வீடியோவில் பதிவாகியுள்ளது. ஆஸ்திரேலிய சமஷ்டி பொலிஸ் பேச்சாளர் […]













