ஆசியா

படுக்கைக்கு அடியில் கிடந்த சடலம்… ஹோட்டல் அறையில் சுற்றுலா பயணியை நடுங்கவைத்த சம்பவம் !

  • May 4, 2023
  • 0 Comments

சீன நாட்டவர் ஒருவர் திபெத்தில் சுற்றுலா சென்ற நிலையில், அவர் தங்கியிருந்த ஹொட்டல் அறையில் துர்நாற்றம் வீசுவதாக புகார் அளித்துள்ளார்.சுற்றுலா பயணியின் புகாரை அடுத்து அந்த ஹொட்டல் நிர்வாகம் முன்னெடுத்த சோதனையில், படுக்கையின் அடியில் சடலம் ஒன்றை கண்டெடுத்துள்ளனர். இந்த விவகாரம் தற்போது கொலை வழக்கு விசாரணையை தூண்டியுள்ளது. ஏப்ரல் 21ம் திகதி லாசாவில் உள்ள ஹொட்டல் ஒன்றிலேயே குறித்த சம்பவம் நடந்துள்ளது. ஏப்ரல் 20ம் திகதி தமது நண்பர்களுடன் லாசா பகுதிக்கு சுற்றுலா சென்ற அந்த […]

செய்தி தமிழ்நாடு

மழை நீரில் அடித்து வரப்பட்ட வெள்ளை நாகம்

  • May 4, 2023
  • 0 Comments

கோவையில் நேற்று முன் தினம் பெய்த கோடை மழையால் போத்தனூர் சுற்றுவட்டார பகுதிகளில் மழை நீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது. இந்நிலையில் குறிச்சி பகுதியில் உள்ள குடியிருப்பு அருகே புகுந்த மழை நீரில் வெள்ளை நாகம் ஒன்று அடித்து வரப்பட்டது. இதனை கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக பாம்பு பிடி தன்னார்வ அமைப்பிற்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த அவர்கள் மழை நீரில் இருந்த 3.5 அடி நீளமுள்ள வெள்ளை நாகத்தை பத்திரமாக மீட்டனர். பிறகு கோவை […]

மத்திய கிழக்கு

எகிப்தில் லொரியின் பின்னால் மோதிய பஸ் – 14 பேர் பலி

  • May 4, 2023
  • 0 Comments

எகிப்து நாட்டின் எல் வாடி எல் ஹிடிட் மாகாணத்தில் இருந்து நேற்று இரவு தலைநகர் கெய்ரோ நோக்கி பஸ் சென்றுகொண்டிருந்தது. அந்த பஸ்சில் 45க்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்தனர். இரவு நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தபோது சாலையின் முன்னே மெதுவாக சென்ற லொரி மீது பஸ் வேகமாக மோதியது. இந்த கோர விபத்தில் பஸ்சில் பயணம் செய்த 14 பேர் உயிரிழந்தனர். மேலும் 25 பேர் படுகாயமடைந்தனர். இது குறித்து தகவலறிந்த பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயமடைந்தவர்களை […]

இலங்கை

கடன் மறுசீரமைப்பு திட்டத்தை இம்மாதத்தில் அறிவிக்க திட்டம்!

  • May 4, 2023
  • 0 Comments

நாட்டின் கடனை மறுசீரமைப்பது தொடர்பான திட்ட வரைவு இந்த மாதத்திற்குள் அறிவிக்கப்படும் என இலங்கையின் நிதி இராஜாங்க அமைச்சர் கலாநிதி ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். முன்னதாக ஏப்ரல் மாதத்தில் கடன் மறுசீரமைப்பு திட்டத்தை அறிவிப்பது மற்றும் கடன் வழங்குநர்களுடன் பேச்சுக்களை முன்னெடுக்க அரசாங்கம் தீர்மானித்திருந்தது. இருப்பினும் கடன் மறுசீரமைப்பு திட்டத்தை முதலீட்டாளர்களுக்கு வெளியிடுவதை மே மாத நடுப்பகுதிக்கு பின்தள்ளியுள்ளது இலங்கை அரசாங்கம்.

செய்தி தமிழ்நாடு

வனவிலங்குகளின் தண்ணீர் தேவைக்காக தொட்டியில் நீர் நிரப்பப்படுகிறது

  • May 4, 2023
  • 0 Comments

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் வனப்பகுதிகளில் உள்ள நீர் நிலைகள் கோடை வெப்பத்தால் தண்ணீரின்றி வறண்டுள்ளது. வன விலங்குகளின் குடிநீர்த் தேவைக்காக டேங்கர்களில் தண்ணீர் கொண்டு சென்று வனப்பகுதிகளில் உள்ள தண்ணீர் தொட்டிகளை நிரப்பும் பணிகளை வனத்துறை தொடங்கியுள்ளது. திருப்போரூரில் 5,350 ஏக்கர் பரப்பளவில் வனப்பகுதிகள் அமைந்துள்ளன. மலைகளின் இடையே உள்ள வனப்பகுதிகளில் மான்இனங்கள், கழுதைப் புலி,நரி,மயில்,முயல் உட்பட பல்வேறு விதமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இந்நிலையில்,கோடைக்காலம் துவங்கியுள்ளதால் கிராமப்புற பகுதிகள் மற்றும் வனப்பகுதிகளில் உள்ள நீர்நிலைகள் வறண்டு […]

வட அமெரிக்கா

சீனாவிலிருந்து கனடாவிற்கு வந்த பெட்டிக்குள் தெரிந்த கண்கள்; அதிர்ச்சியடைந்த அதிகாரிகள்

  • May 4, 2023
  • 0 Comments

சீனாவிலிருந்து அனுப்பி வைக்கப்பட்ட பெட்டியொன்றில் பூனையொன்றை கனடிய எல்லைப் பாதுகாப்பு அதிகாரிகள் மீட்டுள்ளனர். வான்கூவார் ரிச்மன்ட்டின் பிரதான தபால் நிலைய பொதியிடல் பகுதிக்கு கொண்டு வரப்பட்ட பெட்டியில் இந்த பூனை இருந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது. பெட்டியிலிருந்து துளையின் ஊடாக கண்களை மட்டும் பார்த்த அதிகாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.அதன் பின்னர் பெட்டியை திறந்த போது அதில் பூனையொன்று உயிருடன் இருப்பதனை அவதானித்துள்ளனர். இந்தப் பூனை ஆரோக்கியமாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.மிருக நலன் காக்கும் அமைப்பிற்கு இது குறித்து அறிவிக்கப்பட்டதாக அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர். […]

செய்தி தமிழ்நாடு

பேருந்து மீது ஆட்டோ மோதியதில் 6 பேர் பலி

  • May 4, 2023
  • 0 Comments

சென்னையில் இருந்து புதுச்சேரி நோக்கி அரசு பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது. அப்போது எதிர்திசையில் சென்னை நோக்கி ஆட்டோவில் ஒரு குடும்பத்தினர் வந்துகொண்டிருந்தனர். செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் எதிர்பாராதவிதமாக ஆட்டோ,பேருந்தின் மீது மோதியது. இந்த விபத்தில் ஆட்டோ ஓட்டுநர், 2 குழந்தைகள், 3 பெண்கள் உட்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சாலை விபத்தில் உயிரிழந்தவர்கள் யார்,எந்த ஊரைச் சேர்ந்தவர்கள் என்ற விபரம் இன்னும் தெரியவில்லை. இந்த விபத்து குறித்து அறிந்த […]

இலங்கை

இலங்கை பணிப்பெண்ணின் மரணத்தில் மர்மம் – கீதாகுமாரசிங்க

  • May 4, 2023
  • 0 Comments

குவைத்தில் பணி புரிந்து வந்த இலங்கைப் பெண்ணொருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளது தொடர்பில் குவைத் நாட்டிற்கான இலங்கைத் தூதுவர் விசாரணை நடாத்தி வருவதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சரான கீதாகுமாரசிங்க தெரிவித்துள்ளார். ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட போது தூதுவருடன் அலைபேசியில் உரையாடிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். உயிரிழந்த குறித்த பெண் 7 வருடங்களாக குவைத்தில் பணி புரிந்து வந்ததாகவும் அவர் தற்கொலை செய்திருக்க வாய்ப்பில்லை எனவும் அந்தப் பெண்ணின் குடும்பத்தினர் கேள்வியெழுப்பியுள்ளதாக அமைச்சர் […]

செய்தி தமிழ்நாடு

ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்டது

  • May 4, 2023
  • 0 Comments

கோவை மாநகராட்சி நிர்வாகம் கடந்த சில மாதங்களாகவே ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. பல்வேறு இடங்களில் மாநகராட்சிக்கு சொந்தமான நிலங்களும் மீட்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் காந்திபுரம் நகர பேருந்து நிலையத்திற்கு உள்ளும் வெளியிலும், ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு நடத்தப்பட்டு வந்த டீக்கடைகள், செல்போன் கடைகள், செருப்புக்கடைகள்,குளிர்பானக்கடைகள் என சுமார் 20க்கும் மேற்பட்ட கடைகளை அகற்றினர். பல்வேறு கடைகளுக்கு மாநகராட்சி நிர்வாகம் தரப்பில் ஏற்கனவே நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது. இருப்பினும் பல்வேறு கடைகள் செயல்பட்டு வந்ததை தொடர்ந்து இன்று […]

இலங்கை செய்தி முக்கிய செய்திகள்

பதில் பாதுகாப்பு அமைச்சராக பிரமித்த பண்டார நியமனம்!

  • May 4, 2023
  • 0 Comments

இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னக்கோன் பதில் பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். மூன்றாம் சார்ல்ஸ் மன்னரின் முடிசூட்டு விழாவுக்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (வியாழக்கிழமை) காலை ஐக்கிய இராச்சியத்தை நோக்கி பயணித்துள்ளார். இந்நிலையிலேயே  அவருக்கு இந்த அமைச்சுப் பதவி வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!