ஹரின் மற்றும் மனுஷ கட்சியில் இருந்து நீக்கம்
அமைச்சுப் பதவியைப் பெற்ற சமகி ஜனபலவேகவின் இரு நாடாளுமன்ற உறுப்பினர்களையும் கட்சியில் இருந்து நீக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இன்று (18) பிற்பகல் கூடிய கட்சியின் செயற்குழுவினால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ மற்றும் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார ஆகியோர் கட்சி உறுப்புரிமையை இழக்கவுள்ளனர்.













