இந்தியா செய்தி

ஈரானை விட்டு உடனடியாக வெளியேறுங்கள் – இந்தியர்களுக்கு அவசர அறிவிப்பு

  • February 23, 2026
  • 0 Comments

இந்தியர்கள் உடனடியாக ஈரானை விட்டு வெளியேறுமாறு இந்திய அரசாங்கம் அவசர அறிவிப்பை விடுத்துள்ளது. ஈரான் மற்றும் அமெரிக்காவிற்கும் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், இன்று இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கிடைக்கும் சந்தர்ப்பத்தில் எந்தவொரு வழிகளையும் பயன்படுத்தி ஈரானை விட்டு வெளியேறுமாறும் இந்தியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாணவர்கள், யாத்ரீகர்கள், வணிகர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் உட்பட அனைத்து இந்தியர்களும் வணிக விமானங்கள் அல்லது பிற போக்குவரத்து வழிகளை பயன்படுத்தி நாட்டை விட்டு வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அனைத்து இந்திய […]

உலகம் செய்தி

நேபாளத்தில் ஊரடங்கு உத்தரவு காலவரையின்றி நீட்டிப்பு

  • February 23, 2026
  • 0 Comments

நேபாளத்தில் இரு சமூகத்தினருக்கு இடையே நடந்த மோதலையடுத்து, அப்பகுதியில் ஊரடங்கு உத்தரவு காலவரையின்றி நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, பாதிக்கப்பட்ட இடங்களில் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர். நேபாளத்தில் மாதேஷ் மாகாணத்தின் கவுர் நகராட்சிக்கு உட்பட்ட சவ்கதா பகுதியில், சமீபத்தில் திருமண நிகழ்வொன்று நடைபெற்றது. குறித்த நிகழ்வில் , இரண்டு சமூகத்தினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் இது, மோதலாக மாறியது. இதைத்தொடர்ந்து கல்வீச்சு, வீதியோரங்களில் நிறுத்தப்பட்ட வாகனங்களை சேதப்படுத்தியதுடன், தீக்கிரையாக்கினர். இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவியது. இதைத்தொடர்ந்து, பொலிஸார் […]

செய்தி

04 இலட்சம் ரூபாவை தாண்டிய தங்க விலை – அதிர்ச்சியில் நகைப் பிரியர்கள்

  • February 23, 2026
  • 0 Comments

தங்கத்தின் விலை இன்றைய தினம் (23) 4,000 ரூபாவால் அதிகரித்துள்ளதாக அகில இலங்கை தங்க வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. இதன்படி, இன்றைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 400,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. அத்துடன் 22 கரட் தங்க பவுண் ஒன்று 370,000 ரூபாவாகவும், விற்பனை செய்யப்படுகிறது. மேலும் 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 50,000 ரூபாவாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 46,250 ரூபாவாகவும் […]

இலங்கை செய்தி

வவுனியாவில் குடும்பஸ்தர் சடலமாக மீட்பு!

  • February 23, 2026
  • 0 Comments

வவுனியா, பறங்கியாற்றுப் பகுதியில் 44 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர் ஆற்றுக்குள் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என்று ஈச்சங்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். பறங்கியாற்றுப் பகுதியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நேற்று அதிகாலை வேளையில் பறங்கியாற்றுப் பகுதிக்குச் சென்ற மேற்படி நபர், நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அச்சமடைந்த குடும்பத்தினர் மற்றும் அயலவர்கள் இணைந்து தேடுதலில் ஈடுபட்டனர். இதன்போது, ஆற்றினுள் மேற்படி நபர் சடலமாகக் கிடப்பது கண்டறியப்பட்டது. இந்த நபர் உயிரிழந்தமைக்கான காரணம் […]

இலங்கை செய்தி

555 பயணிகளுடன் சுற்றுலாக் கப்பல் திருகோணமலை துறைமுகம் வருகை!

  • February 23, 2026
  • 0 Comments

555 சுற்றுலாப் பயணிகளுடன் பல்வேறு நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, “M.V.Crystal Symphony” எனும் கப்பல் இன்று (23) திருகோணமலை அஷ்ரப் துறைமுகத்தை வந்தடைந்தது. ஆஸ்திரேலியா, இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் இக்கப்பல் மூலம் திருகோணமலையை வந்தடைந்தனர். அவர்கள் திருகோணமலை, சீகிரியா, ஹபரணை போன்ற பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்கான வசதிகள் செய்யப்பட்டிருந்தன. பஹாமாஸ் நாட்டில் The Bahamas பதிவு செய்யப்பட்டுள்ள இக்கப்பலில் 497 பணியாளர்கள் வருகை தந்துள்ளதுடன் இவர்கள் திருகோணமலையில் ஒரு நாள் […]

இலங்கை செய்தி

மரை இறைச்சி விற்றவர் திருமலையில் கைது!

  • February 23, 2026
  • 0 Comments

மரை இறைச்சி விற்றவர் திருமலையில் கைது! மரை இறைச்சியை குளிர்சாதன பெட்டிக்குள் மறைத்து வைத்திருந்தார் எனக் கூறப்படும் சந்தேக நபரொருவர் கைது செய்துள்ளதாக வன ஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது. திருகோணமலை, மொரவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. மொரவெவ இரண்டாம் வாய்க்கால் பகுதியில் வீடொன்றில் மரை இறைச்சி விற்பனை செய்யப்பட்டுவருவதாக வன ஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளுக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. மேற்படி தகவலுக்கமைய வீட்டை சோதனையிட்ட போது 04 கிலோ 500 கிரேம் மறை […]

இந்தியா தமிழ்நாடு

தமிழக தேர்தல் ஸ்டாலினுக்கும், விஜய்க்கும் இடையிலான போர்!

  • February 23, 2026
  • 0 Comments

நடைபெறவுள்ள தமிழக சட்டப் பேரவை தேர்தலானது விஜய்க்கும், ஸ்டாலினுக்கும் இடையிலான போராகும் என்று தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தெரிவித்தார். வேலூர் மாவட்டம், அகரம்சேரியில் இன்று (23) உரையாற்றுகையிலேயே விஜய் இவ்வாறு கூறினார். “மக்களை நேசிக்கிற ஒரு சரியான தலைமை இல்லாததால், முதல்வர் ஸ்டாலின் கொடுத்த பொய்யான வாக்குறுதிகளை நம்பி மக்கள் ஏமாந்தனர். இன்று மக்களை நேசிக்கும் இயக்கமாக தவெக வந்துள்ளது.” எனவும் விஜய் சுட்டிக்காட்டினார். தற்போது நடக்க இருக்கும் சட்டப்பேரவை தேர்தல், தமிழ்நாட்டு மக்களுக்கும் […]

இலங்கை செய்தி

அடிபணியமாட்டார் நாமல்: மொட்டு கட்சி சூளுரை!

  • February 23, 2026
  • 0 Comments

“ சவால்களை கண்டு அஞ்சும் தலைவன் நாமல் ராஜபக்ச Namal Rajapaksa அல்லர்.”என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி SLPP சூளுரைத்துள்ளது. கொழும்பில் இன்று (23) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது, நாமல் ராஜபக்சவின் லண்டன் உரைகள் இரத்து செய்தமை தொடர்பில் கருத்து வெளியிட்டப்பட்டது. இதன்போது மொட்டு கட்சி உறுப்பினர், முன்னாள் ராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த கூறியவை வருமாறு, “மஹிந்த ராஜபக்ச வெளிநாடு செல்லும்போதும் இவ்வாறு அன்று எதிர்ப்பு இருந்தது. எனினும், அழைப்பு விடுத்துவிட்டனர், எனவே, கலந்துரையாடச் […]

உலகம்

மத்திய கிழக்கை சுற்றியுள்ள நாடுகளில் ஒரு வலையமைப்பை உருவாக்கும் இஸ்ரேல்!

  • February 23, 2026
  • 0 Comments

மத்திய கிழக்கில் அல்லது அதைச் சுற்றியுள்ள நட்பு நாடுகளின் வலையமைப்பை உருவாக்க இஸ்ரேல் திட்டமிட்டுள்ளதாக அந்நாட்டின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு (Benjamin Netanyahu) தெரிவித்துள்ளார். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இஸ்ரேலுக்கு வருகை தரவுள்ளதை அறிவிக்கும்போது நெதன்யாகு குறித்த தகவலை வெளியிட்டுள்ளார். “எனக்கு முன்னால் நான் காணும் பார்வையில், நாங்கள் ஒரு முழு அமைப்பையும் உருவாக்குவோம், அடிப்படையில் மத்திய கிழக்கைச் சுற்றி அல்லது அதற்குள் கூட்டணிகளை உருவாக்குவோம்  எனக் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் இஸ்ரேல் மற்றும் இந்தியாவிற்கு இடையில் […]

அரசியல் இலங்கை

லண்டன் உரை இரத்து குறித்து நாமல் அதிருப்தி

  • February 23, 2026
  • 0 Comments

லண்டனில் திட்டமிடப்பட்ட தமது உரைகள் இரத்து செய்யப்பட்டமை துரதிஷ்டவசமான சம்பவம் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச x தளத்தில் தெரிவித்துள்ளார். பல்கலைக்கழகங்கள் விவாதங்களை தீர்க்கும் இடங்களாக அமைய வேண்டுமே தவிர, அச்சுறுத்தல்கள் மூலம் அதனை மௌனிக்க செய்ய கூடாது என அவர் வலியுறுத்தியுள்ளார். இந்த நிலையில் பல தலைமுறை அனுபவத்தை கொண்ட பல்கலைக்கழகங்களில் நடத்தப்படவிருந்த பகிரங்க விவாதங்களில் உரையாற்ற தாம் மிகுந்த ஆவலாக இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதன்படி, தனது கருத்துக்களை கடுமையாக எதிர்ப்பவர்களுடன், நேரடி விவாதத்தை […]

error: Content is protected !!