இலங்கை செய்தி

டெங்கு நோய் தலைவிரிப்பு: 12,165 பேர் பாதிப்பு!

  • February 24, 2026
  • 0 Comments

இலங்கையில் இவ்வருடத்தில் முதல் இரு மாதங்களுக்குள் 12 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு மேற்படி தகவலை வெளியிட்டுள்ளது. கொழும்பு மாவட்டத்திலேயே அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். எனவே, கொழும்பு மாநகரசபை எல்லைக்குட்பட்ட பகுதியில் இன்று முதல் அடுத்த மூன்று நாட்களுக்கு டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. மாத்தறை, காலி மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களிலும் டெங்கு நோய் பரவிவருகின்றது. ஜனவரி முதல் இதுவரையான காலப்பகுதிக்குள் 12 ஆயிரத்து 165 டெங்கு […]

அரசியல் இலங்கை செய்தி

“சஜித்தை எங்களால் கட்டுப்படுத்த முடியாது” – மனோ!

  • February 24, 2026
  • 0 Comments

” சஜித் எமது கட்சி தலைவர் அல்லர். அங்கே போகாதீர்கள், இங்கே போகாதீர்கள் என நாம் கட்டு படுத்த முடியாது.” இவ்வாறு தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார். இது தொடர்பில் மனோ கணேசனின் முகநூல் பதிவு வருமாறு, ” எமது கட்சி, தமிழ் முற்போக்கு கூட்டணி. சஜித்தின் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி. இரண்டு கடசிகளுக்கும் இடையில், புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றின் அடிப்படையில் தேர்தல் உடன்பாட்டு கூட்டணி இருக்கிறது. இரண்டுமே ஒரே கட்சி […]

அரசியல் இலங்கை செய்தி

சங்க மாநாடு தோல்வி: அமைச்சர் சுட்டிக்காட்டு!

  • February 24, 2026
  • 0 Comments

“ பௌத்த பிக்குகள் சிலரால் நடத்தப்பட்ட சங்க மாநாடு தோல்வியில் முடிந்துள்ளது.” என்று அமைச்சர் லாந்காந்த Lankantha தெரிவித்தார். பௌத்த பிக்குகள் எதிர்கொள்ளும் அநீதிகள், புத்தசாசனம், நாட்டின் நிலை குறித்து ஆராய்வதற்காகவே சங்க மாநாடு நடத்தப்பட்டிருந்தது. இதில் உரையாற்றிய தேரர்கள் அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்திருந்தனர். இந்நிலையில் சங்க மாநாடு தொடர்பில் அமைச்சரிடம் கேள்வி எழுப்பட்டது. இதற்கு பதிலளித்த அமைச்சர் லால்காந்த, “சங்க மாநாட்டில் 300 இற்கு குறைவான தேரர்களே பங்கேற்றுள்ளனர். எண்ணிக்கையின் அடிப்படையில் மாநாடு தோல்வியாகும். அரசுக்கு […]

#ராசிபலன் #இன்றையராசிபலன் #DailyHoroscope #TamilAstrology #RasiPalanToday #info4tamils #iftamil #ஜோதிடம் #TuesdayVibes #பிப்ரவரி24 #TamilNews ராசிபலன்

🌟 இன்றைய ராசிபலன் (24.02.2026) 🌟

  • February 23, 2026
  • 0 Comments

மேஷம்: இன்று புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். சுப செய்திகள் வந்து சேரும். ரிஷபம்: நிதானமாகச் செயல்பட வேண்டிய நாள். வீண் விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. மிதுனம்: பண வரவு திருப்திகரமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கடகம்: நீண்ட நாள் கனவுகள் நனவாகும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். சிம்மம்: செலவுகள் அதிகரிக்கலாம், திட்டமிட்டுச் செயல்படுவது அவசியம். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. கன்னி: நண்பர்கள் மூலம் உதவி கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் அமையும். துலாம்: […]

இலங்கை செய்தி

வாக்காளர் பெயர் பட்டியலை புதுப்பிக்கும் பணிகள் ஆரம்பம்

  • February 23, 2026
  • 0 Comments

2026ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பெயர் பட்டியலை புதுப்பிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இம்முறை வாக்காளர் விபரங்களைச் சேகரிப்பதற்காக கிராம சேவை உத்தியோகத்தர்கள் வீடுகளுக்கு வருகை தரமாட்டார்கள் என்றும் அவர் கூறியுள்ளார். அத்துடன் வாக்காளர் பட்டியலில் புதிதாகப் பெயர்களைச் சேர்த்துக்கொள்ள வேண்டியவர்கள் அல்லது திருத்தங்களை மேற்கொள்ள வேண்டியவர்கள், சம்பந்தப்பட்ட கிராம சேவை உத்தியோகத்தர் அலுவலகம் அல்லது தேர்தல் அலுவலகத்திற்குச் சென்று அந்தப் பணிகளை முன்னெடுக்க முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் […]

ஐரோப்பா

மனித உரிமை மீறல் : 08 ரஷ்ய அதிகாரிகளுக்கு தடை விதிப்பு!

  • February 23, 2026
  • 0 Comments

ரஷ்யாவில் கடுமையான மனித உரிமை மீறல்கள் மற்றும் சட்டத்தின் ஆட்சியை குறைமதிப்பிற்கு உட்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் 08  நபர்கள் மீது ஐரோப்பிய ஒன்றியம் இன்று தடை விதித்துள்ளது. அலெக்ஸி கோரினோவ் (Aleksei Gorinov) மற்றும் பத்திரிகையாளர் மரியா பொனோமரென்கோ (Maria Ponomarenko) போன்ற அரசியல் கைதிகள் மனிதாபிமானமற்ற மற்றும் இழிவான சூழ்நிலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தண்டனைக் காலனிகளின் தலைவர்களுக்கு எதிராகவே மேற்படி தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை அமுலுக்கு கொண்டுவர 27 ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவு அமைச்சர்களின் ஒருமித்த ஒப்புதல் […]

ஐரோப்பா செய்தி

ஆண்ட்ரூவை அரச வாரிசு வரிசையிலிருந்து நீக்குவதற்கு அவுஸ்திரேலிய பிரதமர் ஆதரவு

  • February 23, 2026
  • 0 Comments

முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன்-வின்ட்சர் (Andrew) அரச வாரிசு வரிசையில் இருந்து நீக்கப்படுவதற்கான எந்தவொரு நடவடிக்கைக்கும் தமது அரசாங்கம் ஆதரவு வழங்கும் என அவுஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் (Anthony Albanese ) தெரிவித்துள்ளார். பிரதமர் ஸ்டார்மருக்கு அவர் எழுதிய கடிதத்தில் தனது நிலைப்பாட்டை உறுதிப்படுத்தியுள்ளார். 2025 ஆம் ஆண்டு ஒக்டோபரில் இளவரசர் உள்ளிட்ட பட்டங்கள் நீக்கப்பட்டபோதிலும், ஆண்ட்ரூ தற்போது அரியணை வாரிசு வரிசையில் எட்டாவது இடத்தில் உள்ளார். மறைந்த பாலியல் குற்றவாளியான ஜெஃப்ரி எப்ஸ்டீன் உடனான […]

உலகம்

மெக்சிகோவில் தொடரும் வன்முறை : தேசிய காவல்படையைச் சேர்ந்த 25 பேர் உயிரிழப்பு!

  • February 23, 2026
  • 0 Comments

மெக்சிகோவின் ஜலிஸ்கோ (Jalisco) மாநிலத்தில் நடந்த தாக்குதல்களில் தேசிய காவல்படையைச் சேர்ந்த 25 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மெக்சிகோவின் பாதுகாப்பு அமைச்சர் ஒமர் கார்சியா ஹார்ஃபுச் (Omar Garcia Harfuch) இன்று இடம்பெற்ற சிறப்பு ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை தெரிவித்தார். “எல் மென்சோ” மெக்சிகோவின் மிகவும் தேடப்படும் போதைப்பொருள் கும்பல் தலைவராக இருந்தார். அவரைப் பிடிக்க வழிவகுக்கும் தகவல்களை தருபவர்களுக்கு $15 மில்லியன் அமெரிக்க டொலர் பணப்பரிசு வழங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், அவர் பாதுகாப்பு படையினரால் சுட்டுக் […]

இலங்கை செய்தி

கிளிநொச்சியில் சட்டவிரோத கடல் அட்டை வேட்டை – 10 பேர் கைது

  • February 23, 2026
  • 0 Comments

கிளிநொச்சியில் சட்டவிரோதமான முறையில் இரவு வேளையில் கடல் அட்டைகளை பிடித்த 10 பேர் கைது செய்யப்பட்டுள்னர். இரணைதீவு மேற்கு கடல் பகுதியில் இன்று (23.02) அதிகாலை முன்னெடுக்கப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போதே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது 1,232 கடல் அட்டைகள், மூன்று டிங்கி படகுகள் மற்றும் சுழியோடல் உபகரணங்கள் கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டன. இதன்போது, 29 முதல் 54 வயதுக்கு இடைப்பட்ட, மன்னார் பள்ளிமுனை பிரதேசத்தைச் சேர்ந்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படை […]

உலகம்

ஈராக்கில் அடைத்து வைக்கப்பட்டிருந்த கைதிகளை மீளப் பெற்றுக்கொள்ள துருக்கி இணக்கம்!

  • February 23, 2026
  • 0 Comments

சிரிய முகாம்களில் இருந்து ஈராக்கிற்கு மாற்றப்பட்ட ஆயிரக்கணக்கான இஸ்லாமிய அரசு கைதிகளை மீள பெற்றுக்கொள்ள துருக்கி முன்வந்துள்ளது. ஈராக் வெளியுறவு அமைச்சர் ஃபுவாட் ஹுசைன் (Fuad Hussein) இன்று இந்த தகவலை அறிவித்துள்ளார். இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர், ஈராக் தங்கள் நாட்டினரை திருப்பி அனுப்புவது குறித்து மற்ற நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், துருக்கியுடன் ஒரு உடன்பாட்டை எட்டியுள்ளதாகவும் தெரிவித்தார். சிரிய அரசு  கிட்டத்தட்ட ஒரு தசாப்த காலமாக சந்தேக நபர்களை அடைத்து வைத்திருந்த […]

error: Content is protected !!