விளையாட்டு

நாணய சுழற்சியில்  நியூசிலாந்து வெற்றி

  • March 8, 2026
  • 0 Comments

உலக கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி இன்று இடம்பெறுகிறது. இந்தியாவின் அஹமதாபாத்தில் இறுதிப் போட்டி இன்றிரவு 7 மணிக்கு ஆரம்பமானது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளது. இதன்படி இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடுகிறது.

ஐரோப்பா செய்தி

அரசாங்கம் பொருளாதார நிலைமையை மிகவும் உன்னிப்பாகக் கண்காணிக்க வேண்டும் – தொழிற்கட்சி

  • March 8, 2026
  • 0 Comments

அரசாங்கம் பொருளாதார நிலைமையை மிகவும் உன்னிப்பாகக் கண்காணிக்க வேண்டும் என தெரிவித்தார் தொழிற்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் டாம் ஹேய்ஸ் (Tom Hayes) தெரிவித்துள்ளார். BBC Politics South நிகழ்வில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் கூறியுள்ளார். இதேவேளை பிரித்தானியாவில் தற்போது நிலவும் பொருளதார நெருக்கடி விரைவில் அதிக செலவுகளாக மாறக்கூடும் என தொழிற்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஸோய் பிராங்க்ளின் (Zöe Franklin) உம் எச்சரித்துள்ளார். எரிபொருள் மற்றும் எரிசக்தி விலைகள் உயர்வது வணிகங்களுக்கும் வீடுகளுக்கும் […]

ஐரோப்பா செய்தி

பிரித்தானிய தேர்தல்களில் 16 , 17 வயதுடையவர்களுக்கும் வாக்களிக்கும் உரிமை – நாடாளுமன்றில் விவாதம்

  • March 8, 2026
  • 0 Comments

பிரித்தானிய தேர்தல்களில் 16 மற்றும் 17 வயதுடையவர்களுக்கும் வாக்களிக்கும் உரிமையை வழங்குவது தொடர்பான சட்ட முன்மொழிவு குறித்து நாடாளுமன்றில் விவாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது. இதேவேளை, (Hannah Spencer) ஹன்னா ஸ்பென்சர் கோர்டன் மற்றும் டென்டன் தொகுதிக்கான புதிய எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டதை பல இளைஞர்கள் உற்சாகமாக வரவேற்றுள்ளனர். சமூக வலைதளங்களில் மிகவும் செயலில் உள்ள அவர், இன்ஸ்டாகிராமில் 300,000 க்கும் மேற்பட்ட பின்தொடர்பவர்களை கொண்டுள்ளார். அவரது ஏற்புரை சமூக வலைதளங்களில் பரவலாகப் பகிரப்பட்டுள்ளது. இளைஞர்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள் என யூடியூப்பில் […]

இலங்கை செய்தி

இலங்கையை உலகில் மனிதநேயம் மிக்க நாடாக மாற்றுவதே இலக்கு – ஜனாதிபதி

  • March 8, 2026
  • 0 Comments

இலங்கையை உலகில் மனிதநேயம் மிக்க நாடாக மாற்றுவதே தமது எதிர்பார்ப்பு என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (08) நடைபெற்ற சர்வதேச மகளிர் தின நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய ஜனாதிபதி இவ்வாறு கூறியுள்ளார். உலகில் ஏற்படும் எந்தவொரு யுத்தத்தின் போதும் மனிதநேயத்தின் கொடியை முன்னெடுத்துச் செல்லும் தேசம் இலங்கைத் தேசம் என்ற செய்தியை உலகிற்கு கொண்டு செல்வதாகத் தெரிவித்தார். உலகில் எவ்வளவு வளர்ந்த நாடுகள் இருந்தாலும், இலங்கை எத்தகைய பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்தாலும், மனிதநேயம் […]

இலங்கை செய்தி

ஈரான் கப்பல்களில் இருந்து மீட்கப்பட்டோருக்கு இலவச விசா, மனிதாபிமானப் பாதுகாப்பு வழங்க நடவடிக்கை

  • March 8, 2026
  • 0 Comments

இலங்கை கடற்பரப்பிற்கு அருகில் விபத்துக்குள்ளான ஈரான் கப்பல்களில் இருந்து மீட்கப்பட்ட குழுவினருக்கு சுமார் ஒரு மாத காலத்திற்கு இலவச விசாக்களை வழங்கி, மனிதாபிமானப் பாதுகாப்பை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். சர்வதேச உடன்படிக்கைகள் மற்றும் கடல்சார் சட்ட விதிகளைப் பின்பற்றி, அணிசேரா கொள்கையின் அடிப்படையில் கப்பல்களில் பணிபுரிந்த தொழிலாளர்கள் தொடர்பான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறான தீர்மானங்கள் மூலம் எந்தவொரு தரப்புக்கும் ஆதரவளிப்பதோ அல்லது எவருக்கும் பாதிப்பை ஏற்படுத்துவதோ அரசாங்கத்தின் நோக்கமல்ல […]

ஐரோப்பா செய்தி

மத்திய கிழக்கு மோதல் – தெற்கு இங்கிலாந்து பொருளாதாரத்திற்கு அச்சுறுத்தல்

  • March 8, 2026
  • 0 Comments

ஈரான் மற்றும் மத்திய கிழக்கு பகுதியில் அதிகரித்து வரும் மோதல்கள், தெற்கு இங்கிலாந்து முழுவதும் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு அச்சுறுத்தலாக இருக்கலாம் என எம்.பி.க்கள் எச்சரித்துள்ளனர். BBC Politics South நிகழ்வில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவித்த தொழிற்கட்சி, கன்சர்வேடிவ் கட்சி மற்றும் Liberal Democrats (UK) கட்சிகளைச் சேர்ந்த பிரதிநிதிகளே இவ்வாறு எச்சரித்துள்ளனர். மேலும் நிலைமை இன்னும் கணிக்க முடியாததாக இருக்கிறதெனவும் அவர் கூறியுள்ளனர். ஆனால் இந்த மோதல் எரிபொருள் விலைகள், பணவீக்கம் மற்றும் வீட்டு வரவு-செலவுத் திட்டங்களில் […]

பொழுதுபோக்கு

Oscar விருது விழாவை தொகுத்து வழங்கும் பிரியங்கா சோப்ரா !

  • March 8, 2026
  • 0 Comments

98 வது Oscar விருதுகள் விழா எதிர்வரும் 16 ஆம் திகதி அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நடைபெறவுள்ளது. இந்த நிகழ்ச்சியை நடிகை பிரியங்கா சோப்ரா தொகுத்து வழங்கவுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. மேலும், Oscar விருதுகள் விழாவை பிரியங்கா சோப்ரா தொகுத்து வழங்குவது இது முதன் முறை அல்ல, கடந்த 2016 ஆம் ஆண்டும் அவர் இந்த அங்கீகாரத்தினை பெற்றிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

உலகம் செய்தி

லெபானின் தலைநகரில் வசிப்பவர்களை வெளியேறுமாறு இஸ்ரேல் எச்சரிக்கை

  • March 8, 2026
  • 0 Comments

லெபானின் தலைநகரான பெய்ரூட்டின் தெற்கு புறநகர்ப் பகுதிகளில் வசிப்பவர்களை வெளியேறுமாறு இஸ்ரேல் எச்சரித்துள்ளது. ஈரான் ஆதரவு பெற்ற குழுவான ஹெஸ்பொல்லாவை இலக்குவைத்து தாக்குதல் நடத்துவதாகவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது. மத்திய பெய்ரூட்டில் உள்ள ஹோட்டலொன்றில் இஸ்ரேலிய தாக்குதலில் நால்வர் கொலை செய்யப்பட்டதாகவும் லெபனான் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் வெளிநாட்டு நடவடிக்கைப் பிரிவின் முக்கிய தளபதிகளை தாக்கியதாகவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

உலகம் செய்தி

தெஹ்ரானில் உள்ள எண்ணெய் சேமிப்பு கிடங்குகள் முதன்முறையாக இலக்கு வைக்கப்பட்டது

  • March 8, 2026
  • 0 Comments

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் ஈரான் மீது தொடர்ந்து தாக்குதல்களை மேற்கொண்டு வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தத் தாக்குதல்களில் முதன்முறையாக ஈரான் தலைநகரமான தெஹ்ரானில் உள்ள எண்ணெய் சேமிப்பு கிடங்குகள் மற்றும் சுத்திகரிப்பு நிலையங்கள் இலக்கு வைக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் நகரின் பல பகுதிகளில் பாரிய தீ விபத்துகள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே, ஈரானால் நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில் பஹ்ரைன் நாட்டில் உள்ள உப்புநீரை குடிநீராக மாற்றும் தொழிற்சாலைக்கு சேதம் ஏற்பட்டதாக […]

இந்தியா செய்தி

ரஷ்​யா​விட​மிருந்து கச்சா எண்​ணெய் கொள்வனவு செய்வதற்கு எந்த நாட்​டின் அனு​ம​தி​யும் தேவை​யில்லை – இந்தியா திட்டவட்டம்

  • March 8, 2026
  • 0 Comments

ரஷ்​யா​விட​மிருந்து கச்சா எண்​ணெய் கொள்வனவு செய்வதற்கு எந்த நாட்​டின் அனு​ம​தி​யும் தேவை​யில்லையென இந்திய மத்​திய அரசு தெரி​வித்​துள்​ளது. மத்​திய கிழக்கு நாடு​களில் ஏற்பட்டுள்ள போர் பதற்​றம் காரணமாக, ஹார்​முஸ் நீரிணையில் சரக்கு கப்​பல் போக்​கு​வரத்து தடைபட்​டு, உலக அளவில் கச்சா எண்​ணெய் விநி​யோகம் பாதிக்​கப்​பட்​டுள்​ளது. இதனால் கச்சா எண்​ணெய் விலை சுமார் 30 சதவீதத்​துக்கு மேல் உயர்ந்​துள்​ளது. இதற்கு காங்​கிரஸ் உள்​ளிட்ட எதிர்க்​கட்​சிகள் கண்​டனம் வெளியிட்டன. இந்நிலையில், 30 நாட்​களுக்கு ரஷ்​யா​விட​மிருந்து கச்சா எண்​ணெய் வாங்​கிக் கொள்ள […]

error: Content is protected !!