டித்வா சூறாவளியை தொடர்ந்து மலையக பகுதிகளில் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் பாதுகாப்பு பகுதிகள் தொடர்பான ஆய்வுகளை முன்னெடுத்து வருகிறது. இதற்கமைய நிலச்சரிவு அபாயத்தில் உள்ள பகுதிகளில் அமைந்துள்ள பாடசாலைகள் தொடர்பில் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழகங்களின் ஆதரவுடன் பாடசாலை வளாகங்களின் நிலச்சரிவு அபாய மதிப்பீடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கண்டி, நுவரெலியா மற்றும் மாத்தளை மாவட்டங்களில் தற்போது ஆய்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. டிசம்பர் 9 ஆம் திகதி தொடங்கிய இந்த ஆய்வுகளுக்கு, பேராதனை, மொரட்டுவ மற்றும் […]
தென்னாப்பிரிக்காவில் இந்து கோவில் ஒன்றின் கட்டடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 05 ஆக அதிகரித்துள்ளது. இது தொடர்பில் புலனாய்வாளர்கள் விசாரணைகளை தொடங்கியுள்ளதாக நேற்று அறிவித்துள்ளனர். டர்பனுக்கு (Durban) வடக்கே சுமார் 25 கிலோமீட்டர் (15 மைல்) தொலைவில் உள்ள வெருலமில் (Verula) இந்த கோவில் அமைந்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது. கோவிலில் மேல் மாடிக் கட்டடம் நிர்மாணிக்கப்பட்டு வந்த நிலையில், இடிந்து விழுந்ததாக கூறப்படுகிறது. இதில் அங்கு பணியாற்றிய ஒருவர் உயிரிழந்ததாக அதிகாரிகள் அறிவித்திருந்தனர். பின்னர் மேற்கொள்ளப்பட்ட […]
பாகிஸ்தான் அரசாங்கத்தால் நன்கொடையாக வழங்கப்பட்ட மனிதாபிமான உதவித் தொகை இலங்கையிடம் கையளிக்கப்பட்டுள்ளது. கொழும்பு துறைமுக சர்வதேச கொள்கலன் முனையத்தில் வைத்து இலங்கை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. அமைச்சர் அநுர கருணாதிலக மற்றும் துறைமுகங்கள் மற்றும் பிரதி அமைச்சர் ஜனித ருவன் கொடித்துவக்கு ஆகியோர் உதவிப் பொருட்களை பொறுப்பேற்றனர். பாகிஸ்தான் அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தி இலங்கைக்கான பாகிஸ்தான் தூதுவர் மனிதாபிமான உதவித் தொகையை உத்தியோகபூர்வமாக கையளித்தார். பாகிஸ்தானின் தேசிய அனர்த்த முகாமைத்துவ அதிகாரசபை மற்றும் பிரதமர் அலுவலகத்துடன் ஒருங்கிணைந்து சுமார் 200 […]
பல மர்மங்கள் புதைந்துக் கிடக்கும் பெர்முடா தொடர்பான புதிய கண்டுப்பிடிப்பை ஆய்வாளர்கள் மேற்கொண்டுள்ளனர். இதற்கு முன்பு பார்த்திராத ஒரு பாறை அடுக்கு, தீவுக்கூட்டத்தின் நடுவில் கடலில் மிதப்பது போன்ற தோற்றப்பாடு தெரிவதாக ஆய்வாளர்கள் இயற்பியல் ஆராய்ச்சி கடிதத்தில் குறிப்பிட்டிருந்தனர். இதனை அடிப்படையாகக் கொண்டு முன்னெடுக்கப்பட்ட புதிய ஆய்வில் அதன் பாறை தோற்றப்பாடு, அமைப்பு தொடர்பில் விளக்கியுள்ளனர். பொதுவாக , எரிமலைத் தீவுகள், மக்மா குழம்புகள் என்பன பூமியின் ஆழத்தில் புதைந்துக்கிடக்கும். அவை பூமியின் மேலோட்டத்தை மேலே தள்ளுகின்றன. […]
மெக்ஸிகோவின் மத்திய பகுதியில் சிறிய ரக விமானம் ஒன்று அவசரமாக தரையிறங்க முயன்றபோது விபத்துக்குள்ளாகியுள்ளது. நேற்று இடம்பெற்ற குறித்த விபத்தில் ஏழு பேர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மெக்ஸிகோ மாநில சிவில் பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளர் அட்ரியன் ஹெர்னாண்டஸ் (Adrián Hernández) இதனை உறுதிப்படுத்தியுள்ளார். மெக்ஸிகோ நகரத்திற்கு மேற்கே சுமார் 31 மைல் (50 கிலோமீட்டர்) தொலைவில் உள்ள டோலுகா விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட விமானம் அருகில் இருந்து தொழிற்துறை மையத்திற்கு அருகாமையில் விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது. விபத்து குறித்த […]
” நிவாரணத்தைக் காண்பித்து மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் முற்படுகின்றதா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.” இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினரான முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்ணான்டோவே தெரிவித்தார். கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, “ நிதியை பகிர்ந்தளித்து மாகாணசபைத் தேர்தலை நடத்தலாம் என தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் உள்ள ஜோக்கர்கள் நினைக்கின்றனர். பேரிடர் நிலையை பயன்படுத்தி மாகாணசபைத் தேர்தலை நடத்த […]
2025 ஆம் கல்வியாண்டில் 6 முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மூன்றாம் தவணைப் பரீட்சை நடத்துவதைத் தடை செய்யும் உத்தரவை கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சகம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது. அனைத்து பாடசாலை முதல்வர்கள் உட்பட தொடர்புடைய அதிகாரிகளுக்கு இது தொடர்பில் அறிவிக்கும் சுற்றறிக்கை அனுப்பட்டுள்ளது. சுற்றறிக்கைக்கு அமைய, இந்த விஷயத்தில் முன்னர் தெரிவிக்கப்பட்ட அறிவுறுத்தல்கள் கண்டிப்பாகக் கடைப்பிடிக்கப்பட்டு விதிவிலக்கு இல்லாமல் செயல்படுத்தப்பட வேண்டும் என்று அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.
பொலிஸ் விசாரணை முடிவடைந்து அது தொடர்பான அறிக்கை கிடைத்த பின்னரே நாடாளுமன்ற உறுப்பினர் அசோக ரன்வல தொடர்பில் அடுத்தக்கட்ட நடவடிக்கை இடம்பெறும். ஆளுங்கட்சியான தேசிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் நிஹால் அபேசிங்க எம்.பி. மேற்படி தகவலை வெளியிட்டுள்ளார். விபத்து சம்பவமொன்று தொடர்பில் முன்னாள் சபாநாயகர் அசோக ரன்வல சர்ச்சையில் சிக்கியுள்ளார். அவர் மதுபோதையில் வாகனம் செலுத்தியே விபத்தை ஏற்படுத்தியுள்ளார் எனவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில் அசோக ரன்வலவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படுமா என தேசிய மக்கள் […]
சிட்னியின் போண்டி கடற்கரையில் நடந்த துப்பாக்கிச் சூட்டுக்குப் பின்னணியில் இருந்ததாகக் கூறப்படும் இரண்டு துப்பாக்கிதாரிகள் கடந்த மாதம் பிலிப்பைன்ஸுக்குப் பயணம் செய்துள்ளதாக காவல்துறையினர் இன்று அறிவித்துள்ளனர். அவர்களின் பயணத்திற்கான காரணங்களை வெளியிடாத காவல்துறையினர், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக அறிவித்துள்ளனர். துப்பாக்கிதாரிகள் இஸ்லாமிய அரசின் சித்தாந்தங்களால் ஈர்க்கப்பட்டிருக்கலாம் என்றும் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. மேலும் அவர்களில் ஒருவர் பயன்படுத்திய வாகனத்தில் வீட்டில் தயாரிக்கப்பட்ட இரண்டு இஸ்லாமிய அரசின் கொடிகளைக் கண்டுபிடித்துள்ளதாகவும் காவல்துறையினர் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.