உலகம்

ஆங் சான் சூகி (Aung San Suu Kyi) ஏற்கனவே இறந்திருக்கலாம் – கவலையில் மகன்!

  • December 16, 2025
  • 0 Comments

ஆங் சான் சூ கியின் (Aung San Suu Kyi) மகன் கிம் அரிஸ் (Kim Aris), இரண்டு வருட தகவல் முடக்கம் மற்றும் தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் காரணமாக தனது 80 வயது தாயார் “ஏற்கனவே இறந்திருக்கலாம்” என்று அச்சம் தெரிவித்துள்ளார். நோபல் அமைதிப் பரிசு பெற்ற திருமதி சூ கி, 2021 ஆம் ஆண்டு மியான்மரில் நடந்த இராணுவ ஆட்சிக் கவிழ்ப்புக்குப் பிறகு தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மேலும் அரசியல் ரீதியாக தூண்டப்பட்ட குற்றச்சாட்டுகளுக்காக […]

இலங்கை செய்தி

மீனவ சமூகம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வு!!

  • December 16, 2025
  • 0 Comments

கடந்த காலங்களில் ஏற்பட்ட பேரிடர் சூழ்நிலைகளின் காரணமாக மீனவ சமூகம் எதிர்நோக்கி வரும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து ஆராய்ந்து, அவற்றைத் தீர்க்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பான கலந்துரையாடல் இன்று (15) திருகோணமலை மாவட்ட செயலக பிரதான மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ. ஜி. எம். ஹேமந்த குமார அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற இக்கலந்துரையாடல், பாராளுமன்ற உறுப்பினர் ரொஷான் அக்மீமன அவர்களின் தலைமையில் முன்னெடுக்கப்பட்டது. இதில் சம்பந்தப்பட்ட அரச நிறுவனங்களின் அதிகாரிகள், மீன்வளத் […]

ஐரோப்பா செய்தி

UKவில் தொழிற்கட்சி அரசாங்கத்தின் கீழ் அதிகரித்து வரும் வேலையின்மை பிரச்சினை!

  • December 16, 2025
  • 0 Comments

பிரித்தானியாவில் வேலையின்மை விகிதம் கடந்த 03 மாதங்களில் 5.1 சதவீதமாக உயர்ந்துள்ளதாக புள்ளிவிபரங்கள் வெளிப்படுத்தியுள்ளன. இது  முந்தைய காலாண்டை விட 0.1 சதவீதம் அதிகமாகும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. புள்ளிவிபரங்களுக்கு அமைய கடந்த  2021 ஆம் ஆண்டின் முதல் காலாண்டிற்குப் பிறகு அல்லது 2016 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஏற்பட்ட மிக உயர்ந்த வேலையின்மை விகிதத்தை இது குறிக்கிறது. கடந்த நவம்பர் மாதம் சம்பளம் பெறும் ஊழியர்களின் எண்ணிக்கை  38 ஆயிரத்தால் குறைந்து 30.3 மில்லியனை எட்டியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. […]

விளையாட்டு

IPL ஏலம் : 20 மில்லியன் இந்திய ரூபாய்க்கு விலைப்போன ஹசரங்க

  • December 16, 2025
  • 0 Comments

அபுதாபியில் இன்று (16) நடைபெற்றுவரும் 2026 இந்தியன் பிரீமியர் லீக் வீரர்கள் ஏலத்தில் இலங்கை சுழற்பந்து வீச்சாளர் வனிந்து ஹசரங்க அடிப்படை விலையான 20 மில்லியன் இந்திய ரூபாய்க்கு லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியால் வாங்கப்பட்டுள்ளார். இதேவேளை, அவுஸ்திரேலியாவின் நட்சத்திர சகலதுறை ஆட்டக்காரரான கெமரூன் கிரீன், ஐ.பி.எல். ஏல வரலாற்றில் ஒரு சாதனையாக 252 மில்லியன் இந்திய ரூபாய்க்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணியால் வாங்கப்பட்டுள்ளார். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் […]

உலகம்

இந்தோனேசியாவில் பாரிய தீவிபத்து – நூற்றுக்கணக்கான கடைகள் எரிந்து நாசம்!

  • December 16, 2025
  • 0 Comments

இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் (Jakarta) நேற்று ஏற்பட்ட பாரிய தீவிபத்தில் நூற்றுக்கணக்கான கடைகள் எரிந்து நாசமாகியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் கயிறுகளை விற்கும் விற்பனை நிலையம் ஒன்றில் ஏற்பட்ட தீ பின்னர் ஏனைய கடைகளுக்கும் பரவியதாக குறிப்பிடப்படுகிறது. பத்தொன்பது தீயணைப்பு இயந்திரங்களும் 80 தீயணைப்பு வீரர்களும் தீயை அணைக்க சுமார் ஒரு மணி நேரம் போராடியதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும் இந்த தீவிபத்தினால் உயிராபத்துக்கள் ஏற்படவில்லை என்பதை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். மின் ஷார்ட் […]

ஐரோப்பா செய்தி

போர் நிறுத்த பேச்சுவார்த்தையில் எந்த சலுகைகளையும் வழங்கமாட்டோம் – ரஷ்யா உறுதி!

  • December 16, 2025
  • 0 Comments

போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தைகளில் ரஷ்யா எந்த பிரதேச சலுகைகளையும் வழங்காது என்று அந்நாட்டின் துணை வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார். போரை முடிவுக்கு கொண்டுவருவதில் அமெரிக்கா தீவிரமாக செயற்பட்டு வருகின்ற நிலையில் ரஷ்யாவின் இந்த கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யா தற்போது கைபற்றியுள்ள டான்பாஸ் (Donbas), கிரிமியா (Crimea), நோவோரோசியா (Novorossiya) ஆகிய பகுதிகளை தொடர்ந்து தக்கவைத்துக்கொள்ளும் என்று துணை வெளியுறவு அமைச்சர் செர்ஜி ரியாப்கோவ் (Sergei Ryabkov) குறிப்பிட்டுள்ளார். அத்துடன் வொஷிங்டன் சமீபத்திய பேச்சுவார்த்தைகளின் முன்னேற்றம் […]

உலகம்

குடியேற்ற வழக்குகளை விசாரணை செய்ய FBI முகவர்களை நியமித்த ட்ரம்ப்!

  • December 16, 2025
  • 0 Comments

அமெரிக்காவில் குடியேற்ற வழக்குகளை விசாரணை செய்வதற்காக ட்ரம்ப் நிர்வாகம் மீளவும் ஆயிரக்கணக்கான FBI முகவர்களை நியமித்துள்ளது. இந்நடவடிக்கையானது FBI முகவர்களை வழக்கான பணிகளில் இருந்து திசைத் திரும்பும் வகையில் அமைந்துள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. ட்ரம்ப் நிர்வாகத்தின் கீழ், FBI சுமார் 1,500 முகவர்களை வொஷிங்டன், D.C.க்கு வெளியே இடமாற்றம் செய்ய திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. பணியகத்தின் மிகவும் பொதுவான குற்ற எதிர்ப்பு மற்றும் தேசிய பாதுகாப்புப் பணிகளை விட, குடியேற்றம் தொடர்பான வழக்குகளை விசாரணை செய்ய ஏறக்குறைய 40 […]

அரசியல் இலங்கை செய்தி

புலம்பெயர் இலங்கையர்களுக்கு நன்றி தெரிவிப்பு: சர்வதேச உதவி குறித்தும் விளக்கம்!

  • December 16, 2025
  • 0 Comments

இலங்கைக்கு கிடைக்கப்பெறும் சர்வதேச உதவிகள் வெளிப்படைத்தன்மையுடனேயே கையாளப்பட்டுவருகின்றது என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். அரசாங்க நிர்வாகப் பொறிமுறை ஊடாக உரிய வகையில் உதவித் திட்டங்கள் வழங்கப்பட்டுவருகின்றன எனவும் அவர் கூறினார். இலங்கைக்கு கிடைக்கப்பெறும் சர்வதேச உதவிகள் தொடர்பில் வெளிப்படைதன்மை இல்லை என முன்வைக்கப்பட்டுவரும் குற்றச்சாட்டு தொடர்பில் வெளிவிவகார அமைச்சரிடம் வினவப்பட்டது. இதற்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். “ பேரிடரின் பின்னர் இலங்கைக்கு சர்வதேச உதவிகள் கிடைக்க ஆரம்பித்தன. முதல் ஆறு மணி நேரத்துக்குள்ளேயே […]

உலகம் செய்தி

பொலிவியாவில் வெள்ளத்தில் சிக்கி 20 பேர் உயிரிழப்பு – ஆயிரக்கணக்கானோர் தவிப்பு!

  • December 16, 2025
  • 0 Comments

பொலிவியாவில் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளது. கிழக்கு சாண்டா குரூஸ் (eastern Santa Cruz) பகுதியில் நிரம்பி வழியும் நதி பொலிவியால் வெள்ளத்தை ஏற்படுத்தியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மீட்பு பணியாளர்கள் முன்னர் அணுக முடியாத இடங்களை தற்போது அணுக முயற்சிப்பதாக கூறப்படுகிறது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. கடுமையான மழை காரணமாக   ஏராளமானோர்  காணாமல் போயுள்ளதாகவும், நூற்றுக்கணக்கான குடும்பங்கள் தங்குமிடம் இல்லாமல் தவிப்பதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். அதேநேரம் ஹெலிகாப்டர் மூலம் […]

இலங்கை செய்தி

பேரிடர் தடுப்பு முகாமைத்துவம்: தொழில்நுட்ப ஒத்துழைப்பு வழங்க பிரான்ஸ் பச்சைக்கொடி!

  • December 16, 2025
  • 0 Comments

இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் ரேமி லெம்பெர்ட், பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவை நேற்று சந்தித்து பேச்சு நடத்தினார். இயற்கை அனர்த்தம் மற்றும் அதனை தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட மீட்பு, நிவாரண மற்றும் மீளமைப்பு நடவடிக்கைகள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டன. அரசாங்கத்தின் ஒருங்கிணைந்த முறையில் மேற்கொள்ளப்பட்ட தேசிய மீட்பு நடவடிக்கைகள் குறித்து பிரான்ஸ் தூதுவருக்கு விளக்கமளிக்கப்பட்டது. முக்கிய காலகட்டத்தில் இலங்கைக்கு ஆதரவளிப்பதில் பிரான்ஸ் தனது உறுதியான அர்ப்பணிப்பை தொடர்வதாக பிரான்ஸ் தூதுவர் மீண்டும் உறுதிப்படுத்தினார். உடனடி […]

error: Content is protected !!