இலங்கை

முஜிபுர் ரஹ்மானுக்கு அச்சுத்தலா? வீட்டை நோக்கிவரும் மர்ம நபர்கள்

  • December 17, 2025
  • 0 Comments

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தனது பாதுகாப்பை உறுதி செய்யுமாறு பொலிஸ்மா அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். கடந்த மாதம் மற்றும் கடந்த வாரம் பொலிஸார் எனக் கூறிக்கொண்டு அடையாளம் தெரியாத நபர்கள் தனது வீட்டிற்கும் உறவினர்களின் வீடுகளுக்கும் சென்றதாகவும், இதுகுறித்து விசாரணை நடத்துமாறு பொலிஸ்மா அதிபரிடம் முறைப்பாடு அளித்ததாகவும் முஜிபுர் ரஹ்மான் கூறியுள்ளார். அரசாங்கத்தின் குறைபாடுகளை கடுமையாக விமர்சிப்பதால் தமது பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டுள்ளதாக முஜிபுர் ரஹ்மான் குற்றம் சுமத்தியுள்ளதுடன், இதுபோன்ற சூழலில், […]

உலகம் செய்தி முக்கிய செய்திகள்

போண்டி துப்பாக்கிச்சூட்டு தாக்குதல் – 59 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் தாக்குதல்தாரி!

  • December 17, 2025
  • 0 Comments

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள போண்டி கடற்கரையில் (Bondi Beach) இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய தாக்குதல்தாரிக்கு எதிராக 59 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. இரண்டு தாக்குதல்தாரிகளில் ஒருவர் கொல்லப்பட்டதுடன், மற்றொரு தாக்குதல்தாரியான 24 வயதுடைய நவீத் அக்ரம்  காவல்துறையினரின் கண்காணிப்பில் உள்ளார். அவர் மீது 15 கொலைக் குற்றச்சாட்டுகள், பயங்கரவாதக் குற்றம் மற்றும் கொலை செய்யும் நோக்கத்துடன் ஒரு நபருக்கு காயம்/கடுமையான உடல் ரீதியான தீங்கு விளைவித்தல் தொடர்பான 40 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஆயுதம் […]

ஐரோப்பா செய்தி

UKவில் பணவீக்கத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம் – வீட்டுக் கட்டணங்களை குறைக்க பரிசீலனை!

  • December 17, 2025
  • 0 Comments

பிரித்தானியாவில்  நுகர்வோர் விலைக் குறியீட்டால் (CPI) அளவிடப்படும்   பணவீக்கம், நவம்பர் மாதத்தில்  எதிர்பார்த்ததை விட குறைவடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய தரவுகளுக்கு அமைய  3.2 சதவீதமாகக் குறைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.  இந்த எண்ணிக்கை அக்டோபரில் 3.6 சதவீதமாக பதிவாகியிருந்தது. கேக்குகள், பிஸ்கட், காலை உணவு தானியங்கள் மற்றும் புகையிலை போன்ற பொருட்களின் விலைகளில் ஏற்பட்ட சரிவுதான் பணவீக்கம் குறைவடைந்தமைக்கு முக்கிய காரணம் என அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். மேற்படி பணவீக்கம் குறைந்துள்ளமையானது  கிறிஸ்துமஸுக்கு முன்னதாக இங்கிலாந்து வங்கி வட்டி விகிதங்களைக் குறைக்கும் […]

இலங்கை செய்தி

ரயில் கட்டமைப்பை மீளமைக்க சீனாவிடம் தொழில்நுட்ப உதவி கோருகிறார் அநுர!

  • December 17, 2025
  • 0 Comments

பேரிடரால் சேதமடைந்த ரயில் கட்டமைப்பை மீளமைப்பதற்கு தேவையான தொழில்நுட்ப ஒத்துழைப்பை வழங்குமாறு சீனாவிடம், இலங்கை கோரிக்கை விடுத்துள்ளது. இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள சீன தேசிய மக்கள் காங்கிரஸ்ன் உப தலைவர் வாங் டோங்மிங் உள்ளிட்ட சீன தூதுக்குழுவினர் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை இன்று சந்தித்து பேச்சு நடத்தினர். இதன்போதே ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மேற்படி கோரிக்கையை விடுத்தார். இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டமை தொடர்பில் உப தலைவர் உள்ளிட்ட தூதுக் குழுவினருக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நன்றி […]

இந்தியா செய்தி

இந்தியாவில் வறுமையில் வாழ்ந்த இரு நண்பர்களுக்கு கிடைத்த பொக்கிஷம்!

  • December 17, 2025
  • 0 Comments

இந்தியாவின் மத்திய பகுதியில் அமைந்துள்ள பன்னாவில் (Panna) இரண்டு இளைஞர்கள் அரிய வகை வைரக்கல்லை எடுத்துள்ளனர். சதீஷ் காதிக் மற்றும் சஜித் முகமது ஆகியோர் சில வாரங்களுக்கு முன்பு குத்தகைக்கு எடுத்த நிலத்தில் இருந்து அந்த கல்லை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளனர். கண்டெடுக்கப்பட்ட குறித்த கல் 15.34 காரட் எடைக்கொண்டது என மதிப்பிடப்பட்டுள்ளது. “இந்தக் கல்லின் மதிப்பிடப்பட்ட சந்தை விலை சுமார் ஐந்து முதல் ஆறு மில்லியன் ரூபாயாகும். மத்தியப் பிரதேச மாநிலத்தில் அமைந்துள்ள பன்னா, இந்தியாவின் மிகவும் […]

அரசியல் இலங்கை செய்தி

பொருளாதார மீட்சிக்கு முழு ஆதரவு: அநுரவிடம் சீன தூதுக்குழு உறுதி!

  • December 17, 2025
  • 0 Comments

இலங்கையின் பொருளாதார மற்றும் சமூக முன்னேற்றத்திற்கு சீன அரசாங்கம் பூரண ஒத்துழைப்பு வழங்கும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள சீன தேசிய மக்கள் காங்கிரஸ்ன் உப தலைவர் வாங் டோங்மிங் உள்ளிட்ட சீனத் தூதுக்குழுவின் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுடன் இன்று பேச்சு நடத்தினர். ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற சந்திப்பின்போதே மேற்படி உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளது. “டித்வா சூறாவளியால் ஏற்பட்டுள்ள சவால்களைத் தோற்கடித்து இலங்கை மக்களின் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான அரசாங்கத்தின் திட்டத்திற்கு முழு ஒத்துழைப்பு வழங்கப்படும். ஜனாதிபதி […]

ஐரோப்பா செய்தி

இத்தாலியில் 210 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த டைனோசரின் கால்தடங்கள் கண்டுப்பிடிப்பு!

  • December 17, 2025
  • 0 Comments

வடக்கு இத்தாலியில் உள்ள ஒரு தேசிய பூங்காவில் 210 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்ததாக நம்பப்படும்  ஆயிரக்கணக்கான டைனோசர் கால்தடங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இனங்காணப்பட்டுள்ள கால்தடங்களில்  சில 40 செ.மீ (15 அங்குலம்) விட்டம் கொண்டவை எனக் கூறப்படுகிறது. மேலும் பலவற்றில் கால் விரல்கள் மற்றும் நகங்களின் தெளிவான தடயங்கள் உள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த செப்டம்பரில் மிலனின் வடகிழக்கில் உள்ள ஸ்டெல்வியோ (Stelvio national park) தேசிய பூங்காவின் சில கிலோமீற்றர் தொலைவில் புகைப்படக் கலைஞர் ஒருவர்  […]

இலங்கை

இலங்கை அணியின் களத்தடுப்புக்கு புதிய பயிற்றுவிப்பாளர்

  • December 17, 2025
  • 0 Comments

இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் புதிய களத்தடுப்புப் பயிற்றுவிப்பாளராக இந்திய தேசிய அணியின் முன்னாள் களத்தடுப்புப் பயிற்றுவிப்பாளர் ஆர்.ஸ்ரீதர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனத்தை இலங்கை கிரிக்கெட் சபை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. எதிர்வரும் ரி20 உலகக் கிண்ணப் போட்டித் தொடர் நிறைவடையும் வரையில் இவரது பதவிக்காலம் செல்லுபடியாகும் என இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.  

இலங்கை

புலிகளுடனான சமாதானப் பேச்சுகள் – தூசுத்தட்ட மீண்டும் தயாராகும் ஜீ.எல்.பீரிஸ்

  • December 17, 2025
  • 0 Comments

இலங்கை அரசாங்கத்துக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான சமாதானப் பேச்சுகள் குறித்த புத்தகமொன்றை முன்னாள் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் வெளியிட உள்ளார். ‘The Sri Lanka Peace Process: An Inside View’ என்ற பெயரில் இந்த புத்தகத்தை அவர் வெளியிட உள்ளார். இலங்கை அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகள் (LTTE) அமைப்புக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளின் முக்கிய விவரங்களை இந்தப் புத்தம் வெளிப்படுத்தும் என புத்தகத்தை வெளியிட உள்ள விஜித யாப்பா பப்ளிகேஷன்ஸ் தெரிவித்துள்ளது. தாய்லாந்து மற்றும் […]

உலகம்

ஈரானில் கைது செய்யப்பட்ட நர்கஸ் முகமதி உடல் ரீதியான காயங்களுக்கு உள்ளானதாக தகவல்!

  • December 17, 2025
  • 0 Comments

அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற நர்கஸ் முகமதி (Narges Mohammadi) கடந்த வாரம் ஈரானிய பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்ட நிலையில் இரண்டு முறை மருத்துமவனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. வடகிழக்கு நகரமான மஷாத்தில் (Mashhad) அவர் தடுத்து வைக்கப்பட்டிருந்தபோது உடல் ரீதியான பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக முகமதியின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் நேற்று சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், முகமதி கைது செய்யப்பட்ட பின்னர் அவருடன் தொலைபேசியில் சுருக்கமாகப் பேசியதாகவும், அவசர சிகிச்சை […]

error: Content is protected !!