ஐரோப்பா செய்தி

இங்கிலாந்தில் உச்சம் தொட்ட காய்ச்சல் பாதிப்பு – நிரம்பி வழியும் தீவிர சிகிச்சைப்பிரிவு!

  • December 18, 2025
  • 0 Comments

இங்கிலாந்தில்  காய்ச்சலினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இந்த ஆண்டில் உச்சம் தொட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. NHS வெளியிட்டுள்ள தரவுகளுக்கு அமைய, கடந்த வாரம் சராசரியாக தினமும் 3,140 பேர் காய்ச்சல் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தீவிர சிகிச்சைப் படுக்கைகளில் அனுமதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் கடந்த வாரத்தில் மாத்திரம் தினமும் 316 படுக்கைகள் நிரம்பியதாக தெரிவிக்கப்படுகிறது. குளிர்கால வைரஸ்கள் மற்றும் ஜூனியர் மருத்துவர்களின்  வேலைநிறுத்த நடவடிக்கையின் தாக்கம் காரணமாக மருத்துவமனைகள் ‘இன்னும் […]

இலங்கை

தமிழக முதலமைச்சரை சந்தித்த தமிழ்த் தேசிய பேரவை – சர்வதேச விசாரணைக்கு அழுத்தம் கொடுக்க வேண்டுமென கோரிக்கை

  • December 18, 2025
  • 0 Comments

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தமிழ்த் தேசிய பேரவையினர் இன்று சந்தித்து கலந்துரையாடல் நடத்தியுள்ளனர். தமிழக முதலமைச்சரின் செயலகத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் ஏற்பாட்டில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இதன்போது இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் குறித்த சர்வதேச விசாரணைக்கு தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டுமென தமிழ்த் தேசிய பேரவையின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மு.க.ஸ்டாலினிடம் வலியுறுத்தியுள்ளார். ஈழத் தமிழர்களுக்கான தொடர்ந்த தமிழக அரசு குரல்கொடுக்கும் என இதன்போது மு.க.ஸ்டாலின் தமிழ்த் தேசிய பேரவையிடம் உறுதியளித்துள்ளார். […]

உலகம் செய்தி

தைவானுக்கு 11 பில்லியன் மதிப்புள்ள ஆயுதங்களை வழங்கும் அமெரிக்கா!

  • December 18, 2025
  • 0 Comments

தைவானுக்கு சுமார் $11 பில்லியன் (£8.2 பில்லியன்) மதிப்புள்ள ஆயுதங்களை வழங்கவுள்ளதாக ட்ரம்ப் நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த தொகுப்பில் மேம்பட்ட ரொக்கெட் ஏவுகணைகள், சுயமாக இயக்கப்படும் ஹோவிட்சர்கள் மற்றும் பல்வேறு ஏவுகணைகள் அடங்கும். ட்ரம்பின் இந்த அறிவிப்பிற்கு காங்கிரஸ் இன்னும் ஒப்புதல் வழங்கவில்லை. அதேநேரம் ட்ரம்ப் மீண்டும் ஆட்சியமைத்ததில் இருந்து இரண்டாவது முறையாக தைவானுக்கு ஆயுதங்களை வழங்கவுள்ளார். இந்நிலையில் அமெரிக்காவின் உதவிக்கு தைவானின் பாதுகாப்பு அமைச்சகம் இன்று நன்றி தெரிவித்துள்ளது. அமெரிக்காவுடனான இந்த ஒப்பந்தம் நாட்டின் பாதுகாப்பை […]

ஐரோப்பா செய்தி

ஹீத்ரோ விமான நிலையத்தில் கடவுச்சீட்டின்றி விமானத்தில் ஏறிய பயணியால் சர்ச்சை!

  • December 18, 2025
  • 0 Comments

ஹீத்ரோ விமான நிலையத்தில் விமான டிக்கெட், கடவுச்சீட்டின்றி விமானத்தில் ஏறிய பயணியால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. குறித்த சம்பவம் கடந்த சனிக்கிழமை இடம்பெற்றது. அன்று காலை 7.20 மணிக்கு நோர்வேயின் ஒஸ்லோவிற்கு (Oslo) பயணமான பிரிட்டிஷ் ஏர்வேஸ் (BA) விமானத்தில் பெயர் குறிப்பிடப்படாத குறித்த பயணி ஏறியுள்ளார். குறித்த விமானத்தில் பயணிக்கவிருந்த பிற பயணிகளை பின்தொடர்ந்து சென்ற அவர், பாதுகாப்பு சோதனை நடைமுறைகளையும் தவிர்த்துள்ளதாக கூறப்படுகிறது. வேறொரு பயணிக்கு ஒதுக்கப்பட்ட இருக்கையில் அவர் அமர்ந்திருந்தமையால், கேபின் குழுவினர் அந்த […]

ஐரோப்பா செய்தி

UKவில் தங்கியுள்ள ஹொங்கொங் மக்களின் நிரந்தர விசா தொடர்பில் எழுந்துள்ள கவலை!

  • December 18, 2025
  • 0 Comments

பிரித்தானியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய சட்டங்களால்,  BNO விசாவில் இங்கிலாந்திற்கு வருகை தந்த ஹொங்கொங் மக்கள் தொடர்பில் 34 எம்.பிகள் கவலையை வெளிப்படுத்தியுள்ளனர். புதிய மாற்றங்கள் புலம்பெயர்ந்தோர் இங்கிலாந்தில் நிரந்தரமாக வாழவும், வேலை செய்யவும், படிக்கவும், பின்னர் பிரித்தானிய குடியுரிமையைப் பெறவும் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு ஆட்சியில் இருந்த கன்சர்வேடிவ் அரசாங்கம் பிரத்தானிய  தேசிய வெளிநாட்டு (BNO) விசாக்களை சுமார் 200000 ஹொங்கொங் மக்களுக்கு வழங்கியது. 1997 ஆம் ஆண்டு சீனாவின் […]

அரசியல் இலங்கை செய்தி

டித்வா புயல்: சபாநாயகரிடம் முக்கிய கடிதம் கையளிப்பு: அடுத்து நடக்க போவது என்ன?

  • December 18, 2025
  • 0 Comments

டித்வா புயலால் ஏற்படும் தாக்கங்களை எதிர்கொள்வதற்குரிய முன்னாயத்த நடவடிக்கைகள் இடம்பெறாமை தொடர்பில் விசாரணை நடத்துமாறு கோரப்பட்டுள்ளது. இது தொடர்பில் விசேட நாடாளுமன்றத் தெரிவுக்குழு அமைக்குமாறுகோரும் கடிதம் சபாநாயகரிடம் இன்று (18) கையளிக்கப்பட்டுள்ளது. எதிரணி சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் அனுராத ஜயரத்ன இக்கடிதத்தை எழுதியுள்ளார். அதனை சபாநாயகரிடம் கையளிப்பதற்காக எதிர்க்கட்சி தலைவர் உள்ளிட்ட எதிரணி எம்.பிக்களையும் அவர் அழைத்துச் சென்றுள்ளார். சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளவை வருமாறு, “ டித்வா சூறாவளியால் ஏற்பட்ட உயிர் இழப்புகள், சொத்துச் சேதங்கள் […]

இந்தியா

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் அவசரமாக கொச்சினில் தரையிறக்கம்

  • December 18, 2025
  • 0 Comments

சவுதி அரேபியாவின் ஜித்தா நகரிலிருந்து இந்தியாவின் கேரளாவின் கோழிக்கோடு விமான நிலையத்தை நோக்கி 160 பயணிகளுடன் பயணித்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் அவசரமாக கொச்சின் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது. தரையிறங்கும் கியர் மற்றும் டயர் பழுதடைந்ததால் இன்று (18) காலை இவ்வாறு அவசரமாக விமானம் கொச்சினில் தரையிறக்கப்பட்டுள்ளது. இதனால், விமானத்தில் பயணித்த மற்றும் தரையில் இருந்த எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும், அவசர சேவைகள் முன்கூட்டியே செயல்படுத்தப்பட்டதாகவும் கொச்சின் சர்வதேச விமான நிலைய லிமிடெட் […]

இலங்கை முக்கிய செய்திகள்

அவசரமாக இந்திய உயர்ஸ்தானிகரை சந்திக்கும் தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள் – காரணம் என்ன?

  • December 18, 2025
  • 0 Comments

மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்த இலங்கை அரசாங்கத்துக்கு இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும் என்பதை இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவை சந்தித்து வலியுறுத்த தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள் தீர்மானித்துள்ளனர். இந்த சந்திப்பு எதிர்வரும் 23ஆம் திகதி கொழும்பில் இடம்பெற உள்ளதாக தெரிய வருகிறது. தமிழரசு கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம், ஈழ மக்கள் புரட்சிகார விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், தமிழ் மக்கள் விடுதலைக் […]

ஐரோப்பா செய்தி

137 பில்லியன் யூரோவிற்காக காத்திருக்கும் உக்ரைன் – ஒன்றுக்கூடும் ஐரோப்பிய தலைவர்கள்!

  • December 18, 2025
  • 0 Comments

ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் இன்று ஒன்றுக்கூடவுள்ளனர். இதன்போது உக்ரைனுக்கு அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு தேவைப்படும் இராணுவ உபகரணங்கள் மற்றும் பிற நிதித் தேவைகளை பூர்த்தி செய்ய முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பரிசீலனை செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் இடம்பெயர்வு, கூட்டமைப்பின் விரிவாக்கக் கொள்கை, வர்த்தகம் மற்றும் பொருளாதாரம்  குறித்தும் விவாதிப்பார்கள்  என எதிர்பார்க்கப்படுகிறது. உக்ரைனுக்கு தற்போது 137 பில்லியன் யூரோ தேவை எனக் கூறப்படுகிறது. இதனை வழங்குவதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பில் ஆராய்வதே இதன் முதன்மையான நோக்கம் […]

உலகம் செய்தி

பாகிஸ்தான் சர்வதேச விமானச் சேவையின் 100% பங்குகளை விற்கத் தீர்மானம்

  • December 18, 2025
  • 0 Comments

கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள பாகிஸ்தான் அரச விமானப் போக்குவரத்து நிறுவனமான பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸின் (PIA) நூறு சதவீத பங்குகளையும் விற்பனை செய்ய அந்நாட்டு அரசு அதிரடி முடிவெடுத்துள்ளது. இது குறித்த மேலதிக தகவல்களை அந்நாட்டின் தனியார்மயமாக்கல் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. விமான நிறுவனத்தை வாங்குவதற்கு விருப்பம் தெரிவித்த ஏலதாரர்கள் அனைவரும், கொள்வனவுக்குப் பின்னர் அரசாங்கத்தின் தலையீடு இன்றி முழுமையான முகாமைத்துவக் கட்டுப்பாட்டை கோரியுள்ளனர். இதன் காரணமாகவே, முதலில் திட்டமிட்டிருந்த பங்குகளை விட 100 சதவீத பங்குகளையும் […]

error: Content is protected !!