அரசியல் இலங்கை செய்தி

நாமல் ராஜபக்சவே ஜனாதிபதி வேட்பாளர்: மொட்டு கட்சி அறிவிப்பு!

  • December 18, 2025
  • 0 Comments

  அடுத்த ஜனாதிபதி தேர்தலில் நாமல் ராஜபக்சவே தமது கட்சி வேட்பாளராக களமிறங்கக்கூடும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார். கட்சியின் பெரும்பாலான உறுப்பினர்களின் நிலைப்பாடு இதுவாகவே இருக்கின்றது எனவும் அவர் கூறினார். தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போது, எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே சாகர காரியவசம் மேற்படி தகவலை வெளியிட்டார். “ அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக நாமல் ராஜபக்சவே தற்போது கட்சிக்குள் அடையாளம் காணப்பட்டுள்ளார். எனினும், ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் இன்னும் […]

இலங்கை

இலங்கைக்கு மஹிந்திரா இந்தியா நிறுவனம் 100 மில்லியன் ரூபா நிதியுதவி

  • December 18, 2025
  • 0 Comments

இலங்கையை மீண்டும் கட்டியெழுப்பும் திட்டத்திற்கு மஹிந்திரா இந்தியா நிறுவனம் 100 மில்லியன் ரூபாவை நன்கொடையாக வழங்கியுள்ளது. இந்த நன்கொடை தொழிலாளர் அமைச்சகத்தில் இன்று மதியம் வழங்கி வைக்கப்பட்டது. மஹிந்திரா இந்தியா நிறுவனத்தின் முகாமையாளர் சுஜீத் ஜெயந்த் மற்றும் இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா ஆகியோர் தொழில் அமைச்சரும் நிதி மற்றும் திட்டமிடல் துணை அமைச்சருமான டொக்டர் அனில் ஜெயந்த பெர்னாண்டோவிடம் நன்கொடையை வழங்கினர். தொழிலாளர் துணை அமைச்சர் மஹிந்த ஜெயசிங்க மற்றும் இந்திய உயர் […]

ஐரோப்பா செய்தி

பிரான்ஸின் தொடர் கொலையாளிக்கு ஆயுள் தண்டனை விதிப்பு!

  • December 18, 2025
  • 0 Comments

பிரான்ஸின் முன்னாள் மயக்க மருந்து நிபுணர் ஒருவர், 30 நோயாளிகளுக்கு விஷம் கொடுத்தமைக்காக  ஆயுள் தண்டனையை எதிர்நோக்கியுள்ளார். இதன் காரணமாக 12 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. பெசன்சோன் (Besançon) நகர நீதிமன்றத்தில் குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் மேற்படி தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. ஃபிரடெரிக் பெச்சியர் (Frédéric Péchier) என அடையாளப்படுத்தப்பட்டுள்ள குறித்த மருத்துவர், மாரடைப்பு அல்லது இரத்தப்போக்கை ஏற்படுத்தும் விஷ ஊசிகளை பயன்படுத்தி நோயாளிகளை கொலை செய்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. பெச்சியர் (Péchier) நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து […]

அரசியல் இலங்கை செய்தி

இலங்கையின் சுற்றுலாத் துறையையும் தாக்கியதா டித்வா புயல்?

  • December 18, 2025
  • 0 Comments

பேரிடருக்கு மத்தியிலும் நாம் சுற்றுலாத்துறை வீழ்ச்சியடைவதற்கு இடமளிக்கவில்லை. சுற்றுலாப் பயணிகளை வரவழைப்பதற்குரிய வேலைத்திட்டம் தொடர்கின்றது என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். இவ்வருடத்தில் இதுவரையான காலப்பகுதிக்குள் 22 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர் எனவும் அவர் கூறினார். நாடாளுமன்றத்தில் இன்று (18) உரையாற்றுகையிலேயே வெளிவிவகார அமைச்சர் மேற்படி தகவலை வெளியிட்டார். “நெருக்கடியான காலகட்டத்திலும் நாம் சுற்றுலாத்துறையை கைவிடவில்லை. சுற்றுலாப் பயணிகளை அழைத்துவரும் வேலைத்திட்டம் முறையாக முன்னெடுக்கப்பட்டது. டிசம்பர் மாதத்தில் முதல் 10 நாட்களுக்குள் 93 […]

ஐரோப்பா

பாடசாலைகளில் பெண்களுக்கு எதிரான வெறுப்பு – இங்கிலாந்து அரசின் புதிய திட்டம்

  • December 18, 2025
  • 0 Comments

வகுப்பறைகளில் பெண்களுக்கு எதிரான வெறுப்பை அடையாளம் கண்டு அதனை எதிர்கொள்ளும் வகையில் ஆசிரியர்களுக்கு சிறப்புப் பயிற்சியளிக்க இங்கிலாந்து அரசு திட்டமிட்டுள்ளது. அடுத்த 10 ஆண்டுகளில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறையை பாதியாகக் குறைப்பதே இதன் நோக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிக ஆபத்தில் உள்ள மாணவர்கள், நடத்தை தொடர்பான பயிற்சி வகுப்புகளுக்கு அனுப்பப்படலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. பாடசாலைகளுக்கான இந்த திட்டங்கள், இளைஞர்களின் தீவிரமயமாக்கலைத் தடுப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளன. பெண் வெறுப்பு ஆரம்பத்திலேயே தடுக்கப்பட்டால் எதிர்கால வன்முறை தவிர்க்கப்படும் […]

இலங்கை செய்தி

கண்டி ஹுன்னஸ்கிரியவில் நிலச்சரிவு; 90 குடும்பங்கள் வெளியேற்றம்

  • December 18, 2025
  • 0 Comments

கண்டி – ஹுன்னஸ்கிரிய நகரத்திற்கு அருகில் இன்று காலை ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக ஒருவர் காயமடைந்துள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. அப்பகுதியில் நிலவி வரும் கடும் மழை காரணமாக இந்த நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதுடன், இதனால் மூன்று வீடுகள் சேதமடைந்துள்ளன. நிலச்சரிவு அபாயம் அதிகரித்துள்ள நிலையில், அப்பகுதியில் உள்ள இரண்டு பாதுகாப்பு மையங்களில் தங்கியிருந்த 90 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் […]

ஐரோப்பா

வட்டி விகிதத்தை குறைத்த இங்கிலாந்து வங்கி!

  • December 18, 2025
  • 0 Comments

இங்கிலாந்து வங்கி தனது வட்டி விகிதத்தை 4%-லிருந்து 3.75% ஆகக் குறைத்துள்ளது. இது வீட்டுக்கடன் (Mortgage) வைத்திருப்பவர்களுக்கு ஒரு மிகப்பெரிய நற்செய்தியாக அமைந்துள்ளது. பணவியல் கொள்கைக் குழு (MPC) உறுப்பினர்கள் இந்த குறைப்புக்கு ஆதரவாக 5-4 என்று வாக்களித்துள்ளனர். குறிப்பாக, 2026-க்குள் சுமார் 19 லட்சம் மக்கள் இதன் மூலம் பயனடைவார்கள் என்று எதிர் பார்க்கப்படுகிறது. வட்டி விகிதம் குறைந்தாலும், சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்களுக்குக் கிடைக்கும் லாபம் சற்று குறையக்கூடும். சேமிப்பாளர்கள் சற்று விழிப்புடன் இருக்க வேண்டும். […]

இந்தியா

100 நாட்களுக்கு பதில் 125 நாட்கள் வேலை ஏழைகளுக்கு எதிரானது – பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு

  • December 18, 2025
  • 0 Comments

கிராமப்புற மக்களுக்கு ஆண்டுக்கு 100 நாட்கள் வேலை உத்தரவாதத்தை வழங்கும் திட்டம் இன்னும் சில மாதங்களில் முடிவுக்கு வந்துவிடும் என இந்திய அரசியல்வாதியான பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்துக்கு முன்பாக ஊடகங்களுக்கு இன்று கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார். மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய சட்டமூலம் ஏழைகளுக்கு எதிரானது எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார். கடந்த 2005 ஆம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, மகாத்மா காந்தி தேசிய […]

இலங்கை

119 அவசர அழைப்பு இலக்கத்தை தவறாக பயன்படுத்த வேண்டாம் – பொலிஸார் எச்சரிக்கை

  • December 18, 2025
  • 0 Comments

119 அவசர அழைப்பு இலக்கத்தை தவறாக பயன்படுத்த வேண்டாம் என பொலிஸ் ஊடகப் பிரிவு எச்சரித்துள்ளது. 119 அவசர அழைப்பு இலக்கம் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தவிர்ப்பது பொதுமக்களுக்குத் தேவையான ஏனைய குறுந்தொலைபேசி இலக்கங்கள் குறித்து அறிந்துக்கொள்ளுமாறு இலங்கை பொலிஸார் விசேட அறிவித்தல் ஒன்றினை வெளியிட்டுள்ளனர். ‘119’ அவசர அழைப்பு சேவைக்குக் கிடைக்கும் அழைப்புகளை ஆராயும்போது, பொலிஸார் உடனடியாகச் செயற்பட வேண்டிய முறைப்பாடுகளுக்கு மேலதிகமாக, பொய்யான முறைப்பாடுகள் மற்றும் ஏனைய அவசர சேவைகளுக்குப் பாரப்படுத்த வேண்டிய முறைப்பாடுகளையும் இந்த […]

ஐரோப்பா செய்தி

உக்ரைனுக்கு பணம் கொடுப்பது முழு ஐரோப்பாவிற்கும் முக்கியமானது – போலந்து!

  • December 18, 2025
  • 0 Comments

முடக்கப்பட்ட ரஷ்யாவின் சொத்துக்களை பயன்படுத்தி உக்ரைனுக்கு நிதியளிப்பதை போலந்து பிரதமர் டொனால்ட் டஸ்க் (Donald Tusk) ஆதரித்துள்ளார். ஐரோப்பிய நாடுகளில் 185 பில்லியன் பெறுமதியான ரஷ்யாவின் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன. இதனை பயன்படுத்தி உக்ரைனுக்கு நிதியளிப்பதற்கு யோசனை முன்மொழியப்பட்டுள்ளது. இது தொடர்பில் இன்று வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது. இதற்காக ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் கூடவுள்ளனர். இந்நிலையில் இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள டொனால்ட் டஸ்க் (Donald Tusk), இந்த முடிவு உக்ரைனுக்கு மட்டுமல்ல, முழு ஐரோப்பாவிற்கும் முக்கியமானது என்று வலியுறுத்தியுள்ளார். […]

error: Content is protected !!