இலங்கை செய்தி

ட்ரம்பின் ஈரான்மீதான வர்த்தகப் போரால் இலங்கைக்கு நேரடி பாதிப்பு ஏற்படுமா?

  • January 20, 2026
  • 0 Comments

ட்ரம்பின் புதிய வரி விதிப்பால் இலங்கைக்கு நேரடி தாக்கம் ஏற்படாது என தெரிவிக்கப்படுகின்றது. எரிசக்தி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் உதயங்க ஹேமபால Professor Udayanga Hemapala மேற்படி தகவலை வெளியிட்டார் என ஆங்கில இணைய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகள் மீது 25 வீத வரி விதிக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். “ ஈரானிடம் இருந்து இலங்கை இனி எரிபொருளை வாங்காது. அந்நாட்டிடம் எண்ணெய் வாங்குவதில் இருந்து இலங்கை […]

இலங்கை

இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் முதல் செயலாளர் மற்றும் கிழக்கு மாகாண ஆளுநருக்கு இடையில் சந்திப்பு!

  • January 20, 2026
  • 0 Comments

இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் முதல் செயலாளர் ( அபிவிருத்தி மற்றும் ஒத்துழைப்பு ) அசோக் குமார் மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரத்னசேகர ஆகியோருக்கு இடையே நேற்று (19) திருகோணமலை ஆளுநர் அலுவலகத்தில் ஒரு சந்திப்பு நடைபெற்றது. இதன்போது இந்திய உதவித் தொகையான  2.3 பில்லியனின் ரூபாயின் கீழ் கிழக்கு மாகாணத்தில் செயல்படுத்தப்படும் திட்டங்களின் தற்போதைய நிலை குறித்து கலந்துரையாடிதுடன், திருகோணமலை மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் திட்டங்களைக் கண்காணிப்பதே தனது விஜயத்தின் நோக்கம் எனக் […]

உலகம்

ட்ரம்பின் அமைதி வாரியத்தில் இணைய மொராக்கோ பச்சைக்கொடி: பிரான்ஸ் போர்க்கொடி!

  • January 20, 2026
  • 0 Comments

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான அமைதி வாரியத்தில் இணைவதற்கு வட ஆபிரிக்க நாடானா மொராக்கோ Morocco பச்சைக்கொடி காட்டியுள்ளது. இது தொடர்பில் டொனால்ட் ட்ரம்ப் விடுத்த அழைப்பை மொராக்கோ மன்னர் ஆறாம் முகமது King Mohammed VI ஏற்றுக்கொண்டுள்ளார் என அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் இன்று (20) அறிவித்தார். டிரம்பின் விரிவான அமைதித் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தையும், காசா நிர்வாகத்திற்கான தேசியக் குழுவின் அதிகாரப்பூர்வ உருவாக்கத்தையும் வரவேற்கின்றோம் எனவும் அவர் கூறினார். ஐ.நா. சபைக்கு மாற்றீடாகவே […]

அரசியல் இலங்கை செய்தி

மொட்டு கட்சிக்கு கடுப்பை ஏற்படுத்தியுள்ள ஜனாதிபதியின் ‘யாழ் நடை’!

  • January 20, 2026
  • 0 Comments

“யாழில் தமிழ் மக்களை தூண்டிவிடும் விதத்திலேயே ஜனாதிபதி கருத்து வெளியிட்டுள்ளார்.” – என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன SLPP கட்சியின் செயலாளர் சாகர காரியவசம் Sagara Kariyawasam தெரிவித்தார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். “ சிங்கள மக்கள் விகாரைக்கு வருவது வழிபடுவதற்கு அல்ல – வைராக்கியத்தை விதைக்கவே” என்ற கருத்துமூலம் சிங்கள மக்கள் யாழ்ப்பாணம் வந்தால் கவனித்துக் கொள்ளுங்கள் என்ற அர்த்தத்தையே ஜனாதிபதி வழங்குவதற்கு […]

இந்தியா

பா.ஜ.கவின் புதிய தலைவர் இன்று பதவியேற்பு!

  • January 20, 2026
  • 0 Comments

பாரதிய ஜனதாக் கட்சியின் BJP தேசியத் தலைவராக நிதின் நபின் Nitin Nabin போட்டியின்றி தெரிவுசெய்யப்பட்டுள்ளார். டெல்லியில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் பிரதமர் மோடி முன்னிலையில் அவர் இன்று பதவியேற்கவுள்ளார். பாஜகவின் 11-வது தேசியத் தலைவராக ஜே.பி.நட்டா J.P. Nadda கடந்த 2020 ஜனவரி 20 ஆம் திகதி பொறுப்பேற்றார். அவரது பதவிக் காலம் முடிந்த போதிலும், சில காரணங்களால் பதவி நீடிப்பு வழங்கப்பட்டது. இந்நிலையில் பிஹார் மாநில அமைச்சராக இருந்த நிதின் நபின் (45), […]

இலங்கை செய்தி

இன்று கூடுகிறது நாடாளுமன்றம்: முக்கிய விடயங்கள் குறித்து விவாதம்!

  • January 20, 2026
  • 0 Comments

இலங்கை நாடாளுமன்றம் இன்று (20) முற்பகல் அந்நாட்டு நேரப்படி 9.30 மணிக்கு கூடுகின்றது. ஜனவரி 23 ஆம் திகதிவரை 4 நாட்கள் நடைபெறும் சபை அமர்வுகளின்போது முக்கிய பல விடயங்கள் தொடர்பில் விவாதிக்கப்படவுள்ளன. இலங்கை அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள கல்வி மறுசீரமைப்பு சம்பந்தமாக கூடுதல் கவனம் செலுத்தப்படக்கூடும். அத்துடன், இவ்வார நாடாளுமன்ற அமர்வின்போது பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை எதிரணி சபாநாயகரிடம் கையளிக்கக்கூடும் என தெரியவருகின்றது. அதேவேளை, டித்வா புயல் விவகாரம் பற்றி விசாரிப்பதற்காக விசேட […]

உலகம் செய்தி

அல்ஜீரிய ஜனாதிபதியை சந்தித்த சவுதி உள்துறை அமைச்சர்

  • January 19, 2026
  • 0 Comments

இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பு குறித்து விவாதிக்க சவுதி(Saudi) உள்துறை அமைச்சர் இளவரசர் அப்துல்அஜிஸ் பின் சவுத் பின் நைஃப்(Abdulaziz bin Saud bin Nayef) மற்றும் அல்ஜீரிய(Algeria) ஜனாதிபதி அப்தெல்மத்ஜித் டெப்பவுனே(Abdelmadjid Tebboune) இடையே சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. தலைநகர் அல்ஜியர்ஸில்(Algiers) நடைபெற்ற இந்தச் சந்திப்பில், இருதரப்பு உறவுகள் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்து ஆலோசிக்கப்பட்டதாக சவுதி பத்திரிகை நிறுவனம் தெரிவித்துள்ளது. அல்ஜீரியாவின் தொடர்ச்சியான முன்னேற்றம் குறித்து மன்னர் சல்மான்(Salman) மற்றும் பட்டத்து இளவரசர் முகமது […]

ஐரோப்பா செய்தி

தேர்தலுக்கு முன்னதாக பதவி விலகுவதாக அறிவித்த பல்கேரியா ஜனாதிபதி

  • January 19, 2026
  • 0 Comments

பல்கேரிய(Bulgaria) ஜனாதிபதி ருமென் ராடேவ்(Rumen Radev) பதவி விலகுவதாக அறிவித்துள்ளார். அரச தொலைக்காட்சி நேரலையில், இது ஜனாதிபதியாக தனது கடைசி உரை என்றும் விரைவில் முறையாக பதவி விலகுவதாகவும் ருமென் ராடேவ் அறிவித்துள்ளார். இந்நிலையில், துணை ஜனாதிபதி இலியானா அயோடோவா(Ileana Iodova) மீதமுள்ள காலத்திற்கு ஜனாதிபதி பதவியை ஏற்றுக்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ருமென் ராடேவ் ஒரு புதிய அரசியல் கட்சியை உருவாக்குவார் என்ற பொதுமக்களின் எதிர்பார்ப்பின் மத்தியில் அவரது இந்த முடிவு வந்துள்ளது.

இலங்கை செய்தி

2026ம் ஆண்டில் இதுவரை 158,787 சுற்றுலாப் பயணிகள் இலங்கை வருகை

  • January 19, 2026
  • 0 Comments

2026ம் ஆண்டில் இதுவரை மொத்தம் 158,787 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வந்துள்ளதாக இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையத்தின்(SLTDA) தரவுகள் தெரிவிக்கின்றன. இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையம் வெளியிட்ட தரவுகளின்படி, இந்தியாவில் இருந்து மொத்தம் 28,686 சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர். மேலும், இந்த ஆண்டு இதுவரை ரஷ்யாவிலிருந்து 16,956 பேர், ஐக்கிய இராச்சியத்திலிருந்து 15,189 பேர், ஜெர்மனியிலிருந்து 10,837 பேர் மற்றும் 7,508 பிரெஞ்சு நாட்டினர் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். 2025ம் ஆண்டு ஜனவரி மாதம் 252,761 சுற்றுலாப் […]

உலகம் செய்தி

நைஜீரியாவில் 3 தேவாலயங்களில் இருந்து 150 வழிபாட்டாளர்கள் கடத்தல்

  • January 19, 2026
  • 0 Comments

வடமேற்கு நைஜீரியாவில்(Nigeria) உள்ள மூன்று வெவ்வேறு தேவாலயங்களில் ஒரே நேரத்தில் 150க்கும் மேற்பட்ட வழிபாட்டாளர்களை துப்பாக்கிதாரிகள் கடத்திச் சென்றதாக சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். “நேற்றைய நிலவரப்படி, 177 பேர் காணாமல் போயிருந்தனர், மேலும் 11 பேர் திரும்பி வந்தனர். எனவே 168 பேர் காணவில்லை” என்று சட்டமன்ற உறுப்பினர் உஸ்மான் டான்லாமி ஸ்டிங்கோUsman Danlami Stingo) உறுதிப்படுத்தியுள்ளார். இந்நிலையில், இந்த கடத்தல் குறித்து இதுவரை எந்தக் குழுவும் பொறுப்பேற்கவில்லை. ஆப்பிரிக்காவின் அதிக மக்கள் தொகை கொண்ட […]

error: Content is protected !!