பொழுதுபோக்கு

அஜித்தின் கையை கிழித்த ரசிகன்! 29 முறை அறுவை சிகிச்சை…. நீண்ட நாட்களுக்குப்பின் தல

  • November 1, 2025
  • 0 Comments

கோலிவுட்டில் அதிக ரசிகர் பட்டாளத்தை கொண்ட நடிகர்களில் அஜித் குமாரும் ஒருவர். சிவாஜி – எம்.ஜி.ஆர் இவர்களுக்கு ஒரு இடம் உண்டு. இவர்களை அடுத்து தமிழ் சினிமாவில் கொண்டாடப்படுபவர்கள் ரஜினி – கமல். அடுத்ததாக இளைய தலைமுறைகளுக்கு விஜய் – அஜித் அவர்கள் தான். இதில் அஜித் வித்தியாசமானவர். இவர் மற்ற நடிகர்களைப் போல் பட விழாக்களில் கலந்துகொள்ள மாட்டார், ஆடியோ லாஞ்ச், பட புரமோஷன்கள் என எதிலும் பங்கேற்க மாட்டார். ஆனாலும் இவருக்கான ரசிகர் பட்டாளம் […]

இலங்கை செய்தி

கடந்த அரசாங்கங்களை விட NPP அரசாங்கத்தின் மீது அதிக நம்பிக்கை வைத்துள்ள மக்கள்!

  • November 1, 2025
  • 0 Comments

தற்போதைய அரசாங்கம் ஊழலை நிவர்த்தி செய்வதில் திறம்பட செயல்படும் என்று இலங்கை மக்களில் 38.7 சதவீதம் பேர் நம்புவதாக கருத்து கணிப்பு ஒன்று தெரிவித்துள்ளது. அதேவேளை கடந்த அரசாங்கங்கள் ஊழலை கையாள்வதில் திறம்பட செயல்பட்டதாக 12.5 சதவீதமானோர் நம்பியதாகவும் அந்த கருத்து கணிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க ஊழலுக்கு எதிரான வலுவான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இலங்கையில் அதிகரித்து வரும் குற்றச்சம்பவங்களுக்கு ஊழல் முக்கிய காரணமாக கூறப்படுகிறது. அண்மைக்காலமாக முன்னாள் தலைவர்கள் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  […]

ஐரோப்பா

உக்ரைனில் தாக்குதலுக்காக தடை செய்யப்பட்ட 9M729 ஏவுகணையை பயன்படுத்தும் ரஷ்யா

  • November 1, 2025
  • 0 Comments

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், உலகளாவிய அணு ஆயுத ஒப்பந்தத்தில் (INF Treaty) இருந்து வெளியேறக் காரணமாக இருந்த 9M729 க்ரூஸ் ஏவுகணையை (Cruise Missile) ரஷ்யா தற்போது உக்ரைனில் தாக்குதலுக்காகப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளதாக கியேவ் (Kyiv) அரசு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. அமெரிக்காவிற்கும் அப்போதைய சோவியத் யூனியனுக்கும் இடையே 1987ல் கையெழுத்திடப்பட்ட INF ஒப்பந்தம், தரைவழி ஏவுகணைகளின் வரம்பைக் கட்டுப்படுத்தியது. இந்த ஒப்பந்தம் பல பத்தாண்டுகளாக அணுசக்திப் பாதுகாப்பின் முக்கிய தூணாக இருந்தது. ஆனால், 9M729 […]

உலகம் செய்தி

உக்ரைனுக்கு (Ukraine)  டோமாஹாக் (Tomahawk) ஏவுகணைகள் வழங்கப்படுமா?

  • November 1, 2025
  • 0 Comments

உக்ரைனுக்கு (Ukraine)  டோமாஹாக் (Tomahawk) ஏவுகணைகளை வழங்க பென்டகன்  பச்சைக்கொடி காட்டியுள்ளதாக CNN செய்தி வெளியிட்டுள்ளது. நீண்ட தூரம் பயணித்து இலக்கை தாக்கும் குறித்த ஏவுகணையானது ரஷ்யாவை சமாளிக்க முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. உக்ரைனில் இதுபோன்ற ஆயுதங்கள் இருப்பது விளாடிமிர் புடினை “பதட்டப்படுத்துகிறது” என்று உக்ரைன் (Ukraine) ஜனாதிபதி  வோலோடிமிர் ஜெலென்ஸ்கி  முன்பு கூறியிருந்தார். இருப்பினும் சமீபத்தில் அமெரிக்க ஜனாதிபதியை சந்தித்த  ஜெலென்ஸ்கிக்கு  இது தொடர்பில் சாதகமான பதில் வழங்கப்படவில்லை. அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு குறித்த ஏவுகணை தேவை எனக் […]

செய்தி

ட்ரோனால் பெர்லினில்(Berlin) தற்காலிகமா நிறுத்தி வைக்கப்பட்ட இரவு விமானச் சேவைகள்

  • November 1, 2025
  • 0 Comments

பெர்லின் பிரேண்டன்பர்க் விமான நிலையத்தில்(Berlin Brandenburg Airport) நேற்றய தினம் (31) இரவு விமானச் சேவைகள் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டன. ஆளில்லா வானூர்திகள் காணப்பட்டதே அதற்குக் காரணம் என்று விமான நிலையப் பேச்சாளர் கூறினார். அண்மையில் ஐரோப்பாவில் அத்தகைய சில மிரட்டல் நிகழ்வுகள் இடம்பெற்றன. நேற்றய தினம் இரவு 8:08 – 9:58 இடையில் விமானங்கள் புறப்படுவதும் தரையிறங்குவதும் நிறுத்தப்பட்டன. அந்தக் குறிப்பிட்ட நேரத்தில் தரையிறங்கச் சென்ற விமானங்கள் ஜெர்மனியின் மற்ற நகரங்களுக்குத் திருப்பிவிடப்பட்டதாகப் பேச்சாளர் சொன்னார். இரவு […]

இலங்கை செய்தி முக்கிய செய்திகள்

துப்பாக்கிகளை வழங்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை!

  • November 1, 2025
  • 0 Comments

பாதுகாப்பு காரணங்களை சுட்டிக்காட்டி சுமார் 20 நாடாளுமன்ற உறுப்பினர்கள் துப்பாக்கிகளை வழங்குமாறு கோரியுள்ளதாக நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சம்பந்தப்பட்ட எம்.பி.க்கள் நாடாளுமன்றத் தலைவர்கள் மற்றும் பாதுகாப்புப் படையினரிடம் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளனர். மேலும் இந்தக் கோரிக்கைகள் பாதுகாப்பு அமைச்சகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. எம்.பி.க்களின் பாதுகாப்பு குறித்து காவல்துறைத் தலைவர் தலைமையில் சமீபத்தில் சிறப்புக் கலந்துரையாடல் நடைபெற்றது. இந்த கலந்துரையாடலில் இதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இருப்பினும், நாடாளுமன்றத்தில் உள்ள அனைத்து எம்.பி.க்களுக்கும் துப்பாக்கிகளை வழங்குவது குறித்து முடிவு […]

இலங்கை

காலியில் தனிப்பட்ட தகராறு காரணமாக கல்லால் தாக்கப்பட்டு பெண் ஒருவர் கொலை

  • November 1, 2025
  • 0 Comments

காலியில் அஹூங்கல்ல காவல் பிரிவுக்கு உட்பட்ட பாதேகம பிரதேசத்தில் கல்லால் தாக்கப்பட்டு பெண்ணொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். அஹூங்கல்ல, பாதேகம பிரதேசத்தைச் சேர்ந்த 43 வயதுடைய பெண் ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். நேற்றைய தினம் (31) இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. உயிரிழந்த பெண்ணுக்கும் அவரது உறவினர் ஒருவருக்கும் இடையில் ஏற்பட்ட தனிப்பட்ட தகராறு காரணமாக இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. தாக்குதலில் காயமடைந்த பெண் பலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். இதனையடுத்து சந்தேக நபரான […]

உலகம் செய்தி

இஸ்ரேலிடம் ஒப்படைக்கப்பட்ட மூன்று பணயக்கைதிகளின் உடல்கள் தொடர்பில் எழுந்துள்ள சிக்கல்!

  • November 1, 2025
  • 0 Comments

காசாவில் இருந்து இஸ்ரேலுக்கு மாற்றப்பட்ட மூன்று பணயக்கைதிகளின் உடல்கள் காணாமல் போன பணயக்கைதிகளில் எவருக்கும் சொந்தமானவை அல்ல என்று இஸ்ரேல் தெரிவித்துள்ளது. நேற்று குறித்த மூன்று உடல்களும் இஸ்ரேலுக்கு வழங்கப்பட்டதாக செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது. கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு துருப்புக்களால் மீட்கப்பட்ட பணயக்கைதியின் உடல்களை விடுவிப்பதன் மூலம் ஹமாஸ் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இதற்கிடையே போரில் கொல்லப்பட்ட 360 பாலஸ்தீன போராளிகளுக்கு ஈடாக இறந்த 28 பணயக்கைதிகளின் உடல்களையும் ஒப்படைக்க ஹமாஸ் […]

பொழுதுபோக்கு

“பிக்பாஸ் தமிழ்” இந்த வாரம் வெளியேறும் நபர் யார் தெரியுமா?

  • November 1, 2025
  • 0 Comments

பிக்பாஸ் தமிழ் சீசன் 9 தொடங்கி ஒரு மாதம் நிறைவடையவுள்ள நிலையில், 4வது வாரமான இந்த வாரத்தில் யார் எலிமினேட் ஆகவுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இம்முறை பல போட்டியாளர்கள் புரிந்து கொள்ளாமல் தரக்குறைவாக பேசியும், கீழ்த்தரமான செயல்களையும் தொடர்ந்து செய்து வருகின்றனர். தொடர்ந்து இந்த வாரம் நடைபெற்ற லாக்கர் டாஸ்க்கிலும் போட்டியாளர்கள் வழக்கம் போல் கத்தி கூச்சலிட்டும், தகாத வார்த்தைகளையும் பயன்படுத்தி தான் வருகின்றனர். இதற்கு விஜய் சேதுபதி என்ன கண்டனம் தெரிவிப்பார் என்று ரசிகர்கள் […]

இலங்கை செய்தி

ருமேனியாவில் தொழில்வாய்ப்பு – ஏறக்குறைய 740 மில்லியன் மோசடி!

  • November 1, 2025
  • 0 Comments

ருமேனியாவில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி  740 மில்லியனுக்கும் அதிகமாக மோசடி செய்த வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் ஒன்று குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் முற்றுகையிடப்பட்டுள்ளது. அவ் நிறுவனத்தின் இயக்குநரை மஹரகம குற்றப் புலனாய்வுத் துறை கைது செய்துள்ளது. சந்தேக நபர் நேற்று (31) நுகேகொடை தலைமை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, 14 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். குற்றப் புலனாய்வுத் துறையின் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு, சம்பந்தப்பட்ட வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் தொடர்பாக 400க்கும் மேற்பட்ட […]

error: Content is protected !!