உலகம்

அமெரிக்கா, இஸ்ரேல் – ஈரான் போர் : 555 பேர் உயிரிழப்பு!

  • March 2, 2026
  • 0 Comments

அமெரிக்க-இஸ்ரேலிய தாக்குதல்கள் தொடங்கியதிலிருந்து ஈரானில் குறைந்தது 555 பேர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக தெற்கு ஈரானில் உள்ள ஒரு பெண்கள் படசாலையில் குறைந்தது 165 பேர் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஈரான் பதிலடி தாக்குதல்களை நடத்தி, போர் விரிவடைந்து வருவதால் மத்திய கிழக்கு முழுவதும் டஜன் கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். அமெரிக்கா தரப்பிலும் உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது. அதேநேரம் இஸ்ரேலின் தரப்பில் இருந்து 11 இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  

உலகம்

குவைத்தில் அமெரிக்க போர் விமானங்கள் விபத்து!

  • March 2, 2026
  • 0 Comments

குவைத்தில் அமெரிக்க போர் விமானங்கள் விபத்துக்குள்ளாகியுள்ளது. குவைத்தின் பாதுகாப்பு அமைச்சகம் இன்று காலை வெளியிட்ட அறிக்கையில் இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளது. ஜெட் விமானங்களின் பணியாளர்கள் “காயமின்றி உயிர் பிழைத்தனர்” என்றும், அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. சம்பவத்திற்கான காரணங்கள் குறித்து அறிய தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

உலகம்

அமெரிக்காவுக்கு ஆதரவாக 3 ஐரோப்பிய நாடுகள் களத்தில்!

  • March 2, 2026
  • 0 Comments

ஈரான் நடத்திவரும் ஏவகணைத் தாக்குதல்களை பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் ஜேர்மனி ஆகிய நாடுகள் வன்மையாகக் கண்டித்துள்ளன. மேற்படிதாக்குதல்கள் நியாயமற்றவை எனக் குறிப்பிட்டுள்ள ஐரோப்பியத் தலைவர்கள், பிராந்தியத்தில் தற்காப்பு நடவடிக்கைகளை எடுக்க அமெரிக்காவுடன் இணைந்து செயல்பட முடிவு செய்துள்ளனர். இது தொடர்பில் மூன்று ஐரோப்பிய நாடுகளும் கூட்டு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளன. பிரிட்டன் பிரதமர் தனது நாட்டின் இராணுவத் தளங்களைப் பயன்படுத்த அமெரிக்காவிற்கு அனுமதி வழங்கியுள்ளார். அத்துடன், கட்டாரை நோக்கி பாய்ந்த ஈரானின் ஏவகணையொன்றை பிரிட்டன் படைகள் சுட்டு வீழ்த்தியுள்ளன.

உலகம்

லெபனான்மீதும் கை வைத்தது இஸ்ரேல்: தாக்குதலில் பலர் பலி!

  • March 2, 2026
  • 0 Comments

ஈரான்மீது போர் தொடுத்துள்ள இஸ்ரேல் Israel தற்போது லெபனான்மீதும் Lebanon தாக்குதல் நடத்தியுள்ளது. ஈரான் மீதான தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா அமைப்பு ஏவுகணை மற்றும் ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியது. ஹிஸ்புல்லா அமைப்பு லெபனானில் செயல்படுகின்றது. அவ்வமைப்பு ஈரான் ஆதரவு பெற்ற ஆயதபடையென கருதப்படுகின்றது. இந்நிலையில் மேற்படி தாக்குதலில் குறைந்தபட்சம் 31 பேர் பலியாகியுள்ளனர் என்று லெபனான் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. சுமார் 149 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். ஹிஸ்புல்லா அமைப்பின் இலக்குகள்மீதான தாக்குதல் […]

இலங்கை செய்தி

எரிபொருள் தட்டுப்பாடு இல்லை: அரசு விளக்கம்!

  • March 2, 2026
  • 0 Comments

நாட்டில் தேவையானளவு எரிபொருள் உள்ளது. எனவே, தட்டுப்பாடு தொடர்பில் வீண் அச்சம் கொள்ளவேண்டாம் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (2) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ Nalinda Jayatissa மேற்கண்டவாறு கூறினார். “ நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் என்ற வீண் அச்சத்தால் மக்கள் எரிபொருள் சேகரிப்பில் ஈடுபட்டுவருகின்றனர். அவ்வாறு அச்சம் கொள்ள தேவை இல்லை. தேவையானளவு எரிபொருள் இருப்பில் உள்ளது. எமது கப்பல்கள் மத்திய கிழக்கு […]

இலங்கை செய்தி

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போரை நிறுத்துமாறு இலங்கை அழைப்பு!

  • March 2, 2026
  • 0 Comments

“மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் நிறுத்தப்பட்டு, உலக அமைதி நிலைநிறுத்தப்பட வேண்டும் என அனைத்து தரப்புகளிடமும் கோருகின்றோம்.” – என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ Nalinda Jayatissa தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (02) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் சூழ்நிலை குறித்து கருத்து வெளியிட்ட அவர், “ எங்கு நடந்தாலும், எவர் நடத்தினாலும் போரை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. போரால் உயிரிழப்புகளும், […]

உலகம்

போருக்குள் நுழையும் வளைகுடா நாடுகள்: பகிரங்க எச்சரிக்கை!

  • March 2, 2026
  • 0 Comments

  ஈரானின் தாக்குதல்களுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என்று வளைகுடா நாடுகள் கூட்டாக அறிவித்துள்ளன. “பதற்றத்தைத் தணிக்க மேற்கொண்ட பலகட்ட தூதரக முயற்சிகளையும் மீறி, ஈரான் தாக்கி வருகிறது. எங்களின் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையில் எவ்வித சமரசத்திற்கும் இடமில்லை. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க ஒன்றிணைந்து செயல்பட உள்ளோம்” என்றும் மேற்படி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்தியது. மத்திய கிழக்கு பிராந்தியத்தில் […]

இந்தியா

ஈரான் உச்ச தலைவர் கொல்லப்பட்டதை கண்டித்து ஜம்மு காஷ்மீரில் போராட்டம்!

  • March 2, 2026
  • 0 Comments

ஈரான் உச்ச தலைவர் அயத்துல்லா அலி காமேனி கொல்லப்பட்டதைக் கண்டித்து ஜம்மு காஷ்மீர் முழுவதும் நேற்று போராட்டங்கள் இடம்பெற்றன. இதன்போது அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பட்டன. வேலை நிறுத்த போராட்டத்துக்கு நாளை அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, ஸ்ரீநகரில் செல்போன் இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு 2 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா அமைதி காக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். அதேவேளை, பாகிஸ்தானிலும் சில இடங்களில் போராட்டங்கள் […]

உலகம்

ஈரான்மீதான போரில் ஆஸ்திரேலியா பங்கேற்கவில்லை!

  • March 2, 2026
  • 0 Comments

இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து ஈரானில் நடத்திய தாக்குதலில் தமது நாடு பங்கேற்கவில்லை என்று ஆஸ்திரேலியா Australia தெரிவித்துள்ளது. மேற்படி தாக்குதல் தொடர்பில் முன்கூட்டியே ஆஸ்திரேலியாவுக்கு தெரியப்படுத்தப்படவில்லை என்று ஆஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் பெனி வோங் Penny Wong தெரிவித்தார். ஈரான் மக்களின் உரிமைகளைப் பறித்த அந்தத் தலைவரின் மறைவுக்காக ஆஸ்திரேலியப் பிரதமர் அனுதாபம் தெரிவிக்கப்போவதில்லை என்று வெளிப்படையாகக் கூறியுள்ளார். அதேவேளை, ஈரான்மீது ஆஸ்திரேலியா பல பொருளாதார தடைகளை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.  

செய்தி

மத்திய கிழக்கு நிலைவரம் குறித்து இலங்கை கழுகுப் பார்வை: விசா காலம் நீடிப்பு!

  • March 2, 2026
  • 0 Comments

  மத்திய கிழக்கு மற்றும் வளைகுடா பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள அமைதியற்ற சூழ்நிலைக்கு மத்தியில் இலங்கையிலுள்ள வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு மற்றும் நலன்புரி விடயங்கள் தொடர்பில் இலங்கை அவதானம் செலுத்தியுள்ளது. அத்துடன், வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தொழிலாளர்களின் பாதுகாப்பு மற்றும் நலன்புரி தேவைகளை கவனிப்பதற்கும் அரசாங்கம் விசேட நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது. ஜனாதிபதி அலுவலகத்தில் சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் ருவன் ரணசிங்க மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க ஆகியோரின் தலைமையில் நேற்று நடைபெற்ற விசேட […]

error: Content is protected !!