ஐரோப்பா

அமெரிக்காவின் கோல்டன் டோம் திட்டம் – எதிர்வினையாற்றிய ரஷ்யா!

  • February 3, 2026
  • 0 Comments

கிரீன்லாந்தில் ஆயுதங்களை வைக்க வொஷிங்கடன் நடவடிக்கை எடுத்தால் மொஸ்கோ பதிலளிக்க தயாராக உள்ளது என ரஷ்ய மூத்த அதிகாரி ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஆர்க்டிக் தீவில் கோல்டன் டோம் (Golden Dome) ஏவுகணை பாதுகாப்புத் திட்டத்தை செயற்படுத்த அமெரிக்கா நடவடிக்கை எடுத்தால் ரஷ்யா இராணுவ நடவடிக்கைகளை எடுக்கும் என்று துணை வெளியுறவு அமைச்சர் செர்ஜி ரியாப்கோவ் (Sergey Ryabkov) எச்சரிக்கை விடுத்துள்ளார். சீனாவில் உள்ள ரஷ்ய தூதரகத்தில் இன்று செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர் இவ்வாறு கூறியுள்ளார். […]

அரசியல் இலங்கை செய்தி

சிறிதரனுக்கு வெட்டு: நாடாளுமன்ற குழு தலைவர் பதவி சாணக்கியனிடம் கையளிப்பு!

  • February 3, 2026
  • 0 Comments

இலங்கை தமிழரசுக் கட்சியின் ITAK நாடாளுமன்றக் குழு தலைவராக இரா சாணக்கியன் எம்.பி. R. Chanakyan நியமிக்கப்பட்டுள்ளார். மேற்படி பதவியை சிவஞானம் சிறிதரன் Sivagnanam Siridaran வகித்து வந்த நிலையிலேயே அவரிடமிருந்து அது பறிக்கப்பட்டு, சாணக்கியனுக்கு வழங்கப்பட்டுள்ளது. இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பதில் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், M.A. Sumanthiran இது தொடர்பில் சபாநாயகருக்கு கடிதம் மூலம் தெரியப்படுத்தியுள்ளார். அரசியலமைப்பு பேரவையில் Constitutional Council உறுப்பினராக இருக்கும் சிறிதரன், தமிழரசுக் கட்சியின் முடிவுக்கு எதிராக செயல்படுகின்றார் என […]

உலகம்

தெஹ்ரானில் உள்ள வணிக சந்தையில் தீவிபத்து!!

  • February 3, 2026
  • 0 Comments

ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள வணிக சந்தையொன்றில் தீவிபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பான காணொளிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகின்றன. ஈரான் அரசு செய்தி நிறுவனமான IRNA படி, உள்ளூர் நேரப்படி மதியம் 12:00 மணிக்கு (GMT 08:30) தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தீவிபத்தால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர். சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை அந்நாட்டு அதிகாரிகள் முன்னெடுத்து வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  

அரசியல் இலங்கை செய்தி

வடக்கு மாகாண முதல்வர் வேட்பாளராக களத்தில்: மீண்டும் உறுதிப்படுத்தினார் அர்ச்சுனா!

  • February 3, 2026
  • 0 Comments

வடக்கு மாகாணசபைத் தேர்தலில் முதல்வர் வேட்பாளராக களமிறங்கவுள்ளதை நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதன் Archuna Ramanathan மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார். தனியார் தொலைக்காட்சியொன்று வழங்கிய நேர்காணலின்போதே அவர் மேற்படி தகவலை வெளியிட்டார். “மாகாணசபைத் தேர்தலை நடத்தப்பட வேண்டும். ஆனால் அரசாங்கத்துக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு இல்லையென்பதால் அது நடக்குமா என்பது சந்தேகமே.” எனவும் அவர் கூறினார். “தேர்தல் நடத்தப்படும்பட்சத்தில் வடக்கு மாகாணசபை முதல்வர் வேட்பாளராக போட்டியிடுவேன். மக்கள் விரும்பினால் என்னை ஏற்பார்கள், இல்லையேல் நிராகரிப்பார்கள். மக்கள் ஆணை வழங்கினால் […]

இலங்கை செய்தி

சுதந்திரம் கிடைக்காததாலேயே தமிழர்கள் ஆயுதம் தூக்கி வேண்டி ஏற்பட்டது – இயக்குநர் ராஜேந்தர்

  • February 3, 2026
  • 0 Comments

ஈழ தேசத்தில் நாளைய தினம் அனுஷ்டிக்கப்பட உள்ள கறுப்பு தினத்திற்கு பூரண ஆதரவை வழங்குகிறேன் என தென்னிந்திய பிரபல இயக்குநரும், தழிழ்நாடு இலட்சிய திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவருமான ரி.ராஜேந்தர் தெரிவித்துள்ளார். இலங்கையில் தமிழ் மக்களுக்கு சுதந்திரம் என்ற ஒன்று கிடைக்காத காரணத்தினாலே அவர்கள் ஆயுதப் போராட்டத்திற்குள் தள்ளப்பட்டார்கள் என்றும் அவர் கூறியுள்ளார். இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர், “நாளைய தினம் இந்த சுதந்திர தினத்தை கொண்டாடுவதால் தமிழ் மக்களுக்கு என்ன சந்தோசம் கிடைத்துவிடும்? விடிவு […]

உலகம்

லெபனானில் இரண்டு கிராமங்களை தாக்கிய இஸ்ரேல்! ஹிஸ்புல்லா குறிவைக்கப்பட்டதா?

  • February 3, 2026
  • 0 Comments

லெபனானின் இரண்டு பகுதிகளில் நேற்று இஸ்ரேலிய இராணுவம் தாக்குதல் நடத்தியதாக  செய்திகள் வெளியாகியுள்ளன. கஃபர் டெப்னிட் (Kfar Tebnit) மற்றும் ஐன் கானா (Ain Qana) கிராமங்களில் இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. தாக்குதல்களுக்கு முன்பு இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் (IDF) இரண்டு கிராமங்களிலிருந்தும் வெளியேற்ற உத்தரவுகளை பிறப்பித்ததாக கூறப்படுகிறது. அப்பகுதிகளில் லெபனான் ஆயுத குழுவின் செயற்பாடுகளுக்கு பதிலளிக்கும் விதமாக  ஹிஸ்புல்லாவுக்குச் சொந்தமான “இராணுவ உள்கட்டமைப்பை” குறிவைத்து  இந்த தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இதனை மறுத்துள்ள  […]

இலங்கை செய்தி

வடக்கு கிழக்கு தமிழர்களுக்கு இதுவரை சுதந்திரம் கிடைக்கவில்லை- மாணவர்களின் கவனயீர்ப்பிற்கு அணிதிரளுமாறு ரவிகரன் எம்.பி அழைப்பு

  • February 3, 2026
  • 0 Comments

இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்து 78 ஆண்டுகள் ஆகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற போதும் வடக்கு, கிழக்கிலுள்ள தமிழ் மக்களுக்கு இதுவரை சுதந்திரம் கிடைக்கவில்லையென வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் சுட்டிக்காட்டியுள்ளார். “ஸ்ரீலங்காவின் சுதந்திரநாள் தமிழர்களுக்கு கரிநாள்” எனும் கவனயீர்ப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கும் வகையில் ஊடகங்களுக்கு இன்று கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனை சுட்டிக்காட்டினார். இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர், நாளையதினம் யாழ்ப்பாண பல்கலைக் கழகமாணவர்களின் ஒழுங்குபடுத்தலில் வடக்கில் கிளிநொச்சியிலும், கிழக்கில் மட்டக்களப்பிலும் இடம்பெறவுள்ள “ஸ்ரீலங்காவின் சுதந்திரநாள் […]

#SleepTourism2026 #HealthWellness #தூக்கசுற்றுலா #LifestyleNews #MentalHealth #FutureTrends #உறக்கம் வாழ்வியல்

“தூங்குவதற்காகவே வெளிநாட்டுப் பயணம்? 2026-ன் விந்தையான மாற்றம்!”

  • February 3, 2026
  • 0 Comments

இன்று உலகளவில் சுற்றுலா என்பது ‘பரபரப்பாக இடங்களைப் பார்ப்பது’ என்பதிலிருந்து விலகி, ‘அமைதியாக ஓரிடத்தில் தூங்குவது’ என்ற நிலைக்கு மாறியுள்ளது. 2026-ல் இது ஒரு டிரில்லியன் டாலர் மதிப்புள்ள வர்த்தகமாக உருவெடுத்துள்ளது. அமெரிக்கா முதல் ஜப்பான் வரை வேலைப்பளு மற்றும் (‘Hyperconnectivity’) எப்போதும் இணையத்தில் இணைந்திருப்பதன் காரணமாக மக்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். ஒரு காலத்தில் விலையுயர்ந்த கார் அல்லது கைக்கடிகாரம் அந்தஸ்தாகக் கருதப்பட்டது. ஆனால் 2026-ல், “8 மணி நேரம் நிம்மதியாகத் தூங்குவது” என்பது […]

இலங்கை செய்தி

தொழில்சார் கௌரவம் பாதுகாக்கப்படும்: ஜனாதிபதி உறுதி!

  • February 3, 2026
  • 0 Comments

பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கத்தின் பிரதிநிதிகளுக்கும் , ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பு இன்று (03) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அழைப்பிற்கிணங்கவே மேற்படி சந்திப்பு நடைபெற்றது. தொழில்முறை ரீதியாகத் தாம் தற்போது பல்வேறு தொழில்சார் மற்றும் சமூகப் பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளதாக சங்கப் பிரதிநிதிகள் இதன்போது சுட்டிக்காட்டினர். பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் பிரச்சினைகள் ஜனாதிபதி செவிமடுத்தார். அனைத்து உத்தியோகத்தர்களினதும் தொழில்சார் கௌரவத்தையும் அந்தஸ்தையும் பாதுகாப்பதே அரசாங்கத்தின் நோக்கம் எனக் குறிப்பிட்டார். “ பாடசாலைகளில் […]

இலங்கை

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் : மைத்திரிக்கு சாதகமாக வந்த தீர்ப்பு!

  • February 3, 2026
  • 0 Comments

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை மேன்முறையீட்டு நீதிமன்றம் இரத்து செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது. ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்களைத் தடுக்கத் தவறியமை தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட தனிப்பட்ட முறைப்பாடுகள் தொடர்பில் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்நிலையில் இதனை எதிர்த்து மைத்திரிபால சிறிசேன மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு இன்று 05 நீதிபதிகள் முன்னிலையில்  […]

error: Content is protected !!