ஐரோப்பா

ஐரோப்பிய நாடுகளுக்கான எரிவாயு விநியோகத்தை நிறுத்தும் ரஷ்யா!

  • March 6, 2026
  • 0 Comments

ஐரோப்பிய சந்தைகளுக்கான எரிவாயு விநியோகத்தை நிறுத்த ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் பரிந்துரைத்துள்ளார். அதற்கு பதிலாக “நம்பிக்கைக்குரிய” உலகளாவிய சந்தைகளை நாட  தீர்மானித்துள்ளதாக தெரிவித்துள்ளார். ஷ்ய எண்ணெய் இறக்குமதியை நிரந்தரமாகத் தடை செய்வதற்கான சட்டப்பூர்வ முன்மொழிவை ஏப்ரல் மாதம் 15 ஆம் திகதி தாக்கல் செய்ய ஐரோப்பிய ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ள நிலையில் புட்டினின் கருத்துக்கள் வந்துள்ளன. இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்டுள்ள புட்டின், “இப்போது மற்ற சந்தைகள் திறக்கப்படுகின்றன. மேலும் இப்போதே ஐரோப்பிய சந்தைக்கு […]

இலங்கை செய்தி

இஸ்ரேல், ஈரான் வெளிவிவகார அமைச்சர்களுடன் விஜித ஹேரத் பேச்சு!

  • March 6, 2026
  • 0 Comments

  இஸ்ரேல் Israel மற்றும் ஈரான் Iran ஆகிய நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களுடன் இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் Vijith Herath பேச்சு நடத்தியுள்ளார். தொலைபேசி ஊடாகவே நேற்று இக்கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பான தகவல்களை தனது எக்ஸ் தள பக்கத்தில் அமைச்சர் விஜித ஹேரத் வெளியிட்டுள்ளார். இஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சர் கிதியோன் சார் உடனான கலந்துரையாடலின்போது, அந்நாட்டிலுள்ள இலங்கைத் தொழிலாளர்களின் பாதுகாப்பு பற்றி கவனம் செலுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்புக்குரிய உத்தரவாதம் வழங்கப்பட்டது என அமைச்சர் விஜித […]

ஐரோப்பா முக்கிய செய்திகள்

அசேலம் நிராகரிக்கப்பட்ட நிலையில் பிரித்தானியாவை விட்டு வெளியேற விரும்புவோருக்கு சிறப்பு சலுகை அறிவிப்பு!

  • March 6, 2026
  • 0 Comments

அசேலம் நிராகரிக்கப்பட்ட புகலிடக் கோரிக்கையாளர்கள் தங்கள் சொந்த நாட்டிற்கு திரும்புவதற்கு ஏதுவாக பிரித்தானிய அரசாங்கம் புதிய சலுகையை அறிவித்துள்ளது. வெஸ்ட்மின்ஸ்டரில் நேற்று நடந்த ஒரு நிகழ்வில் உள்துறை செயலாளர் சபானா மஹ்மூத் இதனை அறிவித்துள்ளார். இதன்படி குழந்தைகளைக் கொண்ட புகலிடக் கோரிக்கையாளர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டிருந்தால், அவர்கள் , நாட்டை விட்டு விரைவாக வெளியேற ஏதுவாக 40000 பவுண்ட்ஸ் வழங்கப்படும் என அறிவித்துள்ளார். இந்த சலுகை நாட்டைவிட்டு நாடுகடத்தப்படுவோம் என்ற சந்தேகம் உள்ளவர்களுக்கும் பொருந்தும். உள்துறைச் செயலாளரின் குடியேற்ற […]

இந்தியா செய்தி

ஈரான் போர்க்கப்பல் மூழ்கடிப்பு: இந்திய கடற்படை கூறுவது என்ன?

  • March 6, 2026
  • 0 Comments

ஈரான் போர்க்கப்பல் Iranian warship மூழ்கிவிட்டது என தகவல் கிடைத்த கையோடு இந்திய கடற்படையும் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட சென்றது என அந்நாட்டு கடற்படை Indian Navy அறிவித்துள்ளது. இந்து சமுத்திரத்தில் இலங்கையின் தெற்கு கடற் பரப்புக்கு அப்பால் உள்ள சர்வதேச கடற்பரப்பில் ஈரான் போர்க்கப்பலை நீர்மூழ்கி கப்பல் தாக்குதல்மூலம் அமெரிக்கா மூழ்கடித்தது. கூட்டு கடற்படை பயிற்சியை முடித்துக்கொண்டு இந்தியாவில் இருந்து திரும்பும்வழியிலேயே மேற்படி கப்பல் தாக்குதலுக்கு இலக்கானது. இது தொடர்பில் இந்தியாமீதும் விமர்சன கோணத்தில் கருத்துகள் […]

உலகம்

ஈரான் – இஸ்ரேல் போர் : 30இற்கும் மேற்பட்ட போர் கப்பல்கள் மூழ்கடிப்பு!

  • March 6, 2026
  • 0 Comments

ஈரானுக்கு எதிரான அமெரிக்க மற்றும் இஸ்ரேலின் போரின் போது இதுவரை 30க்கும் மேற்பட்ட ஈரானிய கப்பல்கள் மூழ்கடிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க இராணுவம் நேற்று தெரிவித்துள்ளது. போரின் முதல் நாளிலிருந்து ஈரானின் பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதல்கள் 90% குறைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மத்திய கிழக்கில் அமெரிக்கப் படைகளை வழிநடத்தும் அமெரிக்க அட்மிரல் பிராட் கூப்பர் (Admiral Brad Cooper) இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

உலகம் செய்தி

ட்ரம்ப்பை கொல்லுங்கள்: ஈரான் மதகுரு பகிரங்க அழைப்பு!

  • March 6, 2026
  • 0 Comments

அமெரிக்க ஜனாதிபதி கொல்லப்பட வேண்டும் என ஈரான் மதகுரு ஒருவர் விடுத்துள்ள அழைப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரானின் மூத்த ஷியா மதகுருக்களில் ஒருவரான அயத்துல்லா அப்துல்லா ஜவாதி அமோலியே Ayatollah Abdollah Javadi Amoli அரச தொலைக்காட்சியில் உரையாற்றும்போது இந்த அழைப்பை விடுத்துள்ளார். “நாம் இப்போது ஒரு பெரிய சோதனையின் விளிம்பில் இருக்கிறோம். இந்த ஒற்றுமையை நாம் முழுமையாகப் பாதுகாக்க வேண்டும். யூதர்களின ரத்தம் சிந்தப்பட வேண்டும், ட்ரம்பின் ரத்தம் சிந்தப்பட வேண்டும்.” எனவும் அவர் […]

ஆஸ்திரேலியா உலகம்

” ஈரான் போர்க்கப்பலை தாக்கிய அமெரிக்க நீர்மூழ்கிக்குள் ஆஸ்திரேலிய கடற்படை”

  • March 6, 2026
  • 0 Comments

இந்து சமுத்திரத்தில் ஈரானின் போர்க்கப்பல்மீது அமெரிக்காவின் நீர்மூழ்கி கப்பல் தாக்குதல் நடத்தும்போது குறித்த நீர்மூழ்கிக்குள் ஆஸ்திரேலிய கடற்படையினரும் இருந்துள்ளனர். இச்சம்பவமானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமது கடற்படை அதில் இருந்ததை ஆஸ்திரேலிய பிரதமர் Anthony Albanese உறுதிப்படுத்தியுள்ளார். எனினும், மேற்படி தாக்குதலில் ஆஸ்திரேலிய கடற்படை நேரடியாக பங்கேற்கவில்லை எனம் அவர் கூறினார். அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்கிடையில் இராணுவ கூட்டணி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இக்கூட்டணி ஆக்கஸ் AUKUS என அழைக்கப்படுகின்றது. இந்த ஆக்கஸ் திட்டத்தின்கீழ் அணுசக்தியில் இருந்து இயங்கக்கூடிய […]

உலகம்

மத்திய கிழக்கு போரை நிறுத்த சீனா களத்தில்!

  • March 6, 2026
  • 0 Comments

மத்திய கிழக்கு போரை நிறுத்த சீனா களத்தில்! மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கு மத்தியஸ்தம் வகிப்பதற்கு தாம் தயார் என சீனா அறிவித்துள்ளது. சீனாவின் இந்த அறிவிப்பானது போரில் புதிய திருப்பமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மத்திய கிழக்குப் பகுதியில் கடந்த 10 ஆண்டுகளாக இல்லாத வகையில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது. இந்நிலையில், ஈரானைக் கட்டுப்படுத்த அந்நாட்டின் ஏவுகணை உற்பத்தி மையங்கள், அணு சக்தி மையங்களை குறி வைத்து இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி […]

இலங்கை செய்தி

“ஈரான் கப்பலை இலங்கை பொறுப்பேற்றது தைரியமான மனிதாபிமான முன்னெடுப்பு”

  • March 6, 2026
  • 0 Comments

ஈரான் கப்பலை இலங்கை பொறுப்பேற்றமையானது தைரியமான மனிதாபிமான முன்னெடுப்பாகும் – என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். ஜனாதிபதியின் பங்கேற்புடன் நேற்றிரவு நடைபெற்ற விசேட ஊடக சந்திப்பின்போதே அவர் ஜனாதிபதி குறிப்பிட்டார். இதன்போது ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க கூறியவை வருமாறு, ” தற்போதைய மத்திய கிழக்கு மோதலின் போதும் சர்வதேச ரீதியிலான எந்தவொரு மோதல்களின் போதும் நாம் நடுநிலை வகிக்கும் நிலைப்பாட்டிலே இருந்தோம். எமது நிலம், எமது கடற்பரப்பு, எமது வான் பரப்பு என்பவற்றை மோதல்களின் போது […]

விளையாட்டு

இறுதிப் போட்டிக்கு இந்தியா தகுதிப் பெற்றது

  • March 6, 2026
  • 0 Comments

உலக கிண்ண இருபதுக்கு 20 தொடரின் இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி 7 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. மும்பையில்  இடம்பெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது. அதன்படி முதலில் துடுப்பாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 253 ஓட்டங்களை பெற்றது. இந்திய அணி சார்பில் துடுப்பாட்டத்தில் சஞ்சு சம்சன் 89 ஓட்டங்களையும், சிவம் டூபே 49 ஓட்டங்களையும், […]

error: Content is protected !!