உக்ரைன் முழுவதும் ரஷ்யா நடத்திய வான்வழித் தாக்குதல்களில் குழந்தைகள் உட்பட 9 பேர் மரணம்
உக்ரைன் முழுவதும் ரஷ்யப் படைகளின் வான்வழித் தாக்குதல்களில் குழந்தைகள் உட்பட ஒன்பது பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் பலர் காயமடைந்துள்ளனர் என்று அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். உக்ரைனின் டினிப்ரோபெட்ரோவ்ஸ்க்(Dnipropetrovsk) பகுதியில் நடந்த ரஷ்ய வான்வழித் தாக்குதலில் 11 மற்றும் 14 வயதுடைய இரண்டு குழந்தைகள் உட்பட நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். தென்மேற்கு ஒடேசா(Odesa) பகுதியில் ரஷ்ய ஜெட் விமானங்கள் பல வாகனங்களை குண்டுவீசித் தாக்கியதில் இரண்டு பேர் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் மூன்று பேர் காயமடைந்துள்ளனர் என்று உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். […]













