இலங்கை

இன்று முதல் மின்சாரக் கட்டணங்கள் அதிகரிப்பு

இன்று முதல் நாட்டில் மின்சாரக் கட்டணங்களை அதிகரிப்பதற்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

அதன்படி,  30 அலகுகளுக்கு கீழ்: 4.3% அதிகரிக்கப்பட்டு, ஒரு அலகுக்கான கட்டணம் 15 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

  • 30 – 60 அலகுகள்: 6.9% அதிகரிக்கப்பட்டு, ஒரு அலகு 45 ரூபாயாக வசூலிக்கப்படும்.
  • 61 – 90 அலகுகள்: 6.9% அதிகரிக்கப்பட்டு, ஒரு அலகு 120 ரூபாயாக உயர்ந்துள்ளது.
  • 91 – 180 அலகுகள்: 7.2% கட்டண உயர்வு அமுல்படுத்தப்பட்டுள்ளதுடன், இதற்கான கட்டணம் 420 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • 180 அலகுகளுக்கு மேல்: ஆகக்கூடிய அளவாக 25% கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏனைய துறைகளுக்கும் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன.

  1. கைத்தொழில் துறை: 8.7%
  2. விருந்தகங்கள் (Hotels): 9.9%
  3. அரச நிறுவனங்கள்: 14.4%

மதஸ்தலங்களைப் பொறுத்தவரை, 180 அலகுகளுக்குக் குறைவான மின்சாரப் பாவனைக்கு எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை.

எனினும், 180 அலகுகளுக்கு மேல் மின்சாரத்தைப் பயன்படுத்தும் மதஸ்தலங்களுக்கு 9.6% கட்டண உயர்வு அமுல்படுத்தப்பட்டுள்ளது.

Mahi

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!