போர் நிறுத்தம் கொண்டுவரப்படும்வரை தேர்தல் நடைபெறாது – ஜெலென்ஸ்கி திட்டவட்டம்!
உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான “மோசமான ஒப்பந்தத்தை” ஒரு பொது வாக்கெடுப்புக்காக முன்வைக்கப் போவதில்லை என்று கூறியுள்ளார்.
உறுதியான பாதுகாப்பு உத்தரவாதங்களும் போர்நிறுத்தமும் நிறுவப்பட்ட பின்னரே உக்ரைன் தேர்தல்களை நடத்தும் என்று அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
முனிச் பாதுகாப்பு மாநாட்டிற்கு முன்னதாக அவர் இந்த கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
போர் நிறுத்தம் தொடர்பான குறிப்பிட்ட நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட்டால், ஜனாதிபதித் தேர்தல்கள் மற்றும் ரஷ்யாவுடனான எந்தவொரு சமாதான ஒப்பந்தம், வாக்கெடுப்பு இரண்டிற்கும் உக்ரைன் தயாராக இருப்பதாக அவர் உறுதிப்பட தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே ட்ரம்ப் நிர்வாகம் உக்ரைனுக்கான ஆயுத விநியோகத்தை குறைத்துள்ள நிலையில், பல ஐரோப்பிய நாடுகள் ஆதரவு கரம் நீட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.





