மண்கவ்வியது CSK!
சென்னை சூப்பர் கிங்ஸ் Chennai Super Kings அணி தனது முதல் ஆட்டத்தில், ராஜஸ்தான் ராயல்ஸ் Rajasthan Royals அணியிடம் 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளது.
குவாஹாட்டியில் நேற்று நடைபெற்ற போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்து வீச்சை தெரிவு செய்தது.
இதற்கமைய துடுப்பெடுத்தாடிய சிஎஸ்கே அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக இருந்தது.
சஞ்சு சாம்சன் 6 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
சென்னை அணி 19.4 ஓவர்களில் 127 ஓட்டங்களைப் பெற்றது.
128 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் அணி 12.1 ஒவர்களில்களில் 2 விக்கெட்களை இழந்து வெற்றி பெற்றது.
15 வயதான வைபவ் சூர்யவன்ஷி 17 பந்துகளில், 5 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 52 ஓட்டங்களை பெற்றார்.





