கொழும்பில் நாளை ‘கிரிக்கெட் போர்’!
T-20 உலகக்கிண்ண தொடர்பில் பங்கேற்கவுள்ள இந்திய அணி India இலங்கை வந்துள்ளது.
T-20 உலகக்கிண்ண தொடர்பில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் Pakistan அணிகள் மோதும் – ஒட்டுமொத்த உலகமும் எதிர்பார்க்கும் போட்டி நாளை (15) நடைபெறவுள்ளது.
கொழும்பு ஆர்.பிரேமதாச Colombo (RPS) மைதானத்தில் இலங்கை நேரப்படி இரவு 7 மணிக்கு போட்டி ஆரம்பமாகும்.
உலக்கிண்ண தொடரில் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் பங்கேற்காது என அந்நாடு அறிவித்திருந்தது.
எனினும், இலங்கை முன்னெடுத்த இராஜதந்திர நகர்வுகளால் போட்டியில் விளையாட சம்மதம் தெரிவித்தது.
இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கிடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளதால் கிரிக்கெட் போட்டிகூட, ஒரு சமராகவே பார்க்கப்படுகின்றது.
எனவே, நாளைய ஆட்டத்தில் பரபரப்புக்கும், விறுவிறுப்புக்கும் பஞ்சம் இருக்காது என்றே எதிர்பார்க்கப்படுகின்றது.




