ஐரோப்பா செய்தி

பிரித்தானியாவில் இனி 04 நாள் வேலை – என்ன காரணம் தெரியுமா?

பிரித்தானியாவில் சில நிறுவனங்கள் வாரத்தில் 04 நாட்கள், 32 மணி நேர வேலை வாரம் முறையை அறிமுகப்படுத்தியுள்ளன.

திங்கட்கிழமை தொடக்கம் வெள்ளிக்கிழமை வரை காலை 09 மணி முதல் பிற்பகல் 05 மணி வரை வேலை செய்யும், பாரம்பரிய மாதிரி தற்போதைய நவீன வாழ்க்கைக்கு பொருந்தவில்லை என்று கூறப்படுகிறது.

ஒக்ஸ்போர்ட் நகரை தளமாகக் கொண்ட மனிதவள ஆலோசகர் ஜோனா மண்டி (Jonna Mundy)மூன்று ஆண்டுகளுக்கு முன்பே இந்த முறையை ஏற்றுக்கொண்டார்.

இதேவேளை, ஊழியர்கள் ஐந்து நாட்களில் செய்யும் வேலையை விடவும் நான்கு நாட்களில் அதிக செயல்திறன் காட்டுகிறார்கள் என கூறிய அவர் இந்த முறை சிறந்த ஊழியர் ஈர்ப்பு மற்றும் தக்கவைப்பு வழியென்றும் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் நான்கு நாட்கள் வேலை வாரம் அனைத்து தொழில்களுக்கும் பொருத்தமில்லை என்றும் குறிப்பாக சில்லறை விற்பனை, விருந்தோம்பல் மற்றும் பராமரிப்பு துறைகள் இதனால் சிரமத்தை எதிர்கொள்ளலாம் என ஹென்லி வணிகப் பாடசாலை ஆய்வுகள் கூறுகின்றன.

இந்நிலையில், பிரித்தானியாவில் 250 க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் நான்கு நாட்கள் வேலை வாரத்துக்குப் மாறிவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முறைமையால் உற்பத்தித்திறன் அதிகரிப்பதும், மன அழுத்தம் குறைவதும், வேலை வாழ்க்கை சமநிலை மேம்படும் என்பதை ஆய்வுகள் காட்டுகின்றன.

Sainth

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!