இலங்கை செய்தி

NPP அரசின் வேலைத்திட்டத்துக்கு போரா சமூகம் பாராட்டு!

போரா சமூகத்தின் ஆன்மீகத் தலைவர் கலாநிதி சங்கைக்குரிய செய்யதினா முபத்தல் சைபுதீன் சாகேப்புக்கும், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று (10) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்தியா, பாகிஸ்தான், அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், கனடா, இலங்கை மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகளில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான போரா சமூக உறுப்பினர்கள் வாழ்ந்து வருகின்றனர்.

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுடன் சிநேகபூர்வமாக கலந்துரையாடிய சங்கைக்குரிய செய்யதினா முபத்தல் சைபுதீன் சாகேப் , இலங்கையின் புதிய சமூக மற்றும் பொருளாதார மாற்றத்திற்காக ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் முன்னெடுத்து வரும் வேலைத்திட்டங்களைப் பாராட்டினார்.

அத்துடன், போதைப்பொருள் அச்சுறுத்தலுக்கு எதிராகவும், மோசடி மற்றும் ஊழல்களைத் தடுப்பதற்கும் அரசாங்கம் முன்னெடுக்கும் விரிவான வேலைத்திட்டங்களைப் பாராட்டியதுடன், அதற்காக தனது ஆசிகளையும் வழங்கினார்.

மேலும், இலங்கையில் வாழும் போரா சமூகத்தினருக்கும் ஏனைய சமூகத்தினருக்கும் இடையிலான நீண்டகால உறவுகள் குறித்தும், நாட்டின் பொருளாதாரத்திற்கு போரா சமூகத்தினர் வழங்கி வரும் பங்களிப்புகள் குறித்தும் ஆன்மீகத் தலைவர் ஜனாதிபதியிடம் விளக்கினார்.

இங்கு கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க , போரா சமூகத்தின் ஆன்மீகத் தலைவர் சங்கைக்குரிய செய்யதினா முபத்தல் சைபுதீன் சாகேப் அவர்கள் இலங்கைக்கு விஜயம் செய்தமைக்காக தனது கௌரவபூர்வமான நன்றிகளைத் தெரிவிப்பதாகக் குறிப்பிட்டார்.

இந்த நிகழ்வில் போரா சமூகத்தின் தலைவர்கள் உள்ளிட்ட பிரதிநிதிகள் கலந்துகொண்டதுடன், இலங்கை அரசாங்கத்தின் சார்பில் பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலி, மேல் மாகாண ஆளுநர் ஹனீப் யூசுப் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!