செய்தி தமிழ்நாடு

ஜனநாயகன் படத்துக்கு எதிராக பெரும் சூழ்ச்சி – மக்களிடம் நீதி கோரும் விஜய்

“என் கடைசி படமான ஜனநாயகன் வெளிவந்தால், மனதுக்கு நெருக்கமான சொந்த பந்தங்களான நாம், நெஞ்சுக்கு நெருக்கமாகிவிடுவோம்.

நாம் நெருக்கமாகி தேர்தலில் மிகப் பெரிய ஆயுதமாக மாறிவிடுமோ என்பதற்காக ஒரு கூட்டு சூழ்ச்சி நடக்கிறது.

உங்களுக்காக நீதி கேட்க வந்த எனக்கும்தான் நீதி வேண்டும்” என திருச்சியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் தவெக தலைவர் விஜய் ஆதங்கம் வெளியிட்டார்.

திருச்சி கிழக்கு தொகுதியில் உள்ள மரக்கடை எம்ஜிஆர் சிலை முன்பு நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,

“தமிழகத்தில் எரிவாயு சிலிண்டர் பிரச்சினை பெரிதாக இருக்கிறது. எரிவாயு சிலிண்டர் பிரச்சினையால் ஏராளமான டீக்கடைகள், ஹோட்டல்கள் மூடப்பட்டுள்ளன.  இதனால் எவ்வளவு கஷ்டங்கள், நஷ்டங்கள் ஏற்பட்டுள்ளது. பாஜக மற்றும் திமுக முன்னெச்சரிக்கையாக இருந்திருந்தால் எரிவாயு தட்டுப்பாட்டை கட்டுப்படுத்தி இருக்கலாம்.

இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலினிடம் கேட்டால் நமக்கும் அதுக்கும் தொடர்பு இல்லை என்பார். அவரது வீட்டில் ஒரு ரெய்டு, ஒரு பிரச்சினை என்றால் டெல்லிக்கு பறந்து சென்று வருவார். தமிழக முதல்வர் எரிவாயு சிலிண்டர் பிரச்சினைக்கு டெல்லிக்கு பறந்து சென்று வந்தால்  பிரயோஜனமாக இருக்கும். எதையெல்லாம் செய்ய முடியாதோ, அதையெல்லாம் பொய் வாக்குறுதியாக கொடுத்து ஏமாற்றுவது முதல்வருடைய வேலை.

பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத, அடிப்படை வசதிகள் செய்யாத திமுக அரசை நாம் தூக்கி எறியவேண்டும். திருச்சியை சேர்ந்த ஒரு அமைச்சர் இருக்கிறார். நகராட்சி துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி கோடிக்கணக்கான ரூபாய் இலஞ்சமாக பெற்று, தகுதியானவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்காமல் செய்திருக்கிறார். இது எவ்வளவு பெரிய ஏமாற்று வேலை.

இளைஞர்கள், இளம்பெண்களின் வேலை வாய்ப்புகளை பறித்த ஸ்டாலின் அரசை தூக்கி எறியவேண்டும். பாதுகாப்பு இல்லாத, சட்டம் – ஒழுங்கு இந்த அரசை தூக்கி எறிய வேண்டும். நகராட்சித் துறையில் மட்டும் ரூ.1,000 கோடி ஊழல் என்றால் மற்ற துறைகளை எடுத்து பார்த்தால் தலைசுற்றி போய்விடும்.

எனது சொந்த பந்தமான உங்களிடம் உரிமையுடன் ஒரே ஒரு வாய்ப்பு கொடுங்கள் என்று கேட்கிறேன். இந்த தேர்தலில் ஏலத்தில் எடுத்துள்ள கல்லாபெட்டி கூட்டணியோடு சேர்ந்து, ‘மற்றும் பலர்’ கூட்டணியோடு கள்ள கூட்டணியாக சேர்ந்து எல்லோரும் ஒன்று சேர்ந்து உங்கள் விஜய்யை எதிர்க்கின்றனர்” என்றார்.

Sainth

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!