ராணுவ நடவடிக்கை: வான்வெளியை பயன்படுத்த Austria தடை! அமெரிக்கா கொதிப்பு!
ஈரான்மீதான ராணுவ நடவடிக்கைகளுக்காகத் தமது வான்வெளியைப் பயன்படுத்த அமெரிக்கா விடுத்த கோரிக்கையை Austria நிராகரித்துள்ளது.
தமது நாட்டின் நடுநிலைத்தன்மைக் கொள்கையைப் பின்பற்றி ஆஸ்திரிய பாதுகாப்பு அமைச்சு இந்த முடிவை எடுத்துள்ளது.
அமெரிக்கப் போர் விமானங்களுக்குத் தனது வான்வெளியைப் பயன்படுத்த ஸ்பெயின் தடை விதித்துள்ளதுடன், இத்தாலியும் தனது தளங்களைப் பயன்படுத்த அனுமதி மறுத்துள்ளது.
இந்நிலையிலேயே ஆஸ்திரியாவும் Austria இந்த முடிவை எடுத்துள்ளது.
ஐரோப்பிய நாடுகள் அமெரிக்காவின் இந்த ராணுவ முயற்சிகளுக்குத் தங்களது ஆதரவை வழங்க மறுப்பதையும், தன்னாட்சி முடிவுகளை எடுப்பதையும் இந்த முடிவு வெளிப்படுத்துகின்றது என நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அதேவேளை, ஈரான்மீதான ராணுவ நடவடிக்கைக்கு ஐரோப்பிய நாடுகள் ஒத்துழைப்பு வழங்கவில்லை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் Donald Trump ஏற்கனவே கடும் அதிருப்தி வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.





