ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டது : ஈரான் அதிரடி
ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) மூடப்பட்டுள்ளதாகவும், அந்த நீர்வழிப் பாதையூடாகப் பயணிக்கும் எவரும் “கடுமையான நடவடிக்கைகளை” எதிர்கொள்ள நேரிடும் என்றும் ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படை (IRGC) எச்சரித்துள்ளது.
இஸ்ரேல் – அமெரிக்க கூட்டணியை ஆதரிக்கும் நாடுகளின் துறைமுகங்களுக்கு செல்லும் அல்லது அங்கிருந்து வரும் எந்தக் கப்பல்களும் இந்நீரிணை வழியாகச் செல்ல அனுமதிக்கப்படாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மூன்று கொள்கலன் கப்பல்கள் எச்சரிக்கையினால் திரும்பிச் செல்லவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.




