ஆர்டெமிஸ் II – மீண்டும் நிலவை நோக்கிய மனிதர்களின் பயணம்
Artemis II mission திட்டத்தில் பங்கேற்ற நான்கு விண்வெளி வீரர்கள், தங்களது Orion spacecraft விண்கலத்தின் பிரதான இயந்திரத்தை வெற்றிகரமாக இயக்கியதைத் தொடர்ந்து, பூமியின் சுற்றுவட்டப்பாதையை விட்டு வெளியேறினர்.
“டிரான்ஸ்லூனார் இன்ஜெக்ஷன் (TLI)” எனப்படும் இந்த முக்கிய கட்டம் சுமார் 5 நிமிடம் 55 வினாடிகள் நீடித்து, “குறைபாடற்ற முறையில்” நிறைவேற்றப்பட்டதாக நாசாவின் டாக்டர் லோரி கிளேஸ் தெரிவித்தார்.
விண்கலத்திலிருந்து பேசிய கனடிய விண்வெளி வீரர் Jeremy Hansen, “நிலவை நோக்கிய எங்கள் பயணம் சிறப்பாக நடைபெற்று வருகிறது; நாங்கள் நன்றாக உள்ளோம்” எனக் கூறினார்.
தற்போது, விண்கலம் நிலவின் மறுபக்கத்தைச் சுற்றி பூமிக்குத் திரும்பும் வகையிலான ஒரு வளையப் பாதையில் பயணிக்கிறது. 1972க்கு பிறகு மனிதர்கள் பூமியின் சுற்றுவட்டப்பாதைக்கு வெளியே பயணிக்கும் முதல் முயற்சியாக இது அமைந்துள்ளது.
ஓரியனிலிருந்து ஒளிபரப்பப்பட்ட நேரலையில், விண்கலம் தொலைவுக்குச் செல்லச் செல்ல பூமி மெதுவாகச் சிறிதாகத் தோன்றும் காட்சி பதிவாகியுள்ளது.
“இந்தப் பயணத்தில் பலர் செய்த கடின உழைப்பின் பலனை நாங்கள் உணர்கிறோம். மனிதகுலம் மீண்டும் தன்னுடைய திறனை நிரூபித்துள்ளது,” என ஹேன்சன் கூறினார்.
பயணத்திற்கு முன், விண்கலம் ஒரு நாள் “உயர் புவி சுற்றுப்பாதையில்” இருந்து, அதன் இயந்திரங்கள், வழிசெலுத்தல் மற்றும் உயிர் ஆதரவு அமைப்புகள் அனைத்தும் சோதிக்கப்பட்டன. இறுதியாக அனுமதி வழங்கப்பட்டதும், முக்கிய இயந்திரம் இயக்கப்பட்டு, நிலவை நோக்கிய இறுதி பயணம் தொடங்கியது.




