ஈரானில் அரசுக்கு எதிரான போராட்டம் – தருணம் பார்த்து காத்திருக்கும் அமெரிக்கா!
ஈரான் ஜனாதிபதி அயதுல்லா கமேனி (Ayatollah Khamenei) பதவி விலகக்கோரியும், முடியாட்சியை வலியுறுத்தியும் அந்நாட்டு மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது ட்ரூத் சோசியல் மீடியாவில் பதிவிட்டுள்ள கருத்து வைரலாகி வருகிறது.
குறித்த பதிவில், “அமைதியான போராட்டக்காரர்களை ஈரான் சுட்டுக் கொன்றால், அது அவர்களின் வழக்கம், அமெரிக்கா அவர்களை மீட்கும்” என்று தெரிவித்துள்ளார்.
2018 ஆம் ஆண்டு முதல் அமெரிக்கா, ஈரான் மீது பொருளாதார தடைகளை அமுல்படுத்தியுள்ளது. இது அந்நாட்டின் பொருளாதாரத்தில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
சமீபகாலமாக அமெரிக்க டொலருக்கு நிகரான ஈரானின் (ரியால்) நாணயம் வீழ்ச்சியடைந்துள்ளது. இதனையடுத்து அந்நாட்டு மக்கள் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டத்தில் இறங்கியுள்ளனர். இந்த போராட்டம் ஐந்தாவது நாளாக தொடர்கிறது.
போராட்டக்காரர்களுக்கும், கவால்துறையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு 07 பேர் உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்தி
ஈரானில் 05ஆவது நாளாக தொடரும் போராட்டம் – முடியாட்சியை மீள கோரும் மக்கள்!





