பாடசாலை மாணவிகளுக்கு இலவச சானிட்டரி நாப்கின்கள் (sanitary napkins) வழங்கும் திட்டம் குறித்த அறிவிப்பு!
பாடசாலை மாணவிகளுக்கு சானிட்டரி நாப்கின்களை வழங்கும் தேசிய திட்டம், 2024 ஆம் ஆண்டு கல்வி அமைச்சினால் தொடங்கப்பட்டது.
இது 2026 ஆம் ஆண்டும் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்று பிரதமர் டாக்டர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
பாடசாலை மாணவிகளிடையே மாதவிடாய் சுகாதாரத்தை மேம்படுத்துவதற்கான திட்டம் குறித்த கலந்துரையாடலில் உரையாற்றும் போதே பிரதமர் இதனை அறிவித்தார்.
இது தொடர்பில் பிரதமரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளதாவது,
இந்த முயற்சி கிராமப்புற, தோட்ட மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய பகுதிகளில் உள்ள பாடசாலை மாணவிகளை இலக்காகக் கொண்டுள்ளது.
மேலும் இந்த திட்டம் தற்போது நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் 6 ஆம் வகுப்புக்கு மேல் உள்ள ஒரு மில்லியனுக்கும் அதிகமான மாணவிகளை உள்ளடக்கியது. இதற்காக 1.44 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.





