வானில் ஏற்படவுள்ள அதிசயம் – நயாகரா நீர்வீழ்ச்சிக்கு ஒரு மில்லியன் மக்கள் எதிர்பார்ப்பு
வட அமெரிக்காவின் நயாகரா நீர்வீழ்ச்சிக்கு இயற்கையின் அபூர்வ நிகழ்வான சூரிய கிரகணத்தை காணும் வாய்ப்பு, அடுத்த மாதம் கிடைக்கவுள்ளது.
இதன் போது, சுமார் ஒரு மில்லியன் மக்களை வருகைத்தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாக நகர மேயர் சனிக்கிழமை தெரிவித்தார்.
உள்ளூர் வரலாற்றில் சுற்றுலாப் பயணிகளின் மிகப்பெரிய வருகையாக அது இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஏப்ரல் மாதம் 8ஆம் திகதி, முழு சூரியகிரகணம் தோன்ற உள்ளது. கனடாவைப் பொருத்தவரை, நயாகரா நீர்வீழ்ச்சி பகுதியில், 1979ஆம் ஆண்டுக்குப் பிறகு இப்போதுதான் முழு சூரியகிரகணம் தோன்ற உள்ளது.
ஏப்ரல் 8ஆ திகதி, பாடசாலை விடுமுறையளிக்கப்பட உள்ளது. எனவே, வேலைக்குச் செல்லும் பெற்றோர், தங்கள் பிள்ளைகளை பகல் நேர காப்பகங்களில் விட முன்கூட்டியே தயாராகுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்கள்.
சாலைகளில் பயணம் செய்வோர் சூரியகிரகணத்தைப் பார்ப்பதற்காக வாகனங்களை நிறுத்தி வாகனங்களை விட்டு கீழிறங்கவோ, புகைப்படம் எடுக்கவோ வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்கள்.
மேலும், சூரிய கிரகணத்தைப் பார்ப்பவர்கள் ISO 12312-2 தரச்சான்றிதழ் பெற்ற கண்ணாடிகளை அணிந்துகொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.