அறிந்திருக்க வேண்டியவை செய்தி

நிலவில் ரயில் தடம் அமைக்க தயாராகும் அமெரிக்கா – தீவிரமாக முன்னெடுக்கப்படும் பணிகள்

நிலவில் ரயில் தடம் அமைக்க அமெரிக்கா திட்டமிட்டு வருவதாகவும், அதற்கான பணியில் தற்போது தீவிரமாக செயல்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

அமெரிக்க அரசின் பாதுகாப்பு மேம்பட்ட ஆராய்ச்சி திட்ட முகமை (DARPA) இது ஒரு யுனைடெட் ஸ்டேட்ஸ் டிபார்ட்மென்ட் ஏஜென்சி ஆகும். இது நிலவில் ரயில் போக்குவரத்து சேவையை அமைக்க இப்போது நார்த்ரோப் க்ரம்மன் (Northrop Grumman) என்ற தனி ஒரு நிறுவனத்தை தேர்வு செய்துள்ளது. இந்த நிறுவனம்தான் தற்போது நிலவில் எவ்வாறு ரயில் பாதையை அமைக்க திட்டமிடப்போவதாகக் கூறுகின்றனர்.

அமெரிக்கா எவ்வாறு ஒப்புதல் அளித்தது?

சந்திரனில் மனிதர்களுக்கான வாழ்விடத்தை அமைக்க அமெரிக்கா தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது. அந்த வகையில் பத்து ஆண்டிற்குள் நிலவில் ரயில் பாதை அமைக்கத் தேவைப்படும் விஷயங்களை நார்த்ரோப் க்ரம்மன் நிறுவனம் DARPA-விடம் சமர்ப்பிக்க வேண்டும் என்று ஆணையிடப்பட்டுள்ளது. மேலும் இந்த திட்டத்திற்கு ‘லூனா-10’ (LunA-10) என்று பெயரிடப்பட்டுள்ளது. எனவே இத்திட்டத்தின் கீழ் நிலவில் ரயில் பாதையானது அமைக்கும் பணிகள் தீவிரமாக்கப்பட்டு, மனிதர்கள் வாழ்வதற்கான இடமாக மேம்படுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

நிலவில் ரயில் பாதை அவசியமா?

தற்போதைய சூழலில் நிலவில் ரயிலை இயக்கும் இந்த திட்டமானது மிகவும் அனாவசியமென பலரும் நினைக்கலாம். ஆனால் அதற்குப் பின்னால் சில உறுதியான காரணங்கள் இருக்கின்றன என்கிறது அமெரிக்கா. நிலவில் மனிதர்களின் வாழ்வாதரத்தை உறுதியாக உருவாக்க பல விஷயங்களை நாம் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது. சந்திரனின் பரப்பளவானது ஆப்பிரிக்காவிற்கு சமமான அளவைக் கொண்ட மிகப் பெரிய இடமாகும். இத்தகைய விரிவான இடத்திற்கு இடையே பயணிக்க மற்றும் தேவையான பொருட்களை எடுத்து செல்வதற்கு ஒரு பாதுகாப்பான வாகனம் கட்டாயம் நமக்குத் தேவை. இந்த தேவையை ரயிலால் மட்டுமே பூர்த்தி செய்ய முடியும்! அதிலும் குறிப்பாக, நிலவின் தூசியானது மிகவும் கூர்மையாக இருக்கும் எனவே இதிலிருந்து தப்பிக்க இது மிகவும் அவசியம் என்கிறது DARPA.

தண்டவாளம் அமைப்பது…
சந்திரப் பரப்பில் ரயிலின் தண்டவாளம் அமைப்பது சாத்தியமா?

சந்திர பரப்பில் தண்டவாளம் அமைப்பது என்பது சாதாரண விஷயம் இல்லைதான். நமது பூமியில் தண்டவாளத்தை நிலை நிறுத்துவது போல, எளிதாக நிலவில் தண்டவாளம் அமைக்க முடியாது அது கொஞ்சம் கடினம். அப்படியானால், நிலவில் எப்படி தண்டவாளம் அமைக்கப்பட வேண்டும்? எவ்வாறு அமைத்தால் அது மிகவும் உறுதியாக இருக்கும்? அதற்கு நாம் என்ன உலோகத்தை பயன்படுத்தினால் நிலவின் தூசி தண்டவாளத்தையும், ரயிலையும் சேதப்படுத்தாது? என்பது போன்ற தகவல்களை Northrop Grumman நிறுவனம் வழங்க வேண்டும். என அமெரிக்கா கூறியுள்ளது.

திட்டம் எப்பொழுது துவங்கும்?

அமெரிக்க நிறுவனம் இந்த திட்டத்தை உருவாக்க தேவைப்படும் செலவு, நிலவு ரயிலின் மாடல் வடிவமைப்பு, மற்றும் அதை உருவாக்கும் முன் மாதிரிகள் போன்ற பல விஷயங்களை ‘Northrop Grumman’ விரைவில் சமர்ப்பிக்க வேண்டும் என்று கூறியுள்ளது. இந்த தகவல்களை நிறுவனம் வழங்கிய பிறகு, பூமியில் இருந்து நிலவு ரயில் பணிக்கு தேவையான பொருட்கள், ரோபோட்கள் மற்றும் மனிதர்களை அழைத்து செல்லும் திட்டமானது துவங்கும்!

நன்றி – கல்கி

(Visited 6 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி

You cannot copy content of this page

Skip to content