தெல்தெனிய பிரதான வீதியில் மரம் முறிந்து விழுந்து பாரிய விபத்து!
தெல்தெனிய பிரதான வீதியின் வாரபிட்டிய பகுதியில் மரம் ஒன்று முறிந்து விழுந்ததில் கடை ஒன்றும் வாகனங்கள் பலவும் சேதமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
.மரம் முறிந்து விழுந்ததில் வீதியில் சென்ற வான் மற்றும் முச்சக்கர வண்டி ஒன்றும் சேதமடைந்துள்ளது.
இதில் வாகனத்தில் பயணித்த பெண் ஒருவர் உட்பட மூவர் காயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.





