ஷார்ஜாவில் புத்தாண்டு தினத்தன்று பட்டாசு வெடிக்க தடை

2024 புத்தாண்டு தினத்தன்று ஷார்ஜாவில் பட்டாசு வெடிக்க அல்லது கொண்டாட்டங்களுக்கு காவல்துறை தடை விதித்துள்ளது.
போரினால் பாதிக்கப்பட்டுள்ள காசா பகுதியில் பாலஸ்தீனியர்களுடன் ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தடையை மீறுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அனைத்து நிறுவனங்களும் தனிநபர்களும் ஒத்துழைக்குமாறும் பொலிஸார் கோரியுள்ளனர்.
இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான போரின் விளைவாக, காசா பகுதியில் 20,000 க்கும் மேற்பட்ட மக்கள் ஏற்கனவே இறந்துள்ளனர், அவர்களில் எழுபது சதவீதம் பேர் பெண்கள் மற்றும் குழந்தைகள்.
(Visited 20 times, 1 visits today)