இலங்கை மக்களுக்கு விசேட எச்சரிக்கை!
இலங்கையில் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் போன்று வேடமிட்டு பல்வேறு மோசடிச் சம்பவங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இதனால், பொதுமக்களை மிகவும் அவதானத்துடன் நடந்துகொள்ளுமாறும், பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கத்தின் பொருளாளர் டபிள்யூ.டி.ரொஷான்குமார அறிவுறுத்தியுள்ளார்.
இந்நிலையில், பணத்தை அபகரிக்கும் நோக்கில் தொலைபேசி அழைப்புகள் ஏதேனும் வந்தால், அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
அத்துடன் உடனடியாக அருகிலுள்ள பொலிஸ் நிலையத்துக்கு அறிவிக்குமாறும், அவர் மேலும் தெரிவித்தார்.





