ஸ்மார்ட் மோதிரத்தை அறிமுகம் செய்யும் Samsung
உலகின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான சாம்சங் நிறுவனம் ஸ்மார்ட் மோதிரத்தை உருவாக்கியுள்ளது. இந்த மோதிரத்தை இந்தியாவில் விரைவில் விற்பனைக்கு கொண்டு வர இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
உலகின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான சாம்சங் புதுமையான கண்டுபிடிப்புகளை புகுத்த தீவிரவாதம் காட்டி வருகிறது. வர்த்தக போட்டியில் தன்னை முன்னிறுத்திக் கொள்வதற்காக சாம்சங் நிறுவனம் தொடர் முன்னெடுப்புகளை செய்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் தற்போது சாம்சங் நிறுவனம் ஸ்மார்ட் மோதிரத்தை உருவாக்கியுள்ளது.
ஏற்கனவே சாம்சங் நிறுவனம் கணினி, லேப்டாப், டேப்லெட், ஸ்மார்ட்போன், டிவி வீட்டு உபயோக பொருட்கள், ஆக்சசரிஸ், ஸ்மார்ட் வாட்ச் ஆகியவற்றை சந்தையில் அறிமுகப்படுத்தி விற்பனை செய்து வருகிறது. இந்த நிலையில் ஸ்மார்ட் மோதிரத்தைப் புதிதாக அறிமுகப்படுத்த உள்ளது.
சாம்சங் நிறுவனம் உருவாக்கி உள்ள இந்த ஸ்மார்ட் மோதிரம் தற்போது இந்திய மருத்துவ கவுன்சிலினுடைய அனுமதிக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அனுமதி வழங்கப்பட்ட பிறகு இந்தியாவின் சாம்சங் நிறுவனத்தின் ஸ்மார்ட் மோதிரங்கள் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த மோதிரத்தின் வழியாக உடலின் தட்பவெப்ப நிலை, நடக்கும் வேகம், இதயத்துடிப்பு, ரத்தத்தின் சர்க்கரையின் அளவு, ரத்த அழுத்தம் ஆகியவற்றை துல்லியமாக அறிய முடியும் என்றும், இது மட்டுமல்லாது ஸ்மார்ட் மோதிரத்தில் ஸ்மார்ட் வாட்சில் உள்ள பயன்கள் அனைத்தும் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இது சாதாரண மோதிரங்களைப் போன்று தோற்றமளிக்கும் என்றும், ஆனால் பல்வேறு சிறப்பு அம்சங்களை இந்த மோதிரத்தின் மூலம் பயனாளர்கள் பெற முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.