இலங்கை மருத்துவரின் பொறுப்பற்ற செயற்பாடு!

எம்பிலிப்பிட்டிய பொது வைத்தியசாலையின் மயக்க மருந்து நிபுணர் பல நாட்களாக பணிக்கு சமூகமளிக்கவில்லை என தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த சில நாட்களாக மருத்துவமனைக்கு சமூகமளிக்காத அவர், இது குறித்து எவ்வித அறிவித்தலும் வழங்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
கடந்த வெள்ளிக்கிழமை முதல் விசேட வைத்தியர் வைத்தியசாலைக்கு சமூகமளிக்காத காரணத்தினால் எம்பிலிபிட்டிய பொது வைத்தியசாலையில் அவசர சத்திரசிகிச்சைகளை நிறுத்த வேண்டிய நெருக்கடி நிலை உருவாகியுள்ளதாக கூறப்படுகின்றது.
இந்நிலைமை எம்பிலிபிட்டிய பொது வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவு மற்றும் இரண்டு சத்திரசிகிச்சை நிலையங்களுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
(Visited 13 times, 1 visits today)