BRICKS மாநாடு – தென்ஆப்பிரிக்கா சென்ற பிரதமர் மோடி
தென்ஆப்ரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் 15-வது பிரிக்ஸ் உச்சி மாநாடு இன்று தொடங்கி ஆகஸ்ட் 24-ந்தேதி வரை நடக்கிறது.
தென்ஆப்ரிக்க அதிபர் மதமேலா சிரில் ரமபோசாவின் அழைப்பின் பேரில் 15-வது பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார்.
இதையொட்டி இந்தியாவில் இருந்து புறப்பட்ட பிரதமர் மோடி தென்ஆப்ரிக்காவின் ஜொகனெஸ்பர்க் சென்றடைந்தார்.
ஜோகனெஸ்பர்க் விமான நிலையத்தில் பிரதமர் மோடிக்கு இந்திய வம்சாவெளியினர் பிரமான்ட வரவேற்பு அளித்தனர்.
பிரிக்ஸ் உச்சி மாநாட்டின் இடையே, சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் பிரதமர் மோடி சந்திக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
இதைத் தொடர்ந்து, கிரீஸ் பிரதமர் கிரியாகோஸ் மிட்சோடாகிசின் அழைப்பின் பேரில் மோடி அங்கு செல்கிறார். 40 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியப் பிரதமர் ஒருவர் கிரீஸ் செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் 2019-ம் ஆண்டுக்கு பிறகு நடக்கும் முதல் பிரிக்ஸ் உச்சிமாநாடு இதுவாகும். உச்சிமாநாட்டைத் தொடர்ந்து ஆப்பிரிக்கா அவுட்ரீச் மற்றும் பிரிக்ஸ் பிளஸ் உரையாடல் நடைபெறுகிறது.
இதில் தென்ஆப்பிரிக்கா தரப்பிலிருந்து அழைக்கப்பட்ட பிற நாடுகள் கலந்துகொள்ளும். ஜோகன்னஸ்பர்க்கில் இருக்கும் சில தலைவர்களையும் பிரதமர் மோடி சந்திக்கிறார்.