எதிர்காலத்தில் மலிவு விலையில் கிடைக்கும் ஏஐ தொழிநுட்பம்!
AI தொழிநுட்பம் எதிர்காலத்தில், எளிதில் அணுகவும், மலிவு விலையில் கிடைக்கக்கூடியதாகவும் இருக்கும் என மைக்ரோசாப்ட் இணை நிறுவனரான பில்கேட்ஸ் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் சான் டியாகோவில் நடைபெற்ற தொழில்நுட்ப மாநாட்டில் உரையாற்றியபோது, அதன் திறன்கள் குறித்து அற்புதமாக உரையாற்றியபோதே இவ்வாறு கூறினார்.
இதன்போது மேலும் தெரிவித்த அவர், செயற்கை நுண்ணறிவு கருவிகள் அல்லது சாட்போட்கள் ஒரு குழந்தைக்கு 18 மாதங்களுக்குள் படிக்கவும் எழுதவும் கற்றுக்கொடுக்கும் திறனைக் கொண்டுள்ளன எனத் தெரிவித்தார்.
ஏஐ தொழில்நுட்பம் கல்விக்கான தொழில்நுட்பத்தின் முன்னோடியில்லாத பயன்பாடு என விவரித்தார்.
கல்விக்கு பயன்படுத்தக்கூடிய இந்த செயற்கை நுண்ணறிவு கருவிகள் எதிர்காலத்தில் எளிதில் அணுகக்கூடியதாகவும், மலிவு விலையிலும் மாறும் என்று பிக் கேட்ஸ் குறிப்பிட்டுள்ளார்.
கணினிகள் மூலம் எழுதும் திறனைக் கையாள்வது கடினம் என்றாலும், ‘AI சாட்பாட்ஸ்’ அல்லது கணினி செயற்கை நுண்ணறிவு கருவிகள் மனிதர்களைப் போன்ற மொழி வேறுபாடுகளை அடையாளம் காண முடியும் என்பதை பில் கேட்ஸ் ஒரு சிறந்த வளர்ச்சி என்று தெரிவித்தார்.