தாங்க முடியாத வெப்ப அலையால் மெக்சிகோவில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு
மெக்சிகோவில் தாங்க முடியாத வெப்ப அலைகள் காரணமாக குறைந்தது 100 பேர் உயிரிழந்து இருக்கலாம் என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
மெக்சிகோவின் சிலப் பகுதிகளில் கடந்த இரண்டு வாரங்களில் வெப்பம் 50 டிகிரி செல்சியஸ் வரை உயர்ந்த நிலையில், அதிகப்படியான வெப்ப தாக்கம் காரணமாக குறைந்தது 100 பேர் வரை உயிரிழந்து இருக்கலாம் என சுகாதாரத் துறை அமைச்சகம் வியாழக்கிழமை தகவல் தெரிவித்துள்ளது.
அத்துடன் மூன்று வாரகால நீண்ட வெப்ப அலைகள் காரணமாக அதிகப்படியான ஆற்றல் தேவை இருக்கும் நிலையில், ஆற்றல் நிலையங்களை பற்றாக்குறை கஷ்டத்திற்குள் தள்ளப்பட்டுள்ளன.வெப்பம் காரணமாக சில பகுதிகளில் வகுப்புகள் இடைநிறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் நூற்றுக்கணக்கான மெக்சிகன் மக்களை புழுக்கத்திற்குள் தள்ளியுள்ளது.
மூன்றில் இரண்டு பங்கு உயிரிழப்புகள் ஜூன் மாதம் 18 திகதி முதல் 24ம் திகதிக்குள் அதிக வெப்பம் காரணமாக ஏற்பட்டுள்ளது என அமைச்சகம் தெரிவித்துள்ளது.ஆனால் கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் வெப்ப தாக்கம் காரணமாக ஒரே ஒரு உயிரிழப்பு ஏற்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
வெப்ப அலைகள் காரணமாக ஏற்பட்ட உயிரிழப்புகளில் 64% டெக்சாஸ் எல்லையில் உள்ள வடக்கு மாநிலமான நியூவோ லியோனின் ஏற்பட்டுள்ளது, மீதமுள்ள் பெரும்பாலான உயிரிழப்புகள் Tamaulipas மற்றும் Veracruz பகுதிகளில் ஏற்பட்டுள்ளது.ஆனால் கடந்த சில நாட்களாக மழைக்காலம் தொடங்கி மழைப்பொழிவை கொண்டு வருவதால் மெக்சிகோவின் சில பகுதியில் வெப்பநிலை குறைந்துள்ளது.