மேற்கு லண்டனி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் சடலங்களாக மீட்பு
மேற்கு லண்டனில் அமைந்துள்ள குடியிருப்பு ஒன்றில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் சடலங்களாக கண்டெடுக்கப்பட்டுள்ள விடயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு லண்டனிலுள்ள Hounslowவில் அமைந்துள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில், தங்கள் 30 வயதுகளிலிருக்கும் ஒரு ஆணும், ஒரு பெண்ணும், 11 வயது சிறுமி ஒருத்தியும், மூன்று வயது சிறுவன் ஒருவனும் சடலங்களாக கண்டெடுக்கப்பட்டுள்ளனர்.
நேற்று மாலை 3.12 மணியளவில் அந்த வீட்டுக்கு பொலிஸார் அழைக்கப்பட்ட நிலையில், வீட்டின் கதவை உடைத்துக்கொண்டு வீட்டுக்குள் நுழைந்த பொலிஸார் நான்கு பேர் உயிரற்ற நிலையில் கிடப்பதைக் கண்டுள்ளனர்.
பொலிஸார் அவர்களை அடையாளம் காணும் முயற்சியில் இறங்கியுள்ளதுடன், என்ன நடந்தது என்பதை அறிய தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
(Visited 18 times, 1 visits today)





