அரியணையேறுகிறார் தாரிக் ரஹ்மான்: பிரதமர் மோடி வாழ்த்து!
பங்களாதேஷில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் பி.என்.பி. Bangladesh Nationalist Party (BNP) தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றுள்ள நிலையில், பிரதமராக பதவியேற்கவுள்ள தாரிக் ரஹ்மானுக்கு உலக தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துவருகின்றனர்.
பங்களாதேஷில் நேற்று நடைபெற்ற 13வது பொதுத்தேர்தல் நேற்று நடைபெற்றது.
சுமார் 17 ஆண்டுகால வெளிநாட்டு வாழ்க்கைக்குப் பிறகு நாடு திரும்பிய தாரிக் ரஹ்மான் Tarique Rahman தலைமையிலான BNP கூட்டணி மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலத்துடன் வெற்றிபெற்றுள்ளது.
தாரிக் ரஹ்மான் , பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் மறைந்த கலீதா ஜியாவின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இந்திய பிரதமர் மோடி Modi தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
“ பங்களாதேஷ் நாடாளுமன்றத் தேர்தலில் பிஎன்பி கட்சியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்ற தாரிக் ரஹ்மானுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.
இந்த வெற்றி உங்கள் தலைமையின் மீது பங்களாதேஷ் மக்கள் வைத்துள்ள நம்பிக்கையைக் காட்டுகிறது.
ஜனநாயக ரீதியான மற்றும் முற்போக்கான பங்களாதேசுக்கு இந்தியாவின் ஆதரவு என்றும் இருக்கும்.”என்று பதிவிட்டுள்ளார்.
மேலும் இரு நாடுகளுக்கும் இடையிலான பன்முக உறவுகளை வலுப்படுத்த புதிய அரசுடன் இணைந்து பணியாற்ற ஆவலுடன் இருப்பதாக பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்கா உட்பட மேலும் சில நாடுகளும் தாரிக் ரஹ்மானுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளன.





