பிரித்தானியாவின் பிரபல விமான நிலையத்தில் தொழில்நுட்ப கோளாறு!
பிரித்தானியாவின் எடின்பர்க் விமான நிலையத்தின் சேவைகள் இன்று தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தகவல் தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்நிலை ஏற்பட்டுள்ளதாக விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு வழங்குநர் தெரிவித்துள்ளார்.
தொழில்நுட்பக் சிக்கலை விரைவில் தீர்க்க விமான நிலையக் குழுக்கள் பணியாற்றிவருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்த இடைநிறுத்தத்தைத் தொடர்ந்து ஏராளமான பயணங்கள் ரத்து செய்யப்பட்டன அல்லது திருப்பி விடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் தற்போது விமான சேவைகள் மீளவும் வழமைக்கு திரும்பியுள்ளதாக கூறப்படுகிறது.





