அரசாங்கத்தின் மீது வழக்கு தொடர தயாராகும் எதிர்கட்சிகள் : பொன்சேகா விமர்சனம்!
பேரழிவைத் தடுக்கத் தவறியதற்காக அரசாங்கத்தின் மீது வழக்குத் தொடர எதிர்க்கட்சிகள் முன்னெடுத்துள்ள நடவடிக்கை அபத்தமானது என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா கூறினார்.
மேலும், முந்தைய ஆட்சியாளர்கள் ஆட்சியில் இருந்தாலும் நிலைமை அப்படியே இருந்திருக்கும் என்றும் கூறினார்.
கடந்த காலங்களில் வெள்ளம் ஏற்பட்டதாகவும், யார் ஆட்சியில் இருந்தாலும் இறுதி விளைவு ஒன்றுதான் என்றும் அவர் கருத்து வெளியிட்டுள்ளார்.
இந்த முறை மழை மற்றும் வெள்ளம் அதிகமாக இருந்ததாகவும், அதனால் பேரழிவு கடுமையாக இருந்ததாகவும் கூறிய அவர் முந்தைய ஆட்சியாளர்கள் ஆட்சியில் இருந்திருந்தால் நிலைமை அப்படியே இருந்திருக்கும் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையில் வளங்கள், உபகரணங்கள் மற்றும் மனிதவளம் குறைவாக இருப்பதால் யாராலும் அற்புதங்களைச் செய்ய முடியாது எனக் கூறிய அவர் கிடைக்கக்கூடிய வளங்கள், உபகரணங்கள் மற்றும் மனிதவளத்தைக் கொண்டு அரசாங்கம் அதிகபட்சமாகச் செய்ய வேண்டும். யாராவது அதிகமாகச் செய்ய விரும்பினால், அது இங்கே சாத்தியமில்லை. நாங்கள் ஒரு ஏழை நாடு,” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.




