எம்.பிகளின் பாதுகாப்பு அச்சுறுத்தல்களை மதிப்பீடு செய்த பின்னரே பாதுகாப்பு வழங்கப்படும்!
நாடாளுமன்ற உறுப்பினர்கள் பாதுகாப்பு வழங்க கோரிக்கை விடுத்துள்ள நிலையில், அச்சுறுத்தல்களை மதிப்பீடு செய்த பிறகே அந்த கோரிக்கை தொடர்பில் பரிசீலிக்கப்படும் என காவல்துறைத் தலைவர் (ஐ.ஜி.பி) பிரியந்த வீரசூரிய விளக்கமளித்துள்ளார்.
தங்களது தனிப்பட்ட பாதுகாப்பு தொடர்பில் துப்பாக்கிகளை வழங்குமாறு 20 எம்.பிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில் இது தொடர்பில் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் உள்ளாட்சிப் பணியாளர்களுக்கு வெறுமனே கோரிக்கையின் பேரில் காவல்துறையினரின் பாதுகாப்பு வழங்குவது தானியங்கி உரிமை அல்ல என விளக்கமளித்துள்ளார்.
தங்கள் பாதுகாப்பு குறித்து கவலை கொண்ட ஒவ்வொரு நபரும் ஒரு கோரிக்கையை வைக்க வேண்டும் எனக் கூறியுள்ள அவர், அச்சுறுத்தல்களை மதிப்பீடு செய்து அதன்படி பாதுகாப்பு வழங்கப்படும் என தெரிவித்தார்.
எந்த அச்சுறுத்தலும் இல்லை என்றால், நாங்கள் எந்த காவல்துறையினரையும் வழங்க மாட்டோம்” என்று அவர் மேலும் கூறியுள்ளார்.





