ரவி மோகனின் ‘BRO CODE’ படத்திற்கு அதிரடியாக தடை
BRO CODE என்ற பெயரை திரைப்படத்துக்கு பயன்படுத்த ரவிமோகன் ஸ்டுடியோவுக்கு இடைக்கால தடை விதித்தது டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கார்த்திக் யோகி இயக்கத்தில் ரவி மோகன், எஸ்.ஜே.சூர்யா, அர்ஜூன் அசோகன் உள்ளிட்டோருடன் இணைந்து நடிக்கும் புதிய படத்திற்கு ‘BRO CODE” என தலைப்பு வைக்கப்பட்டிருந்தது.

இந்த தலைப்புக்கு எதிராக, இதே பெயரில் மதுபானம் தயாரித்து வரும் ‘இண்டோ-ஸ்பிரிட் பிவரேஜஸ்’ என்ற நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.
முன்னதாக இந்த விவகாரத்தில், சென்னை உயர் நீதிமன்றம் ரவி மோகனுக்கு சாதகமாக உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த நிலையில், மதுபான நிறுவனம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வணிகச்சின்ன மீறல் தொடர்பாக வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி தேஜஸ் கரியா, BRO CODE படத்தின் தலைப்புக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டார்.
மேலும், இந்த மனு குறித்து ரவி மோகன் ஸ்டுடியோஸ் நிறுவனம் 4 வாரங்களுக்குள் பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து, வழக்கின் விசாரணையை டிசம்பர் 23ம் தேதிக்கு ஒத்திவைத்தும் உத்தரவிட்டார்.






