முக்கிய செய்திகள்

ஆஸ்திரேலியாவில் இருந்து இலங்கை வந்த விமானத்தில் உயிரிழந்த பயணி

ஆஸ்திரேலியாவின் மெல்பேர்ன் நகரிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்து கொண்டிருந்த விமானத்தில் பயணி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

திடீரென சுகவீனமடைந்து குறித்த நபர் விமானத்திலேயே உயிரிழந்துள்ளார்.

மெல்பேர்னிலிருந்து நேற்று இரவு 10.35 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமான UL-605 இல் இந்த மரணம் இடம்பெற்றுள்ளது.

விமான நிலையத்திற்கு பொறுப்பான அதிகாரி இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளார்.

மெல்போர்னில் இருந்து விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில், பயணிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.

பின்னர் அவர் விமானத்தில் உயிரிழந்ததையடுத்து விமானத்தை மெல்பேர்ன் விமான நிலையத்திற்கு திருப்பி விடுவதற்கு நடவடிக்கை எடுத்த தீர்மானிக்கப்பட்டது.

எனினும் பதிலாக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு கொண்டு வர விமானிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

சடலம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் விமான நிலைய பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதுடன் சடலம் பிரேத பரிசோதனைக்காக நீர்கொழும்பு பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

(Visited 10 times, 1 visits today)

SR

About Author

You may also like

முக்கிய செய்திகள் வட அமெரிக்கா

அமெரிக்காவில் 3 தமிழர்களுக்கு கிடைத்த கௌரவம் – பைடன் கையெழுத்து

  • April 20, 2023
அமெரிக்காவில் வாழ்நாள் சாதனையாளர் விருது 3 அமெரிக்க வாழ் தமிழர்களுக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. ஹார்வேர்ட் தமிழ் இருக்கை உள்ளிட்ட பல்வேறு தமிழ் சமூதாய பணிகளுக்காக டாக்டர். சம்பந்தம்,
இலங்கை முக்கிய செய்திகள்

இலங்கையில் ஏற்பட்டுள்ள அதிக வெப்பமான காலநிலையால் ஏற்பட்டுள்ள நெருக்கடி

  • April 20, 2023
இலங்கையில் ஏற்பட்டுள்ள அதிக வெப்பமான காலநிலை காரணமாக மக்களின் நாளாந்த நீர் பாவனை சுமார் 10 சத வீதம் அதிகரித்துள்ளது. தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச்
error: Content is protected !!