ஐரோப்பா

பிரான்ஸில் கனமழையால் வெள்ளப்பெருக்கு: 6 நகரங்களுக்கு ரெட் அலர்ட்

பிரான்ஸ் நாட்டில் கனமழையால் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக அந்த நாட்டின் தெற்கு பகுதியில் மழை வெள்ள பாதிப்பு அதிகம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள 6 நகரங்களுக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸ் நாட்டின் மூன்றாவது பெரிய நகரமான லியோன், திரைப்பட விழா நடைபெறும் கான் உள்ளிட்ட நகரங்களும் இந்தப் பட்டியலில் அடங்கும். பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் பத்திரமாக வெளியேற்றப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதோடு நாட்டின் 18 பகுதிகளுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு கருதி சாலைகள் மூடப்பட்டுள்ளன. மேலும், நீர் சூழ்ந்துள்ள இடங்களில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுப்பதன் மூலம் மக்கள் தங்களை ஆபத்துக்கு ஆளாக்கி கொள்ள வேண்டாம் என்றும் அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர். வெள்ளத்தால் உயிரிழப்பு மற்றும் காயம் போன்ற அசம்பாவிதங்கள் எதுவும் பதிவாகவில்லை என தகவல் கிடைத்துள்ளது. இருப்பினும் வெள்ள பாதிப்பு குறித்த தகவல் முறைப்படி வெளியாகவில்லை.

தெற்கு ஐரோப்பாவில் ஒரு வார காலத்துக்கு முன்பு ஏற்பட்ட கிர்க் சூறாவளி பிரான்ஸ் நாட்டில் வெள்ளம் ஏற்பட காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரே இடத்தில் சுமார் 630 மில்லிமீட்டர் மழை வெறும் 48 மணி நேரங்களில் பதிவானதாக பிரான்ஸ் நாட்டு வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மழை வெள்ளம் காரணமாக ஆறுகள் நிரம்பி வழிகின்றன. அர்திஷ் பகுதியில் வெள்ள பாதிப்பு அதிகம் என உள்ளூர் ஊடக நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. நிலைமையை கையாள தீயணைப்பு படையினர், ஹெலிகாப்டர் உள்ளிட்டவை தயாராக உள்ளன. இதோடு நாட்டின் 18 பகுதிகளுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

(Visited 8 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்