செய்தி விளையாட்டு

பிசிசிஐ செயலால் காவ்யா மாறன் சோகம்

ஐபிஎல் மெகா ஏலம் தொடர்பாக பிசிசிஐ அறிவித்த விதிகள் சிஎஸ்கே, மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருந்தாலும், சன்ரைசர்ஸ் போன்ற அணிகளை ஏமாற்றமடைய செய்திருக்கிறது.

சன்ரைசர்ஸ் அணி கடும் போராட்டத்திற்கு பிறகு கடந்த சீசனில் தான் பலமான அணியை உருவாக்கியது.

இதற்காக ஆஸ்திரேலிய டெஸ்ட் அணி கேப்டன் பாட் கம்மின்சை தேர்வு செய்தது. இதனை அடுத்து அந்த அணி ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டு இறுதிப்போட்டி வரை சென்று தோல்வியை தழுவியது.

இதனால் இதே அணியை தொடர வேண்டும் என சன்ரைசர்ஸ் அணியின் உரிமையாளர் காவியா மாறன் எதிர்பார்த்தார்.

இந்த சூழலில் தான் ஐபிஎல் மெகா ஏலம் நடத்தப்படும் என பிசிசிஐ அறிவித்தது. இதனால் கஷ்டப்பட்டு உருவாக்கிய அணி உடைய போகிறது என்ற கலக்கத்தில் இருந்த காவியா மாறன், பிசிசிஐ இடம் அதிகபட்சமாக எட்டு வீரர்கள் தேர்வு செய்யும் வசதியை கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தார்.

இதற்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் உரிமையாளருமான ஷாருக்கான் ஆதரவு வழங்கியிருந்தார்.

எட்டு வீரர்களை தக்க வைத்துக் கொள்வதன் மூலம் சன்ரைசர்ஸ் அணியின் பெரும்பான்மையான வீரர்கள் மீண்டும் தொடர்வார்கள் என்றும் அவர் திட்டம் போட்டு இருந்தார். ஆனால் இதற்கு பிசிசிஐ அனுமதி அளிக்கவில்லை.

எட்டு வீரர்கள் என்ற கோரிக்கையை தூக்கிப் போட்ட பிசிசிஐ அதிகபட்சமாக 6 வீரர்களை தக்க வைத்துக் கொள்ளலாம் என அறிவித்திருக்கிறது.

எனினும் ஆறு வீரர்களை தக்க வைத்துக் கொண்டால் ஏலத்திற்கு செல்லும்போது வெறும் 41 கோடி ரூபாய் தான் கையில் இருக்கும் என்ற ஒரு டிவிஸ்டையும் பிசிசிஐ வைத்திருக்கிறது.

இதனால் கடும் கோபத்தில் காவியா மாறன் இருக்கின்றார். கஷ்டப்பட்டு அணியை உருவாக்கி அதற்கான பலன் கிடைக்கும் நேரத்தில் பிசிசிஐ இவ்வாறு செய்துவிட்டதாக சன்ரைசர்ஸ் அணி நிர்வாகம் குழப்பத்தில் இருக்கிறது.

இதனால் ஆறு வீரர்களை தேர்வு செய்தால் மொத்த பணமும் காலியாகிவிடும் என்றும், இதனால் யாரை தக்க வைப்பது யாரை விடுவது என்று யோசனையில் சன்ரைசர்ஸ் அணி இருக்கிறது.

எனினும் முன்பெல்லாம் இரண்டு வெளிநாட்டு வீரர்களை தான் தக்க வைத்துக் கொள்ள முடியும் என்ற விதி இருந்தது.

ஆனால் சன்ரைசர்ஸ் அணிக்கு சாதகமாக இருக்கும் வகையில் எத்தனை வெளிநாட்டு வீரர்களை வேண்டுமானாலும் தக்க வைத்துக் கொள்ளலாம் என்ற விதியை பிசிசியை வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

(Visited 56 times, 1 visits today)

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!