செய்தி விளையாட்டு

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து முக்கிய இங்கிலாந்து வீரர் விலகல்

இலங்கை கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது.

இந்த தொடர் வரும் 21ம் தேதி தொடங்குகிறது. இந்த தொடரின் போட்டிகள் முறையே மான்செஸ்டர், லார்ட்ஸ் , கென்னிங்டன் ஓவல் ஆகிய மைதானங்களில் நடைபெறுகிறது.

இந்நிலையில் இந்த தொடரில் இருந்து இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் விலகி உள்ளதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் தி ஹண்ட்ரெட் தொடரில் நடைபெற்ற ஆட்டத்தில் ஸ்டோக்ஸ்-க்கு இடது தொடையில் காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக அவர் இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாட மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவருக்கு பதிலாக இலங்கை தொடரில் மாற்று வீரர் சேர்க்க மாட்டார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பென் ஸ்டோக்ஸ் இல்லாததால் இலங்கை தொடரில் ஆலி போப் கேப்டனாக செயல்படுவார் என இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

 

(Visited 30 times, 1 visits today)

KP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
Skip to content